Top 5 SUVs: பட்ஜெட் விலை டூ பிரீமியம் லுக்! இந்தியாவை கலக்கும் டாப் 5 கார்கள்!
Top 5 SUVs: இந்தியாவில் SUV கார்களுக்கு செம டிமாண்ட் நிலவி வருகிறது. நீங்களும் ஒரு புதிய SUV வாங்க திட்டமிட்டிருந்தால், நாட்டின் மிகவும் பிரபலமான சில டீசல் SUV-களைப் பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner)
இந்தியாவின் மிகவும் பிரபலமான SUV-களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மார்க்கெட்டில் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது. ஃபார்ச்சூனரில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் இருந்தாலும், டீசல் இன்ஜின்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதில் உள்ள 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின், சுமார் 201 bhp பவரையும் 500 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 மற்றும் 4x4 ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.37.61 லட்சம்.

இசுஸு MU-X (Isuzu MU-X)
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இசுஸு MU-X-க்கு பெரிய வரவேற்பு இல்லை என்றாலும், இது மிகவும் நம்பகமான ஒரு SUV ஆகும். இதில் 1.9 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சுமார் 161 bhp பவரையும் 360 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. இசுஸு MU-X மாடலும் 4x2 மற்றும் 4x4 ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.34.53 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio)
அதிக இடவசதி, குறைவான விலை மற்றும் 4x4 ஆப்ஷன் போன்ற காரணங்களால் மஹிந்திரா ஸ்கார்பியோ மிக விரைவாகவே பிரபலமடைந்தது. இது 7-சீட்டர் வேரியண்டிலும், 4x2 மற்றும் 4x4 ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இதனால், குடும்பத்துடன் புதிய இடங்களுக்குப் பயணம் செய்ய இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. இதில் உள்ள 2.2 லிட்டர் mHawk டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின், 172 bhp பவரையும் 400 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.49 லட்சம்.
டாடா சஃபாரி (Tata Safari)
டாடா சஃபாரி ஒரு 7-சீட்டர், மூன்று வரிசை கொண்ட SUV. இதில் ஜீப் மெரிடியனில் உள்ள அதே 2.0 லிட்டர் மல்டிஜெட் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் 167.67 bhp பவரையும் 350 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. டாடா சஃபாரி டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ.19.09 லட்சம்.
ஜீப் மெரிடியன் (Jeep Meridian)
அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஜீப்பின் இந்த 7-சீட்டர், மூன்று வரிசை SUV, பிரீமியம் SUV பிரிவில் ஒரு சிறந்த பட்ஜெட் தேர்வாக உள்ளது. இதில் உள்ள 2.0 லிட்டர் மல்டிஜெட் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின், 167.67 bhp பவரையும் 350 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த SUV, 9-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. மேலும், 4x2 மற்றும் 4x4 ஆப்ஷன்களும் இதில் வழங்கப்படுகின்றன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.27.18 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

