டாடா பஞ்ச் EV முதல் டியாகோ EV: சிறந்த 5 எலக்ட்ரிக் கார்கள்
இந்தியாவில் கிடைக்கும் சிறந்த, விலை குறைந்த எலக்ட்ரிக் கார்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! MG Comet, டாடா டியாகோ, பஞ்ச், சிட்ரோன் eC3 & டிகோர் EV கார்களின் விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்களை ஒப்பிடுங்கள். உங்களுக்கான சரியான எலக்ட்ரிக் காரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

இந்திய சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களே அதிகம் தென்படுகின்றன. ஆனால், மாறிவரும் உலகில் குறைந்த மாசு காரணமாக மின்சார வாகனங்களின் விற்பனைப் பெருகி வருகின்றது. இதற்கு உதாரணமாக கடந்த நிதியாண்டில் டீசல் வாகனங்களின் விற்பனையை மின்சார வாகனங்களின் விற்பனை முந்தி உள்ளது.
MG Comet EV
எம்ஜி காமெட் EV இந்தியாவில் தற்போது கிடைக்கும் குறைந்த விலை EV. இது நகர சாலைகளுக்கு ஏற்றது. கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டது. MG Comet EV தற்போது பல இந்திய கார்களின் விற்பனையை பின்னுக்கு தள்ளி உள்ளது.
Tata Tiago EV
டாடா டியாகோ EV குறைந்த விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக். பல்வேறு சார்ஜிங் விருப்பங்கள் இதில் உள்ளன. இந்தியாவில் தற்போது Tata Tiago EV ரூ.7.99 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
Tata Punch EV
டாடா பஞ்ச் EV குறைந்த விலையில் கிடைக்கும் EV SUV காராகும். அதிக இட வசதி கொண்ட கேபின், அதிநவீன வசதிகள் இதில் உள்ளன. இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்று என்ற வலுவான இடத்தில் உள்ள Tata Punch EV இந்தியாவில் ரூ.9.99 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
Citroen C3
சிட்ரோன் eC3 குறைந்த விலையில் கிடைக்கும் ஹேட்ச்பேக் EV. இது தனித்துவமான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் ரூ.6.16 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
Tata Tigor EV
டாடா டிகோர் EV சிறந்த எலக்ட்ரிக் கார். மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டட் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் உள்ளன. இந்த கார் இந்தியாவில் ரூ.12.49 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.