MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • லைசன்ஸ் தேவையில்லை.. 85 கிமீ ரேஞ்ச் கொடுக்கும் எலக்ட்ரிக் சைக்கிள்.. விலை எவ்வளவு?

லைசன்ஸ் தேவையில்லை.. 85 கிமீ ரேஞ்ச் கொடுக்கும் எலக்ட்ரிக் சைக்கிள்.. விலை எவ்வளவு?

E-Motorrad நிறுவனம் 'Viper' என்ற புதிய மின்சார சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. NFC அன்லாக்கிங், டூயல் சஸ்பென்ஷன், மற்றும் 85 கிமீ ரேஞ்ச் போன்ற நவீன அம்சங்களுடன் வரும் இந்த சைக்கிளுக்கு பதிவு அல்லது ஓட்டுநர் உரிமம் தேவையில்லை.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 25 2026, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
லைசன்ஸ் தேவையில்லை
Image Credit : Google

லைசன்ஸ் தேவையில்லை

நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, எரிபொருள் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மாற்று பயண வசதிகளுக்கு மக்கள் அதிகமாக திரும்பி வருகின்றனர். அந்த வரிசையில், மின்சார சைக்கிள்களுக்கு (e-cycle) நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை மனதில் வைத்து, E-Motorrad நிறுவனம் ‘Viper’ என்ற புதிய மின்சார சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.66,999 என்ற ஆரம்ப விலையில் இந்த மாடல், நகரப் பயணங்களுக்கும், சிறிய அளவிலான ஆஃப்-ரோட் சாலைகளுக்கும் ஏற்றதாக உள்ளது. இந்த Viper Electric Bicycle மாடலில் 48V 250W ரயர் ஹப் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. அதோடு 15.6Ah திறன் கொண்ட ‘ரிமூவேபிள்’ பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.

24
புதிய எலக்ட்ரிக் சைக்கிள்
Image Credit : Google

புதிய எலக்ட்ரிக் சைக்கிள்

இதனால் பேட்டரியை சைக்கிளில் இருந்து எளிதாக அகற்றி வீட்டிலோ அலுவலகத்திலோ சார்ஜ் செய்யலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், Pedal Assist முறையில் 85 கிமீ வரை பயணம் செய்ய முடியும். த்ரோட்டில் முறையில் (பெடல் இல்லாமல்) சுமார் 70 கிமீ வரை செல்லும் திறன் உள்ளது. தொழில்நுட்ப வசதிகளில் இந்த சைக்கிள் ஒரு புதிய அளவுகோலை நிர்ணயிக்கிறது. வழக்கமான சாவி முறைக்கு பதிலாக NFC Unlocking வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்மார்ட் கார்டு அல்லது மொபைல் மூலம் சைக்கிளை திறக்க முடியும். பயண வேகம், பேட்டரி நிலை, மற்றும் மற்ற விவரங்கள் அறிய தெளிவான டிஜிட்டல் டிஸ்ப்ளேவும் இதில் உள்ளது. இது தினசரி பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Related Articles

Related image1
ராயல் என்ஃபீல்டு விற்பனை விவரம்: எந்த பைக் அதிகம் விற்றது தெரியுமா?
Related image2
Business Idea: உங்க கார் மூலமா மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்... இத செஞ்சா போதும்!
34
நகரப் பயணத்திற்கு சரியான தேர்வு
Image Credit : Google

நகரப் பயணத்திற்கு சரியான தேர்வு

இந்திய சாலைகளின் தன்மையை கருத்தில் கொண்டு, வைப்பர்-ல் முன் மற்றும் பின்புறம் 'டூயல் சஸ்பென்ஷன்' அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் குழிகள் நிறைந்த சாலைகளிலும் சீரான பயணம் கிடைக்கும். பாதுகாப்புக்காக ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அகலமான டயர்கள் ஈரமான சாலைகளிலும் நல்ல பிடிப்பை வழங்குகின்றன. 7-ஸ்பீட் ஷிமானோ கியர் அமைப்பு சாலையின் தன்மைக்கு ஏற்ப பயணத்தை எளிதாக்குகிறது.

44
பெட்ரோல் செலவு இல்லாமல் பயணம்
Image Credit : Google

பெட்ரோல் செலவு இல்லாமல் பயணம்

மின்சார சைக்கிள்களின் மிகப்பெரிய பலன், பதிவு அல்லது ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்தால் போதும். குறைந்த செலவில், ஒரு கிலோமீட்டருக்கு சில காசுகள் மட்டுமே செலவாகும். அதிகபட்சம் 110 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்ட இந்த வைப்பர், அலுவலகப் பயணம், டெலிவரி வேலைகள் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு ஏற்ற முழுமையான தீர்வாக பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fortuner 2026: கெத்து காட்ட வரும் புதிய ஃபார்ச்சூனர்... என்னவெல்லாம் மாறப்போகுது?
Recommended image2
16 மாதங்களில் விற்பனை இரட்டிப்பு.. 6 லட்சம் விற்பனையான ஸ்கூட்டர் எது தெரியுமா?
Recommended image3
டஸ்டர் பின் புதிய அதிரடி… Bridger SUV மூலம் ரெனால்ட் இந்தியாவில் மீண்டும் வரவு
Related Stories
Recommended image1
ராயல் என்ஃபீல்டு விற்பனை விவரம்: எந்த பைக் அதிகம் விற்றது தெரியுமா?
Recommended image2
Business Idea: உங்க கார் மூலமா மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்... இத செஞ்சா போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved