MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Toyota : ஹூண்டாய், டாடாவுக்கு செக் வைக்க நச்சுனு 2 புதிய 7 சீட்டர் கார்களை களமிறக்கும் டொயோட்டா..!

Toyota : ஹூண்டாய், டாடாவுக்கு செக் வைக்க நச்சுனு 2 புதிய 7 சீட்டர் கார்களை களமிறக்கும் டொயோட்டா..!

Toyota New 7 Seater SUV : டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய 7-சீட்டர் SUV-க்களை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய டிசைன், ஹைபிரிட் இன்ஜின் என பல அசத்தலான அப்டேட்களுடன் இந்த கார்கள் வரவிருக்கின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 01 2026, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Toyota to Launch New 7 Seater SUV
Image Credit : Toyota

Toyota to Launch New 7 Seater SUV

புதுசா ஒரு டொயோட்டா கார் வாங்க பிளான்ல இருந்தீங்கன்னா, உங்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ் இருக்கு. டொயோட்டா நிறுவனம் விரைவில் இரண்டு புதிய 7-சீட்டர் SUV கார்களை இந்தியாவில் களமிறக்கப் போகிறது. ஒன்று, டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடரின் 7-சீட்டர் மாடல், மற்றொன்று அடுத்த தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர். இந்த இரண்டு கார்களின் சோதனைகளும் தற்போது நடந்து வருகிறது.

சமீபத்தில், இந்த கார்களின் ஸ்பை ஷாட்ஸ் (சோதனையின்போது எடுக்கப்பட்ட படங்கள்) வெளியாகி, கார் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த இரண்டு SUV-க்களையும் டொயோட்டா கொண்டு வர உள்ளது. சரி, இந்த கார்களில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குன்னு விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
7-சீட்டர் டொயோட்டா ஹைரைடர்
Image Credit : Toyota

7-சீட்டர் டொயோட்டா ஹைரைடர்

டொயோட்டாவின் பிரபலமான அர்பன் குரூஸர் ஹைரைடர் காரின் 7-சீட்டர் வெர்ஷனை நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இது ஒரு பெரிய குடும்பங்களுக்கான SUV ஆக இருக்கும். இந்த ஆண்டு இரண்டாம் பாதியில், பண்டிகைக் காலத்தில் இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் சோதனை ஓட்டப் படங்கள் பலமுறை இணையத்தில் கசிந்துள்ளன. அதன்படி, காரின் பக்கவாட்டுத் தோற்றம் நீளமாகவும், பின்பக்கம் சற்று பெரிதாகவும் இருக்கும் எனத் தெரிகிறது.

இன்ஜினைப் பொறுத்தவரை, தற்போதைய ஹைரைடரில் உள்ள அதே ஆப்ஷன்கள்தான் இதிலும் கொடுக்கப்படும். இதில், 103 bhp பவரை உருவாக்கும் 1.5 லிட்டர் மைல்டு-ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் ஒன்று. மற்றொன்று, 116 bhp பவரை வெளிப்படுத்தும் ஒரு ஸ்ட்ராங்-ஹைபிரிட் இன்ஜின். ஆல்-வீல் டிரைவ் சிஸ்டமும் இதில் வழங்கப்படும். இதன் விலை சுமார் ரூ.16 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
அதிக மைலேஜ்.. புதுப்பொலிவு! டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அதிரடி என்ட்ரி!
Related image2
Toyota : கம்மி விலையில் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்... மாருதியை தொடர்ந்து கோதாவில் இறங்கிய டொயோட்டா..!
34
அடுத்த தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர்
Image Credit : TOYOTA

அடுத்த தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர்

புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர், 2026-ஆம் ஆண்டின் மத்தியில் உலகளவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 2026 இறுதியில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம். இந்த புதிய மாடலின் விலை ரூ.36 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை இருக்கலாம். புதிய ஃபார்ச்சூனர், மேம்படுத்தப்பட்ட IMV லேடர்-ஃபிரேம் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும்.

இதன் கட்டமைப்பு, அடுத்த தலைமுறை ஹிலக்ஸ் (Hilux) காரை போலவே இருக்கும். காரின் பின்பக்கத்தில் புதிய LED டெயில் லைட்கள், கனெக்டட் லைட் பார் மற்றும் புதிய பம்பர் ஆகியவை இடம்பெறும். முன்பக்கத்தில், ஷார்ப்பான LED ஹெட்லேம்ப்ஸ், பெரிய கிரில் மற்றும் ஸ்போர்ட்டியான பம்பர் ஆகியவை கொடுக்கப்படும்.

44
அப்டேட் ஆகும் ஃபார்ச்சூனர்
Image Credit : Toyota

அப்டேட் ஆகும் ஃபார்ச்சூனர்

புதிய ஃபார்ச்சூனரின் உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ADAS பாதுகாப்பு அம்சங்கள், OTA (Over-The-Air) அப்டேட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்றவை இதில் இடம்பெறலாம். இன்ஜின் ஆப்ஷன்கள் தற்போதைய மாடலில் உள்ளதைப் போலவே தொடரும். இதனுடன், 48V மைல்டு-ஹைபிரிட் டீசல் இன்ஜின் ஆப்ஷனையும் நிறுவனம் வழங்கக்கூடும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டொயோட்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே இன்ஜின், ஒரே விலை... Bullet 650, Classic 650 வித்தியாசம் என்ன?
Recommended image2
Tata EV Comparison: டாடா EV யுத்தம்: 10 லட்ச ரூபாயில் பன்ச் EV பெஸ்ட்டா? டியாகோ EV பெஸ்ட்டா?
Recommended image3
மாருதியின் புதிய 7 சீட்டர் கார் வருது.. XUV700, Safariக்கு புதிய போட்டியா?
Related Stories
Recommended image1
அதிக மைலேஜ்.. புதுப்பொலிவு! டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அதிரடி என்ட்ரி!
Recommended image2
Toyota : கம்மி விலையில் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்... மாருதியை தொடர்ந்து கோதாவில் இறங்கிய டொயோட்டா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved