MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • உங்கள் கனவு காரை நனவாக்க சூப்பர் சான்ஸ்.. ரூ.1.24 லட்சம் வரை தள்ளுபடி.. டொயோட்டோவின் மெகா ஆபர்!

உங்கள் கனவு காரை நனவாக்க சூப்பர் சான்ஸ்.. ரூ.1.24 லட்சம் வரை தள்ளுபடி.. டொயோட்டோவின் மெகா ஆபர்!

இந்த டொயோட்டா கார் ஒரு லிட்டருக்கு சுமார் 25.49 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது. சொகுசு கார்களை பொறுத்தவரை இது மிகச்சிறந்த மைலேஜ் ஆகும்.

1 Min read
Author : Rayar r
Published : Feb 17 2026, 11:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டொயோட்டா கேம்ரி காருக்கு சலுகை
Image Credit : x

டொயோட்டா கேம்ரி காருக்கு சலுகை

இந்தியாவில் டொயோட்டோ கார்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். நீங்கள் ஒரு பிரீமியம் செடான் வாங்க திட்டமிட்டால் உங்களுக்கு டொயோட்டா கேம்ரி கார் சிறந்த தேர்வாக இருக்கும். அதுவும் இந்த பிப்ரவரியில் டொயோட்டா கேம்ரி வாங்கினால் ரூ.1.24 லட்சம் வரை சேமிக்கலாம். 

இந்த மாத கேம்ரி சலுகைகளில் எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி பலன்கள், கார்ப்பரேட் திட்டங்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆகியவை அடங்கும். இந்த சலுகைகளின் மொத்தப் பலன்கள் ரூ.1.24 லட்சம் வரை இருக்கும்.

23
ஹைப்ரிட் தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்றது
Image Credit : Google

ஹைப்ரிட் தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்றது

நீட்டிக்கப்பட்ட வாரண்டி நீண்ட கால பராமரிப்புச் செலவுகளைக் குறைக்க உதவுகிறது. ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் சொகுசு மற்றும் வசதியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான இந்தச் சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. 

ஆகவே உங்கள் ஷோரூமில் ஸ்டாக் இருப்பை சரிபார்க்கவும். டொயோட்டா கேம்ரி சிறப்பம்சங்களை பார்த்தால் இந்த கார் மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்துடன் மென்மையான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்றது.

என்னென்ன வசதிகள்? 

இது பிரீமியம் மற்றும் வசதியான கேபின், பல மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எக்ஸிகியூட்டிவ்-கிளாஸ் பயணத் தரத்தையும் வழங்குகிறது. இது எரிபொருள் சிக்கனம் மற்றும் சொகுசை விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்த 'ஸ்ட்ராங் ஹைப்ரிட்' அம்சம் கொண்ட 2.5 லிட்டர் டைனமிக் ஃபோர்ஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
அடேங்கப்பா 34 கிமீ மைலேஜ்.. வெறும் ரூ.4.7 லட்சத்தில்..! பட்ஜெட் விலையில் கிடைக்கும் மைலேஜ் கார்கள்
Related image2
பெண்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள்; குறைந்த எடை, சிறந்த மைலேஜ்
33
எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது?
Image Credit : Toyota website

எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது?

இந்த கார் ஒரு லிட்டருக்கு சுமார் 25.49 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது. சொகுசு கார்களை பொறுத்தவரை இது மிகச்சிறந்த மைலேஜ் ஆகும். மேலும் சிறப்பம்சமாக ஆர்ம்ரெஸ்டில் உள்ள டச் பேனல் மூலம் காரின் ஏசி அளவு மற்றும் சவுண்ட் சிஸ்டத்தை கன்ட்ரோல் செய்ய முடியும். 

9 ஏர் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புக்கு பஞ்சமில்லை. ADAS தொழில்நுட்பம், 360-டிகிரி கேமரா என மற்ற பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டொயோட்டா கார்கள்
டொயோட்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
குடும்ப பாதுகாப்புக்கு இந்த 4 கார்கள் மாஸ் காட்டுது.. 5 ஸ்டார் ரேட்டிங் இருக்கு மக்களே
Recommended image2
ஹூண்டாய் கார்கள் மீது ரூ.73,000 வரை தள்ளுபடி.. பிப்ரவரி மாத அதிரடி சலுகை
Recommended image3
ரூ.4.30 லட்சத்தில் மலிவு விலை கார்.. மாருதி ஆல்டோவுக்கு போட்டி.. இந்திய மக்கள் வெயிட்டிங்
Related Stories
Recommended image1
அடேங்கப்பா 34 கிமீ மைலேஜ்.. வெறும் ரூ.4.7 லட்சத்தில்..! பட்ஜெட் விலையில் கிடைக்கும் மைலேஜ் கார்கள்
Recommended image2
பெண்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள்; குறைந்த எடை, சிறந்த மைலேஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved