MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஆக்டிவாவுக்கு கடும் போட்டி.. இந்த பட்ஜெட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது.. உடனே வாங்கி போடுங்க

ஆக்டிவாவுக்கு கடும் போட்டி.. இந்த பட்ஜெட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது.. உடனே வாங்கி போடுங்க

ஹோண்டா ஆக்டிவாவுக்கு நேரடி போட்டியாளராக சுசுகி ஆக்செஸ் இந்திய ஸ்கூட்டர் சந்தையில் வலுவாக முன்னேறி வருகிறது. விலை, வசதிகள், நகர பயணத்திற்கு ஏற்ற வடிவமைப்பு போன்றவற்றால் மக்கள் அதிகம் தேர்வு செய்து வருகின்றனர்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 10 2026, 08:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆக்டிவா ஸ்கூட்டருக்கு சவால் விடும் சுசுகி ஸ்கூட்டர்
Image Credit : Google

ஆக்டிவா ஸ்கூட்டருக்கு சவால் விடும் சுசுகி ஸ்கூட்டர்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது அதிக விற்பனை பெறும் ஸ்கூட்டரான சுசுகி ஆக்செஸ்-ஐ இந்திய சந்தையில் Single-Channel ஏபிஎஸ் வசதியுடன் புதுப்பித்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலமாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து வந்த இந்த பாதுகாப்பு மேம்பாடு, ஆக்செஸ் ஸ்கூட்டரை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. தினசரி பயணம், நகர சவாரி என அனைத்து சூழல்களிலும் பாதுகாப்பு முக்கியம் கவனத்தில் கொண்டு இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
சுசுகியின் ஏபிஎஸ் ஸ்கூட்டர்
Image Credit : Google

சுசுகியின் ஏபிஎஸ் ஸ்கூட்டர்

ஏபிஎஸ் ஏன் அவசியம் என்றால், திடீரென பிரேக் அடிக்கும் நேரங்களில் சக்கரம் லாக் ஆகாமல் தடுக்கிறது. இதனால் ஸ்கூட்டர் சறுக்காமல், ரைடருக்கு நல்ல கட்டுப்பாடு கிடைக்கிறது. குறிப்பாக மழைக்காலம், நெரிசல் நிறைந்த நகர சாலைகள் போன்ற இடங்களில் இந்த தொழில்நுட்ப விபத்து அபாயத்தை குறைக்க உதவுகிறது. இன்றைய இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Related image2
மைலேஜ் வாரி வழங்கும்.. மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் வாங்கும் பட்ஜெட் பைக்குகள்.. முழு லிஸ்ட்
35
புதிய சுசுகி ஆக்செஸ் விலை
Image Credit : Google

புதிய சுசுகி ஆக்செஸ் விலை

புதிய சுசுகி ஆக்செஸ் ரைட் கனெக்ட் ஏபிஎஸ் எடிஷன் மாடல், மெட்டாலிக் மேட் கருப்பு, மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் நீலம், முத்து கிரேஸ் வெள்ளை, சாலிட் ஐஸ் பச்சை, முத்து பளபளப்பான பழுப்பு என 5 அழகான நிறங்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.92,328. மேலும் Ride Connect TFT ஏபிஎஸ் எடிஷன் மாடல் ரூ.98,378 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த மாடலும் 5 நிறங்களில் கிடைக்கிறது, அதில் Pearl Matte Aqua Silver போன்ற புதிய ஷேட்களும் அடங்கும்.

45
ஆக்செஸ் ஏபிஎஸ் ஸ்கூட்டர் அம்சங்கள்
Image Credit : Google

ஆக்செஸ் ஏபிஎஸ் ஸ்கூட்டர் அம்சங்கள்

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சுசுகி சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்த ஆக்செஸ் ஏபிஎஸ் ஸ்கூட்டரை 6.99% குறைந்த ஆரம்ப வட்டி விகிதத்தில், பூஜ்ஜிய செயலாக்க கட்டணம் உடன் வாங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் மிடில்-கிளாஸ் குடும்பங்களுக்கு வாங்குவது இன்னும் எளிதாகிறது.

55
ஆக்செஸ் ஸ்கூட்டர் சலுகை
Image Credit : Google

ஆக்செஸ் ஸ்கூட்டர் சலுகை

மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் 10 அதிர்ஷ்டசாலிகள் தலா ரூ.5,000 மதிப்புள்ள வவுச்சரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஏபிஎஸ் வசதியுடன் கூடிய சுசுகி ஆக்செஸ் தற்போது நாடு முழுவதும் உள்ள சுசுகி டீலர்ஷிப்களில் கிடைக்கிறது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை, மைலேஜ் ஆகியவற்றில் ஆக்செஸ் தொடர்ந்து இந்திய பயனர்களின் நம்பிக்கையை காத்து வருகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சுசூகி
உருளி வண்டிகள்
ஹோண்டா ஆக்டிவா
குறைந்த விலை ஸ்கூட்டர்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVS Jupiter 125: அசத்தலான ரெண்டு புது கலர்ல வந்துருச்சு! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
Recommended image2
Budget CNG Cars: குறைந்த பட்ஜெட், சூப்பர் மைலேஜ்... இந்தியாவின் டாப் 5 மலிவு விலை CNG கார்கள்
Recommended image3
500 கிமீ ரேஞ்ச்..! மிரட்டும் New-Gen VinFast VF8 EV.. கலக்கப்போகும் அல்ட்ரா ஸ்மார்ட் SUV..!
Related Stories
Recommended image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Recommended image2
மைலேஜ் வாரி வழங்கும்.. மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் வாங்கும் பட்ஜெட் பைக்குகள்.. முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved