MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Tata Sierra EV: லாஞ்சுக்கு முன்பே கசிந்த டாடா சியாரா இவி விவரங்கள்.. ரேஞ்ச், பேட்டரி எல்லாமே செம!

Tata Sierra EV: லாஞ்சுக்கு முன்பே கசிந்த டாடா சியாரா இவி விவரங்கள்.. ரேஞ்ச், பேட்டரி எல்லாமே செம!

Tata Sierra EV: ஜூன் 30-ஆம் தேதி அறிமுகமாகவுள்ள டாடா சியாரா இவி-யின் பேட்டரி, ரேஞ்ச் மற்றும் முக்கிய அம்சங்கள் லாஞ்சுக்கு முன்பே வெளியாகியுள்ளன. அதனை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 27 2026, 07:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டாடா சியாரா இவி
Image Credit : Tata Sierra EV

டாடா சியாரா இவி

இந்திய எலக்ட்ரிக் கார் சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடா சியாரா இவி, வரும் ஜூன் 30-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பே இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியின் பேட்டரி, ரெஞ்ச் மற்றும் முக்கிய அம்சங்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வாகன ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டாடா சியாரா விலை
Image Credit : Asianet News

டாடா சியாரா விலை

வெளியான தகவல்களின்படி, சியாரா இவி-யின் ஆரம்ப நிலை Pure வேரியண்டில் 65kWh பேட்டரி பேக் வழங்கப்படலாம். இது டாடா ஹாரியர் இவி-யில் பயன்படுத்தப்படும் அதே பேட்டரியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பேட்டரியுடன் ரியர் வீல் டிரைவ் (RWD) மோட்டார் இணைக்கப்பட்டு சுமார் 238bhp பவர் மற்றும் 315Nm டார்க் வழங்கும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 538 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கிடைக்கும்.

Related Articles

Related image1
Tata Motors: டாடா வாகனங்களின் விலை உயருகிறது.. வாடிக்கையாளர்கள் ஷாக்.. எந்தெந்த மாடல்கள்?
Related image2
Tata Sierra EV: 500 கி.மீ. ரேஞ்சுடன் வரும் புதிய டாடா சியரா எலக்ட்ரிக் எஸ்யூவி! ஜூன் 30-ல் பிரம்மாண்ட அறிமுகம்.!
35
டாடா சியாரா வேரியண்ட்
Image Credit : Asianet News

டாடா சியாரா வேரியண்ட்

உயர் வேரியண்ட்களில் 75kWh பேட்டரி, டூயல் மோட்டார் மற்றும் AWD (ஆல்-வீல் டிரைவ்) அமைப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஹாரியர் இவி-யில் பயன்படுத்தப்படும் இந்த அமைப்பு சுமார் 313bhp பவர், 540Nm டார்க் மற்றும் அதிகபட்சமாக 622 கிலோமீட்டர் வரை ரேஞ்சை வழங்குகிறது. சியாரா இவி எடை குறைவாக இருப்பதால் இதன் செயல்திறன் மேலும் மேம்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

45
டாடா சியாரா வசதிகள்
Image Credit : TATA Motors Website

டாடா சியாரா வசதிகள்

டிசைனைப் பொறுத்தவரை, சியாரா இவி வெளிப்புற தோற்றத்தில் ICE மாடலை ஒத்திருந்தாலும், மூடிய முன்புற கிரில், புதிய பர், 19 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கிளாஸ் ஃபினிஷ் போன்ற மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில் டிரிப்பிள் ஸ்கிரீன் அமைப்பு, வென்டிலேட்டட் மற்றும் பவர் சீட்கள், பனோரமிக் சன்ரூஃப், ஹெட்-அப் டிஸ்ப்ளே, பிரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் பல டிரைவ் மோடுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
டாடா சியாரா பாதுகாப்பு அம்சங்கள்
Image Credit : Google

டாடா சியாரா பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களிலும் டாடா சியாரா இவி கவனம் ஈர்க்கிறது. பல ஏர்பேக்குகள், நிலை-2 ADAS, மேம்பட்ட டிரைவர் உதவி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், பேட்டரி, விலை மற்றும் அனைத்து வேரியண்ட்களின் முழுமையான விவரங்கள் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறும் அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வில்தான் உறுதியாகத் தெரியும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாடா மோட்டார்ஸ்
டாடா சியரா
மின்சார கார்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ather Rizta: ஓலா, டிவிஎஸ்-க்கு டஃப் கொடுக்கும் ஏத்தர்.. 'ரிஸ்டா' கொடுத்த மாஸ் என்ட்ரி! விற்பனையில் புதிய சாதனை!
Recommended image2
EV vs CNG: புது கார் வாங்க போறீங்களா? எலெக்ட்ரிக் vs சிஎன்ஜி! எது பெஸ்ட் சாய்ஸ்?
Recommended image3
Brezza Facelift: புதிய அவதாரத்தில் மாருதி பிரெஸ்ஸா.! மிடில் கிளாஸ் மக்களுக்கு செம சாய்ஸ்.! விலை எவ்வளவு?
Related Stories
Recommended image1
Tata Motors: டாடா வாகனங்களின் விலை உயருகிறது.. வாடிக்கையாளர்கள் ஷாக்.. எந்தெந்த மாடல்கள்?
Recommended image2
Tata Sierra EV: 500 கி.மீ. ரேஞ்சுடன் வரும் புதிய டாடா சியரா எலக்ட்ரிக் எஸ்யூவி! ஜூன் 30-ல் பிரம்மாண்ட அறிமுகம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved