30கிமீ மைலேஜ்: ஸ்கூட்டரை விடவும் இது தான் பெஸ்ட்! அதிக மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள்
சிறந்த 5 CNG எரிபொருள் திறன் கொண்ட கார்: அருமையான மைலேஜ் தரும் 5 CNG கார்கள் பற்றி இங்கே பார்க்கலாம். இந்த கார்கள் ஒரு கிலோ எரிவாயுவில் நீண்ட தூரம் பயணிக்க முடியும். இதில் மாருதி சுசுகி முதல் டாடா மோட்டார்ஸ் வரையிலான கார்கள் உள்ளன.

சிறந்த மைலேஜ் தரும் 5 CNG கார்கள்
CNG கார்களுக்கான தேவை நாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல்/டீசலுக்கு மாற்றாக CNG கார்களையும் சந்தையில் பல நிறுவனங்கள் வழங்குகின்றன. CNG மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல், சிறந்த மைலேஜையும் வழங்குகிறது. சிறந்த சராசரி மைலேஜ் தரும் 5 CNG கார்கள் எவை என்று பார்ப்போம்.
Maruti Baleno CNG (மாருதி பலேனோ சிஎன்ஜி)
மாருதி பலேனோவுக்கு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக தேவை உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம் முதல் ரூ.9.41 லட்சம் வரை உள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல்/CNG எஞ்சின் விருப்பம் உள்ளது. CNG வேரியண்ட்டில் இந்த கார் 30 கிமீ/கிலோ மைலேஜ் தரும்.
Toyota Glanza CNG (டொயோட்டா கிளான்சா சிஎன்ஜி)
டொயோட்டா க்ளான்ஸா CNGயின் ஆரம்ப விலை ரூ.8.81 லட்சம், அதன் உயர் ரக விலை ரூ.9.80 லட்சம். இந்த காரில் பலேனோவைப் போலவே 1.2 லிட்டர் பெட்ரோல்/CNG எஞ்சின் உள்ளது. CNG வேரியண்ட்டில் இந்த கார் 30 கிமீ/கிலோ வரை மைலேஜ் தரும்.
Maruti Fronx CNG (மாருதி பிராங்க்ஸ் சிஎன்ஜி)
இந்த பட்டியலில் மாருதி சுசுகி காரின் பெயர் இல்லாமல் இருக்க முடியாது. மாருதி ஃப்ரோன்க்ஸ் காரின் ஆரம்ப விலை ரூ.8.54 லட்சம் முதல் ரூ.9.40 லட்சம் வரை. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல்/CNG எஞ்சின் உள்ளது. இந்த கார் CNG வேரியண்ட்டில் 28.51 கிமீ/கிலோ மைலேஜ் தரும்.
Hyundai Exter CNG (ஹூண்டாய் எக்ஸ்டெர் சிஎன்ஜி)
ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களும் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதில் ஹூண்டாய் எக்ஸ்டர் CNGயும் ஒன்று. இதன் ஆரம்ப விலை ரூ.7.51 லட்சம் முதல் ரூ.9.53 லட்சம் வரை. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல்/CNG எஞ்சின் உள்ளது. CNG வேரியண்ட்டில் இந்த கார் 27.10 கிமீ/கிலோ மைலேஜ் தரும்.
Tata Punch (டாடா பஞ்ச்)
டாடா மோட்டார்ஸின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றான டாடா பஞ்ச் CNG இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.7.30 லட்சம் முதல் ரூ.10.17 லட்சம் வரை. இந்த காரில் 1.2 லிட்டர் CNG/பெட்ரோல் எஞ்சின் உள்ளது. CNG வேரியண்ட் காரின் மைலேஜ் 27 கிமீ/கிலோ.