MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Cheapest SUV: 27 கி.மீ மைலேஜ் முதல் சன்ரூஃப் வரை.. பட்ஜெட்டில் வாங்குபவர்களுக்கு இந்த 3 கார்கள் சூப்பர்

Cheapest SUV: 27 கி.மீ மைலேஜ் முதல் சன்ரூஃப் வரை.. பட்ஜெட்டில் வாங்குபவர்களுக்கு இந்த 3 கார்கள் சூப்பர்

Cheapest SUV: குறைந்த விலையில் கிடைக்கும் சில எஸ்யூவி மாடல்கள் வாங்குபவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. உங்களின் தேவைக்கும், பட்ஜெட்டுக்கும் ஏற்ற மாடல் எது என்பதை தெரிந்துகொள்ள ஒவ்வொரு காரின் முக்கிய சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 13 2026, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குறைந்த பட்ஜெட் எஸ்யூவி கார்கள்
Image Credit : Google

குறைந்த பட்ஜெட் எஸ்யூவி கார்கள்

கார் சந்தையில் எஸ்யூவி மாடல்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், அசத்தலான தோற்றம் மற்றும் குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற இடவசதி ஆகிய காரணங்களால் பலரும் எஸ்யூவிகளை விரும்புகின்றனர். குறைந்த பட்ஜெட்டில் வாங்கக்கூடிய மூன்று முக்கிய மாடல்களை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நிசான் மேக்னைட்
Image Credit : Twitter

நிசான் மேக்னைட்

நிசான் மேக்னைட் இந்தியாவின் மிகவும் மலிவான காம்பாக்ட் எஸ்யூவிகளில் ஒன்றாகும். இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5,73,400. 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. 17.4 முதல் 19.7 கி.மீ/லிட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. 8 இன்ச் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக் உள்ளிட்ட பல வசதிகளும் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பில் 4-ஸ்டார் என்சிஏபி மதிப்பீடும் பெற்றுள்ளது.

மாதம் முழுக்க வெறும் 9 கார்கள் விற்பனை! ஆனாலும் ஏன் பலர் பாராட்டுகிறார்கள்?

Related Articles

Related image1
Best Selling MPV: 16,111 கார்கள் விற்பனை.. இன்னோவா, கேரன்ஸை முந்திய கார் இதுவா?
Related image2
Hyundai: மாதம் முழுக்க வெறும் 9 கார்கள் விற்பனை! ஆனாலும் ஏன் பலர் பாராட்டுகிறார்கள்?
35
டாடா பஞ்ச்
Image Credit : X@AarizRizvi

டாடா பஞ்ச்

டாடா பஞ்ச் காரின் ஆரம்ப விலை ரூ.5,69,990. 1.2 லிட்டர் ரிவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனுடன் கிடைக்கிறது. பெட்ரோலில் 18.8 முதல் 20 கி.மீ/லிட்டர் வரை, சிஎன்ஜி-யில் 26.9 கி.மீ/கிலோ வரை மைலேஜ் தருகிறது. 7 இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 90 டிகிரி திறக்கும் கதவுகள் போன்ற வசதிகள் உள்ளன. முக்கியமாக குளோபல் என்சிஏபியில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்றிருப்பது இதன் மிகப்பெரிய பலமாகும்.

45
ஹூண்டாய் எக்ஸ்டர்
Image Credit : HYUNDAI

ஹூண்டாய் எக்ஸ்டர்

ஹூண்டாய் எக்ஸ்டர் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5,80,600. 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும் இந்த எஸ்யூவி, சிஎன்ஜி பதிப்பில் 27.1 கி.மீ/கிலோ வரை மைலேஜ் வழங்குகிறது. இந்த பிரிவில் எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் இன்பில்ட் டாஷ்கேம் போன்ற வசதிகளை வழங்கும் மாடலாக இது தனித்துவம் பெறுகிறது. அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வாகன ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

55
பட்ஜெட் கார்கள்
Image Credit : Official website

பட்ஜெட் கார்கள்

பட்ஜெட்டை முதன்மையாக பார்க்கும் வாங்குபவர்களுக்கு நிசான் மேக்னைட் சிறந்த மதிப்பை வழங்குகிறது. பாதுகாப்புக்கு முன்னுரிமை என்றால் டாடா பஞ்ச் நல்ல தேர்வாக இருக்கும். அதிக வசதிகள், சன்ரூஃப் மற்றும் உயர்ந்த சிஎன்ஜி மைலேஜ் விரும்புபவர்களுக்கு ஹூண்டாய் எக்ஸ்டர் கவனிக்கத்தக்க மாடலாகும். உங்கள் பயன்பாடு மற்றும் தேவைக்கு ஏற்ப இந்த மூன்றில் பொருத்தமான எஸ்யூவி-ஐ தேர்வு செய்யலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குறைந்த விலை கார்
டாடா மோட்டார்ஸ்
நிசான் மேக்னைட்
ஹூண்டாய் எக்ஸ்டர்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Budget Family Car: விலை ரூ.5 லட்சம் + மைலேஜ் 34 கிமீ.. பல வருஷமா மிடில் கிளாஸின் ஃபேவரைட் இந்த கார் தான்!
Recommended image2
Best Selling MPV: 16,111 கார்கள் விற்பனை.. இன்னோவா, கேரன்ஸை முந்திய கார் இதுவா?
Recommended image3
Numeros n-First: ஒரே சார்ஜில் 109 கி.மீ.. ரூ.80,000 கூட இல்ல.. மிரட்டலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Related Stories
Recommended image1
Best Selling MPV: 16,111 கார்கள் விற்பனை.. இன்னோவா, கேரன்ஸை முந்திய கார் இதுவா?
Recommended image2
Hyundai: மாதம் முழுக்க வெறும் 9 கார்கள் விற்பனை! ஆனாலும் ஏன் பலர் பாராட்டுகிறார்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved