- Home
- Auto
- இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்: Harrier மீது ரூ.75000 தள்ளுபடி வழங்கும் டாடா மிஸ் பண்ணாதீங்க
இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்: Harrier மீது ரூ.75000 தள்ளுபடி வழங்கும் டாடா மிஸ் பண்ணாதீங்க
பிப்ரவரி மாதத்தில் டாட்டா மோட்டார்ஸ் தங்களது பிரபலமான எஸ்யூவி ஹாரியர் மீது ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கேஷ் தள்ளுபடியோடு எக்ஸ்சேஞ்ச் போனஸும் இந்த ஆஃபரில் அடங்கும். ஹாரியர் EV விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார் மீது ரூ.75000 தள்ளுபடி வழங்கும் டாடா மிஸ் பண்ணாதீங்க
புதியதாக ஒரு எஸ்யூவி வாங்க திட்டமிடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. பிப்ரவரி மாசத்தில் டாட்டா மோட்டார்ஸ் தங்களது பிரபலமான எஸ்யூவி ஹாரியர் மீது சூப்பர் தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்த நேரத்தில் டாட்டா ஹாரியர் வாங்கும் பட்சத்தில் ரூ.75,000 வரை மிச்சம் செய்யலாம். சில டீலர்களிடம் 2024 -ல் தயாரிக்கப்பட்ட ஹாரியர் ஸ்டாக் உள்யது. இந்த ஸ்டாக்க தான் தள்ளுபடியில் விற்கப்படுகிறது. கேஷ் தள்ளுபடியோடு எக்ஸ்சேஞ்ச் போனஸும் இந்த ஆஃபரில் அடங்கும். தள்ளுபடி தொடர்பான முழு விவரங்களுக்கு அருகில் உள்ள டீலர்ஷிப்பை தொடர்பு கொள்ளலாம்.
இந்தியாவின் பாதுகாப்பான கார்
12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் ஃபுல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 10-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் டாட்டா ஹாரியரில் உள்ளது. பாதுகாப்புக்காக 6-ஏர் பேக்குகள், 360-டிகிரி கேமரா, ADAS போன்ற வசதிகளும் காரில் உள்ளது. இந்திய சந்தையில் டாட்டா ஹாரியரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
டாடா ஹாரியர் EV
எஞ்சின் பற்றி பார்த்தால், டாட்டா ஹாரியரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 170 bhp பவரையும், 350 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. காரின் எஞ்சினில் 6-ஸ்பீட் மேனுவல், 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கும். பாதுகாப்புக்கான க்ராஷ் டெஸ்ட்டில் பாரத் NCAP டாட்டா ஹாரியருக்கு 5-ஸ்டார் ரேட்டிங் உள்ளது.
சிறந்த மைலேஜ் கார்
டாட்டா ஹாரியர் ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா XUV700 போன்ற கார்களோடு போட்டியிடுகிறது. புதிய வசதிகள், ஸ்டைலான டிசைன், பவர்ஃபுல் எஞ்சின் இருப்பதால் இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. குளோபல் NCAP அடல்ட் சேஃப்டி ரேட்டிங் படி டாட்டா ஹாரியர் தான் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான கார். ஆறு ஏர்பேக்குகள் நிலையாகக் கொடுப்பதால் ஹாரியர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. டாப் வேரியன்டில் டிரைவர் முழங்கால் ஏர்பேக்கும் உள்ளது. ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் மவுண்டுகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), பேனிக் ப்ரேக் அலர்ட் போன்றவை ஹாரியரின் மற்ற முக்கியமான பாதுகாப்பு வசதிகள்.
சிறந்த பேமிலி கார்
டாட்டா ஹாரியர் EV அறிமுகமாக இன்னும் சில நாட்களே உள்ளது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் அடுத்த மாதம் அறிமுகமாக வாய்ப்புள்ளது. டாட்டாவின் ஆறாவது எலக்ட்ரிக் காரும் இந்த வருடத்தின் முதல் புதிய காரும் ஹாரியர் EV தான். கடந்த மாதம்ம் 2025 பாரத் மொபிலிட்டி ஷோவில் ஹாரியர் EV அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறந்த எலக்ட்ரிக் கார்
ஆக்டிவ் டாட் EV பிளாட்ஃபார்மை அடிப்படையாக டாட்டா ஹாரியர் EV 2 பேட்டரி பேக் ஆப்ஷனில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. டாப் மாடலில் டூயல் எலக்ட்ரிக் மோட்டார், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம், 75kWh பேட்டரி பேக் இருக்கலாம். பவர் எவ்வளவு என்று இன்னும் சொல்லப்படவில்லை என்றாலும் டார்க் 500 Nm இருக்கும். 600 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெவ்வேறு பிளாட்ஃபார்ம்கள் மூலமாக கிடைக்கின்ற தள்ளுபடிகள் தான் இதில் சொல்லப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிகள் மாநிலம், பகுதி, நகரம், டீலர்ஷிப், ஸ்டாக், கலர், வேரியன்ட் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். அதாவது உங்கள் நகரத்தில் உள்ள டீலரிடம் தள்ளுபடி கூடவோ குறையவோ செய்யலாம். அதனால் கார் வாங்குவதற்கு முன்னாபாக உங்கள் அருகில் உள்ள டீலர தொடர்பு கொண்டு தள்ளுபடி விவரங்களையும் மற்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளவும்.