நாட்டிலேயே விலை குறைந்த கார்! இன்னும் கம்மி விலையில் - 28 கிமீ மைலேஜ் தரும் Tata Tiago
இந்திய சந்தையில் கிடைக்கும் டாடா நிறுவனத்தின் குறைந்த விலை கார் டியாகோ. MY2024 மாடலுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. பெட்ரோல், சிஎன்ஜி மாடல்களில் மேனுவல், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் உள்ளது.

இந்திய சந்தையில் விற்பனையாகும் டாடாவின் மிகவும் கம்மியான விலை கார் டியாகோ தான். இந்த காரின் 17 விதமான மாடல்கள் சந்தையில் உள்ளது. டாடா டியாகோ எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4,99,990ல் இருந்து தொடங்குகிறது. தற்போதைக்கு இந்த டாடா கார்களில் 3 சலுகைகள் உள்ளது. டாடா டியாகோ MY2024 மாடலில் தான் இந்த தள்ளுபடி உள்ளது. இந்த காரை வாங்கும்போது ரூ.30,000 வரைக்கும் சேமிக்கலாம்.
விலை குறைந்த கார்
டாடா டியாகோவில் தள்ளுபடி
டாடா டியாகோவில் மேனுவல், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளது. இந்த காரின் MY2024 மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை XM, XT (O) மாடல்களுக்குப் பொருந்தாது. டாடா டியாகோவின் சிஎன்ஜி மாடலுக்கு ரூ.15,000 வரைக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டாடா டியாகோ NRGயின் அனைத்து மாடல்கள் மீதும் ரூ.30,000 வரைக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதிக மைலேஜ் தரும் கார்
டாடா டியாகோவின் பவர்
1199 சிசி 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் தான் டாடா டியாகோவுக்கு பவர் கொடுக்குது. காரில் உள்ள இந்த எஞ்சின் 6,000 rpm-ல் 86 bhp பவரையும் 3,300 rpm-ல் 113 Nm டார்க்-கையும் வழங்குகிறது. டாடா டியாகோ சிஎன்ஜியும் சந்தையில் கிடைக்கிறது. டியாகோ சிஎன்ஜியில் உள்ள எஞ்சின் 6,000 rpm-ல் 75.5 பிஎஸ் பவரையும், 3,500 rpm-ல் 96.5 என்எம் டார்க்-கையும் வழங்குகிறது. இந்த காருக்கு 242 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. டாடா டியாகோவுக்கு 170 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இந்த டாடா காரில் முன்பக்கம் டிஸ்க் பிரேக்ஸும், பின் பக்கம் டிரம் பிரேக்ஸும் உள்ளது.
தள்ளுபடி விலையில் பட்ஜெட் கார்
டாடா டியாகோ மைலேஜ்
டாடா டியாகோவின் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 20.09 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ள இந்த கார் லிட்டருக்கு 19 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அதே நேரம் சிஎன்ஜி மாடலில் இந்த கார் நல்ல மைலேஜ் வழங்குகிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷனில் 26.49 கிலோமீட்டர்/கிலோகிராம் மைலேஜும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் 28.06 கிலோமீட்டர்/கிலோகிராம் மைலேஜும் டியாகோ சிஎன்ஜி வழங்குகிறது.
டாடா டியாகோ
கவனிக்க, வேற வேற பிளாட்ஃபார்ம்ஸ் உதவியோட கார்ல கிடைக்கிற தள்ளுபடிகள் மேல சொல்லியிருக்கோம். மேல சொன்ன தள்ளுபடிகள் நாட்டுல இருக்கிற ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு ஏரியாவுக்கும், ஒவ்வொரு சிட்டிக்கும், டீலர்ஷிப்ஸ்க்கும், ஸ்டாக்குக்கும், கலருக்கும், வேரியன்ட்டுக்கும் ஏத்த மாதிரி மாறும். அதாவது இந்த தள்ளுபடி உங்க சிட்டியிலயோ இல்ல டீலர்லயோ அதிகமாவோ இல்ல கம்மியாவோ இருக்கலாம். அதனால ஒரு கார் வாங்குறதுக்கு முன்னாடி கரெக்டான தள்ளுபடி கணக்குக்கும் மத்த விவரங்களுக்கும் உங்க பக்கத்துல இருக்க லோக்கல் டீலரை பாருங்க.