புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு நீங்கள்.. அப்படினா.. சிறந்த 5 கார்கள் இதுதான்!
Top 5 Best Cars for New Drivers: இந்தியாவில் புதிய ஓட்டுநர்களுக்கு ஏற்ற சிறந்த கார்களின் பட்டியல் இது. ஹூண்டாய் வென்யூ, டாடா டியாகோ, மாருதி ஸ்விஃப்ட் உள்ளிட்ட கார்கள் உள்ளன.

ஹூண்டாய் வென்யூ
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ஹூண்டாய் வென்யூ. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் இந்த காரை சுலபமாக ஓட்டலாம். அதிக சக்தி விரும்புபவர்களுக்கு டர்போ இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது.
டாடா டியாகோ
டாடாவின் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று டியாகோ. குளோபல் NCAP பாதுகாப்பு சோதனையில் 4 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் நெரிசலான சாலைகளில் எளிதாக கையாள முடிவது இதன் சிறப்பு அம்சமாகும்.
மாருதி ஸ்விஃப்ட்
மாருதியின் பிரபலமான மாடல்களில் ஒன்று ஸ்விஃப்ட். புதியவர்களுக்கு ஏற்ற கார். இதன் தோற்றமும் ஸ்டைலும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இது எளிதாக கையாளக்கூடிய வாகனம். மாருதியின் நம்பகத்தன்மை மற்றும் பரந்த சர்வீஸ் நெட்வொர்க் வாடிக்கையாளர்களை கொண்டது.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
ஸ்டைல், பயண சுகம் மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றின் கலவை ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ். எளிதாக கையாளக்கூடிய ஸ்டீயரிங், சிறிய அளவு, ஸ்மூத்தான பெட்ரோல் இன்ஜின் ஆகியவை இதை புதியவர்களுக்கு ஏற்றதாக மாற்றுகிறது. சிஎன்ஜி பொருத்தப்பட்டது.
டாடா பஞ்ச்
புதியவர்கள் வாங்குவதற்கு ஏற்ற மற்றொரு வாகனம் டாடா பஞ்ச். மைக்ரோ-எஸ்யூவி பிரிவில் வரும் இந்த காருக்கு அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இதன் கமாண்டிங் டிரைவிங் பொசிஷன் மற்றொரு சிறப்பாகும். நகரங்களில் சிரமமின்றி ஓட்டலாம்.

