- Home
- Auto
- Budget Cars: லிட்டருக்கு 28 கி.மீ மைலேஜ்: நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற 5 பெஸ்ட் கார்கள்!
Budget Cars: லிட்டருக்கு 28 கி.மீ மைலேஜ்: நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற 5 பெஸ்ட் கார்கள்!
பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் கார்களில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்கள் எவை? உங்கள் பணத்தை மிச்சப்படுத்த உதவும் சிறந்த கார்களின் லிஸ்ட்களை பற்றி பார்போம்.

28 கி.மீ மைலேஜ் தரும் கார்கள்
இந்தியாவில் அதிக மைலேஜ் கொண்ட கார்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்திய மார்க்கெட்டில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் இப்படியாக அதிக மைலேஜ் தரும் வாகனங்களைத் தயாரித்து வருகின்றன. இந்த வகையில் இந்தியாவில் மைலேஜ் அதிகமாகத் தரும் பெட்ரோல், டீசல், ஹைபிரிட் ஆகிய கார்களின் டாப் 5 பட்டியலை பற்றி பார்போம்.
மாருதி டிசையர்
மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் அதிகம் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் 1.3 லிட்டர் 3 சிலிண்டர் இசட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 எச்பி பவரையும், 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வரும் வேரியன்ட் 25.71 கி.மீ மைலேஜை வழங்குகிறது.
மாருதி ஸ்விஃப்ட்
மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரும் அதிக மைலேஜ் தரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தக் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்தக் கார் ஏஎம்டியில் 25.75 கி.மீ மைலேஜையும், மேனுவல் கியரில் 24.8 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.
மாருதி செலிரியோ
மாருதி நிறுவனத்தின் செலிரியோ கார் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தக் காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கார் எல்எக்ஸ்ஐ மேனுவல் வேரியன்டில் 25.24 கி.மீ மைலேஜையும், மிட் மற்றும் டாப் வேரியன்டில் 24.97 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. ஏஎம்டி வேரியன்டில் 26 கி.மீ வரை மைலேஜ் தரும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி எச்இவி
செடான் காரில் அதிக மைலேஜ் தரும் கார் ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி ஹைபிரிட் கார் ஆகும். கார் 27.26 கி.மீ மைலேஜ் தரும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 100 எச்பி பவரையும், 131 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்தக் கார் இ20 பெட்ரோலை ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்ஜினை கொண்டுள்ளது.
டொயோட்டா ஹைரைடர் / மாருதி கிராண்ட் விட்டாரா
மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களின் மைலேஜ் அதிகமாக இருக்கிறது. இரண்டு கார்களும் ஒரே தொழில்நுட்பத்தைத்தான் பகிர்ந்து கொள்கின்றன. இந்தக் காரில் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்தக் கார் 27.97 கி.மீ மைலேஜை வழங்குகிறது. டொயோட்டா மற்றும் சுஸூகி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே சர்வதேச அளவில் உள்ள ஒப்பந்தம் காரணமாக கார்கள் பகிரப்படுகின்றன. இதனால் இரு நிறுவனங்களும் ஒரே தொழில்நுட்பம் கொண்ட கார்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தக் கார்கள் மார்க்கெட்டில் நல்ல மதித்தைப் பெற்றுள்ளது.

