புதிய டாடா சியரா வாங்க போறீங்களா.? உங்கள் கனவு SUV-யின் EMI எவ்வளவு?
புதிய டாடா சியரா SUV நவீன அம்சங்களுடன் மீண்டும் அறிமுகமாகியுள்ளது. இந்த காரை முழு கடனில் வாங்கினால், அதன் மாத இஎம்ஐ மற்றும் கடன் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய வடிவமைப்பில் மீண்டும் அறிமுகமான டாடா Sierra SUV சந்தையில் கவனம் ஈர்த்துள்ளது. கிளாசிக் பெயரை தக்க வைத்தபடி நவீன அம்சங்களுடன் இது வெளியாகியுள்ளது. ரூ.11.49 லட்சம் முதல் ரூ.21.29 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என பல எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் விருப்பங்களும் உள்ளன. மேல்தர டீசல் ஆட்டோமேட்டிக் மாடலை முழு கடனில் வாங்கினால், 8.5% வட்டியில் 3 ஆண்டுக்கு சுமார் ரூ.67,207 இஎம்ஐ ஆகும்.
5 ஆண்டுக்கு சுமார் ரூ.43,680 ஆகும். இஎம்ஐ தொகை முன்பணம், வட்டி விகிதம் மற்றும் ஆன்-ரோடு விலையைப் பொறுத்து மாறுபடும். ஆகவே, இறுதி முடிவு எடுக்கும் முன் வங்கி கணக்கீடு அவசியம். ஸ்டைல், இடவசதி மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன் விரும்பும் குடும்பங்களுக்கு டாடா Sierra ஒரு வலுவான விருப்பமாக பார்க்கப்படுகிறது.

