- Home
- Auto
- Top 5 CNG Cars: பணத்தை மிச்சப்படுத்த சூப்பர் சான்ஸ்.. மைலேஜ் தரும் சிஎன்ஜி டாப் 5 கார்கள்! இதோ விலை பட்டியல்!
Top 5 CNG Cars: பணத்தை மிச்சப்படுத்த சூப்பர் சான்ஸ்.. மைலேஜ் தரும் சிஎன்ஜி டாப் 5 கார்கள்! இதோ விலை பட்டியல்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் இன்றைய சூழலில், சிக்கனமான பயணத்தை விரும்புபவர்களுக்கு சிஎன்ஜி (CNG - Compressed Natural Gas) கார்கள் ஒரு வரப்பிரசாதம். இதன் காரணமாக சிஎன்ஜி கார்களுக்கு மவுசு கூடி வருகிறது.
18

Image Credit : maruti
சிஎன்ஜி கார்களுக்கு அதிகரிக்கும் மவுசு
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் குறைந்த செலவில் அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்களின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
28
Image Credit : google
அசத்தலான மைலேஜ்
ஹைப்ரிட், எலக்ட்ரிக் கார்களின் ஆரம்ப விலை அதிகம். அதனால், பலருக்கும் சிஎன்ஜி கார்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 30 கி.மீ.க்கு மேல் மைலேஜ் தரும் கார்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.
38
Image Credit : maruti suzuki
மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்கள்
சிஎன்ஜி கார் செக்மென்ட்டில் மாருதி சுஸுகிதான் முன்னணியில் உள்ளது. குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் பல ஹேட்ச்பேக், செடான் மாடல்களை இந்நிறுவனம் வைத்துள்ளது. கிலோவுக்கு 34 கி.மீ. வரை மைலேஜ் தரும் 5 கார்களைப் பற்றிப் இங்கே பார்ப்போம்.
48
Image Credit : maruti suzuki
மாருதி சுஸுகி செலிரியோ சிஎன்ஜி
இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் கார்களில் இதுவும் ஒன்று. செலிரியோ VXI சிஎன்ஜி மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 5.98 லட்சம். இது ஒரு கிலோவுக்கு 34.43 கி.மீ. வரை மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.
58
Image Credit : Maruti Suzuki
ஆல்டோ கே10 மற்றும் டிசையர் சிஎன்ஜி
நாட்டின் மலிவு விலை சிஎன்ஜி கார்களில் ஆல்டோ கே10 சிஎன்ஜியும் ஒன்று. இதன் LXI S-CNG விலை ரூ. 4.82 லட்சம், VXI S-CNG விலை ரூ. 5.32 லட்சம். இதன் மைலேஜ் கிலோவுக்கு 33.85 கி.மீ. செடான் கார் விரும்புபவர்களுக்கு டிசையர் சிஎன்ஜி ஒரு நல்ல சாய்ஸ். இதன் VXI சிஎன்ஜி விலை ரூ. 8.03 லட்சம், ZXI சிஎன்ஜி விலை ரூ. 9.04 லட்சம். இதன் மைலேஜ் கிலோவுக்கு 33 கி.மீ.
68
Image Credit : Maruti Suzuki
வேகன் ஆர் சிஎன்ஜி
வேகன் ஆர் சிஎன்ஜி, குடும்பங்களுக்கு ஏற்ற ஒரு மாடல். இதன் LXI சிஎன்ஜி வேரியன்ட்டின் விலை ரூ. 5.89 லட்சம், VXI சிஎன்ஜி வேரியன்ட்டின் விலை ரூ. 6.42 லட்சம். இது ஒரு கிலோவுக்கு 34 கி.மீ. மைலேஜ் தருகிறது.
78
Image Credit : Google
ஸ்விஃப்ட் சிஎன்ஜி
ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில், ஸ்விஃப்ட் சிஎன்ஜி மாடல் அனைவரையும் ஈர்க்கிறது. இதன் VXI சிஎன்ஜி வேரியன்ட்டின் விலை ரூ. 7.45 லட்சத்தில் தொடங்குகிறது. இது ஒரு கிலோவுக்கு 32 கி.மீ. வரை மைலேஜ் தருகிறது.
88
Image Credit : Generated by google gemini AI
தினசரி பயணச் செலவு குறையும்
குறைந்த செலவில் அதிக செயல்திறனை வழங்கும் இந்த சிஎன்ஜி கார்கள், தினசரி பயணச் செலவைக் குறைக்க நினைப்பவர்களுக்குச் சிறந்த தேர்வாகும்.
Latest Videos

