- Home
- Auto
- டாட்டா ஹாரியர் EV: சிங்கிள் சார்ஜில் 600 கி.மீ. ரேஞ்ச்! எக்கச்சக்கமான அம்சங்களுடன் வெளியாகும் Harrier EV
டாட்டா ஹாரியர் EV: சிங்கிள் சார்ஜில் 600 கி.மீ. ரேஞ்ச்! எக்கச்சக்கமான அம்சங்களுடன் வெளியாகும் Harrier EV
டாட்டா ஹாரியர் EV அடுத்த மாசம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் SUV டூயல் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட 75kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும்.

டாட்டா ஹாரியர் EV: சிங்கிள் சார்ஜில் 600 கி.மீ. ரேஞ்ச்
டாட்டா ஹாரியர் EV இப்போது அதனுடைய வெளியீட்டை நெருங்கி வந்துள்ளது. அடுத்த மாதம் இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தயாராகும் ஆறாவது எலக்ட்ரிக் வாகனம் மற்றும் இந்த வருடத்தின் முதல் புராடக்ட் லான்ச் இதுவாக இருக்கும். கடந்த மாதம் 2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் ஹாரியர் EV அதன் புரடக்ஷன் வெர்ஷனில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த டாட்டா எலக்ட்ரிக் SUV பற்றி இதுவரைக்கும் தெரிந்த முக்கியமான விஷயங்களப் பாக்கலாம்.
டாடா ஹாரியர் EV விலை
டிசைன், அம்சங்கள்
ICE வெர்ஷனில் இருந்து மாறுபட்டு, ஹாரியர் EVயில் மூடப்பட்ட ஃப்ரன்ட் கிரில், சற்று மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள், புதிய டிசைன் செய்யப்பட்ட ஏரோ ஆப்டிமைஸ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், டூயல்-டோன் ஃபினிஷ், முன் கதவுகளிலும் டெயில் கேட்டிலும் 'EV' பேட்ஜிங் இருக்கும்.
ரேஞ்ச், பேட்டரி, அம்சங்கள்
ஆக்டிவ் டாட் EV பிளாட்ஃபார்ம் அடிப்படையில, டாட்டா ஹாரியர் EV 2 பேட்டரி பேக் ஆப்ஷனில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாப் மாடலில் டுயல் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட 75kWh பேட்டரி பேக் இருக்கும். இதன் பவர் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், டார்க் அவுட்புட் 500 Nm ஆக இருக்கும். இந்த EV அதிகபட்சமாக 600 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா ஹாரியர் EV ரேஞ்ச்
டாட்டா ஹாரியர் EV அம்சங்கள்
பேட்டரி பேக்குகள் 11kWh AC சார்ஜர் மற்றும் 150kW வரைக்கும் DC ஃபாஸ்ட் சார்ஜர சப்போர்ட் செய்யும். வெஹிக்கிள்-டு-லோட் (V2L), வெஹிக்கிள்-டு-வெஹிக்கிள் (V2V) சார்ஜிங் வசதிகளும் இதில் இருக்கும். பல டிரைவ் மோடுகள், ரியர் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன், பின் எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட டெரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டமும் ஹாரியர் EVயில் கிடைக்கும்.
சிறந்த எலக்ட்ரிக் கார்
அம்சங்கள்
ICE வெர்ஷன் மட்டும் இல்லாமல் இதிலும் இருக்கின்ற அம்சங்களின் டெஸ்ட் படங்கள் சமீபத்தில் வெளியானது. இதில் இன்டீரியர் படங்களும் உள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், லைட் கொண்ட லோகோவுடன் 12.3 இன்ச் ஃப்ரீ-ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் கொண்ட 360 டிகிரி சரவுண்ட் கேமரா, கனெக்டட் கார் டெக், கிளவுட்-கனெக்டட் டெலிமேடிக்ஸ், ஓவர்-தி-ஏர் அப்டேட்கள், பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS மாதிரியான அம்சங்கள் டாட்டா ஹாரியர் EVயில் இடம்பெறும்.