MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Tata Tiago EV: இனி பெட்ரோல் கவலையே வேண்டாம்.. டாடா டியாகோ EV விலை அதிரடி குறைப்பு.. இவ்வளவு கம்மியா?

Tata Tiago EV: இனி பெட்ரோல் கவலையே வேண்டாம்.. டாடா டியாகோ EV விலை அதிரடி குறைப்பு.. இவ்வளவு கம்மியா?

Tata Tiago EV Discount: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ EV காருக்கு அதிரடி சலுகையை வழங்கி விலை குறைப்பு செய்துள்ளது. எவ்வளவு விலை குறைந்துள்ளது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : May 07 2026, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டாடா கார்களுக்கு அதிரடி தள்ளுபடி
Image Credit : X

டாடா கார்களுக்கு அதிரடி தள்ளுபடி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதாவது இந்த மே மாதம் இந்த நிறுவனத்தின் மிகவும் விலை குறைந்த என்ட்ரி-லெவல் எலக்ட்ரிக் காரான டியாகோ EV-க்கு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.99 லட்சம் ஆகும். அனைத்து வேரியன்ட்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும்.

ஜீரோ டவுன் பேமென்ட்

அதுமட்டுமில்லாமல், ஒரு ஸ்பெஷல் ரிவார்டு திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட காலத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.86 லட்சம் வரை சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது. ஆனால், இந்த சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் தங்கள் டீலர்ஷிப்பைத் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், இலவச ஹோம் சார்ஜர் இன்ஸ்டாலேஷன், மற்றும் ஆறு மாதங்களுக்கு இலவச ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவையும் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் ஜீரோ டவுன் பேமென்ட் மற்றும் 100% ஆன்-ரோடு ஃபைனான்ஸ் வசதியையும் பெறலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
டாடா டியாகோ EV சிறப்பம்சங்கள்
Image Credit : Google

டாடா டியாகோ EV சிறப்பம்சங்கள்

டியாகோ EV கார் XE, XT, XZ+, மற்றும் XZ+ Lux என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. டீல் ப்ளூ, டேடோனா கிரே, ட்ராபிகல் மிஸ்ட், ப்ரிஸ்டைன் ஒயிட், மற்றும் மிட்நைட் ப்ளம் என ஐந்து கலர் ஆப்ஷன்களில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இந்த மாடலில் நிறுவனம் சில அப்டேட்களை செய்துள்ளது. வழக்கமான க்ரோம் டாடா லோகோ இப்போது இல்லை. அதற்கு பதிலாக புதிய 2D டாடா லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை காரின் முன்பக்க கிரில், டெயில்கேட் மற்றும் ஸ்டீயரிங் வீலிலும் பார்க்கலாம்.

USB டைப்-சி சார்ஜிங் போர்ட் அப்டேட்

2024-ல் அப்டேட் செய்யப்பட்ட டாடா டியாகோ EV-யில் இப்போது ஆட்டோ-டிம்மிங் IRVM வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் டாப்-ஸ்பெக் 'XZ+ டெக் லக்ஸ்' வேரியன்ட்டில் கிடைக்கிறது. இந்த எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கில் USB டைப்-சி சார்ஜிங் போர்ட்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது இப்போது XZ+ முதல் அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கும். டியாகோ EV-யின் அனைத்து வேரியன்ட்களிலும் இப்போது புதிய கியர் செலக்டர் நாப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கை 15A சாக்கெட் மூலமும் சார்ஜ் செய்ய முடியும்.

Related Articles

Related image1
ஒரே சார்ஜில் சென்னை டூ கோவை.. கிரெட்டாவுக்கு சவால் விடும் டாடா சியெரா EV: விலை இவ்வளவுதானா?
Related image2
டாடா சியாரா vs கியா செல்டோஸ்: 2026-ல் எந்த SUV வாங்குவது சிறந்தது? முழு விவரம்!
33
டாடா EV 315 கிமீ ரேஞ்ச் வழங்கும்
Image Credit : our own

டாடா EV 315 கிமீ ரேஞ்ச் வழங்கும்

டியாகோ எலக்ட்ரிக் காரில் இரண்டு டிரைவிங் மோட்கள் உள்ளன. இந்த EV வெறும் 5.7 வினாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 60 கி.மீ வேகத்தை எட்டிவிடும். இதில் 8-ஸ்பீக்கர் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், எலக்ட்ரிக் ORVM-கள் என பல அம்சங்கள் உள்ளன. டாடா நிறுவனத்தின் டியோகா EV தான் இந்தியாவின் பாதுகாப்பான எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் ஆகும். இதன் பேட்டரி மற்றும் மோட்டார்களுக்கு டாடா நிறுவனம் எட்டு ஆண்டுகள் அல்லது 1,60,000 கிலோமீட்டர் வாரண்டி வழங்குகிறது. இந்த எலக்ட்ரிக் காரின் உண்மையான ரேஞ்ச் 315 கி.மீ வரை உள்ளது.

முக்கிய அறிவிப்பு: டாடா காருக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் தள்ளுபடிகள் மாநிலங்கள், நகரங்கள், டீலர்ஷிப்கள், கையிருப்பு, காரின் நிறம் மற்றும் வேரியன்ட் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம். அதாவது, இந்த தள்ளுபடி உங்கள் நகரத்திலோ அல்லது டீலரிடமோ அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். எனவே, காரை வாங்குவதற்கு முன், சரியான தள்ளுபடி விவரங்கள் மற்றும் பிற தகவல்களுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்புகொள்ளவும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டாடா கார்கள்
டாடா மோட்டார்ஸ்
ஆட்டோ

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 5 EV Cars: பெட்ரோல், டீசல் விலைக்கு டாட்டா! ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் கார்கள்!
Recommended image2
Tiago EV: 6 ஏர்பேக்குகள், 360° கேமராவுடன் கெத்து காட்டும் புதிய டாடா டியாகோ Facelift: முழு விவரம்!
Recommended image3
Car AC: மேனுவல் ஏசி vs ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் - உங்க காருக்கு எது பெஸ்ட்?
Related Stories
Recommended image1
ஒரே சார்ஜில் சென்னை டூ கோவை.. கிரெட்டாவுக்கு சவால் விடும் டாடா சியெரா EV: விலை இவ்வளவுதானா?
Recommended image2
டாடா சியாரா vs கியா செல்டோஸ்: 2026-ல் எந்த SUV வாங்குவது சிறந்தது? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved