- Home
- Auto
- Petrol Saving Tips: பெட்ரோலில் மாசம் ₹3000 மிச்சப்படுத்தணுமா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
Petrol Saving Tips: பெட்ரோலில் மாசம் ₹3000 மிச்சப்படுத்தணுமா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
ஈரான் போர் காரணமா கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டிடுச்சு. இந்திய அரசு கலால் வரியைக் குறைச்சு கொஞ்சம் நிம்மதி கொடுத்தாலும், எண்ணெய் நிறுவனங்களோட நஷ்டத்தால நமக்கு பெரிய பலன் இல்லை. ஆனாலும், மாசம் ₹2000-₹3000 வரை பெட்ரோல் செலவை ஈஸியா குறைக்கலாம்.

காலையில பெட்ரோல் போடுங்க
வெயில் ஏற ஏற பெட்ரோல் விரிவடைந்து, அதோட அடர்த்தி குறையும்னு அறிவியல் சொல்லுது. அதனால, காலையில குளிர்ச்சியா இருக்கும்போது பெட்ரோல் போட்டா, அதே காசுக்கு கொஞ்சம் அதிகமா கிடைக்கும்.
டயர்ல காத்து கரெக்டா இருக்கா?
வண்டி டயர்ல காத்து கம்மியா இருந்தா, இன்ஜின் அதிகமா உழைக்க வேண்டியிருக்கும். இதனால பெட்ரோல் அதிகம் செலவாகும். வாரம் ஒருமுறை டயர் பிரஷர் செக் பண்ணுங்க. சரியான அளவு காத்து இருந்தாலே மைலேஜ் 15-20% வரைக்கும் அதிகமாகும்.
ஸ்பீடு லிமிட் ரொம்ப முக்கியம்
ஹைவேயோ, சிட்டியோ... வண்டியை 45-55 கி.மீ வேகத்துல ஓட்டுறதுதான் மைலேஜுக்கு ரொம்ப நல்லது. திடீர்னு பிரேக் அடிச்சு, அப்புறம் வேகமா ஆக்சிலரேட் பண்றது பெட்ரோலை 'குடிக்கிற' மாதிரி. ஸ்மூத்தா ஓட்டுனாலே மாசம் ₹500-₹700 மிச்சப்படுத்தலாம்.
சிக்னல்ல இன்ஜினை ஆஃப் பண்ணுங்க
டிராஃபிக் சிக்னல் 30 வினாடிக்கு மேல இருந்தா, இன்ஜினை ஆஃப் பண்ணிடுங்க. சும்மா நின்னுட்டு இருக்குற வண்டி, 1 நிமிஷத்துல அரை கிலோமீட்டர் ஓடுறதுக்கு சமமான பெட்ரோலை எரிச்சிடும்.
ஏசி எப்போ போடணும்?
சிட்டி டிராஃபிக்ல ஏசி போட்டா மைலேஜ் 20% வரைக்கும் குறையும். காலையில ஜன்னலை திறந்துவிட்டு ஃப்ரெஷ் காத்துல போறது நல்லது. ஆனா, ஹைவேல 80 கி.மீ வேகத்துக்கு மேல போகும்போது ஜன்னலை மூடிட்டு ஏசி போடுங்க. ஏன்னா, திறந்த ஜன்னல் காத்து தடுத்து (Drag), இன்ஜின் அதிகமா வேலை செஞ்சு பெட்ரோல் செலவு அதிகமாகும்.
கிளட்ச், பிரேக் பயன்பாடு
நிறைய பேர் வண்டி ஓட்டும்போது கிளட்ச் மேலேயே கால் வெச்சிருப்பாங்க. இதுக்கு 'Clutch Riding'னு பேரு. இதனால கிளட்ச் பிளேட் தேய்றது மட்டுமில்லாம, இன்ஜின் பவர் வேஸ்ட் ஆகி பெட்ரோல் செலவும் அதிகமாகும். அதேபோல, அடிக்கடி பிரேக் பிடிச்சா, வண்டியோட வேகம் குறைஞ்சு, திரும்ப வேகமெடுக்க அதிக பெட்ரோல் தேவைப்படும்.
தேவையில்லாத எடையை தூக்கிப்போடுங்க
உங்க கார் டிக்கியில தேவையில்லாத சாமான்கள் இருக்கா? வண்டி எவ்வளவு கனமா இருக்கோ, அதை இழுக்க இன்ஜின் அவ்வளவு சிரமப்படும். இன்னைக்கே உங்க வண்டியில இருந்து தேவையில்லாத எடையை குறைங்க.
சரியான நேரத்துல சர்வீஸ்
ஒரு அழுக்கான 'ஏர் ஃபில்டர்' உங்க மைலேஜை 10% வரைக்கும் குறைக்கலாம். சரியான நேரத்துல ஆயில் மாத்தி, சர்வீஸ் பண்ணா இன்ஜின் ஸ்மூத்தா ஓடும். குறைஞ்ச பெட்ரோல்ல அதிக தூரம் போகும்.
கூகுள் மேப்ஸை ஸ்மார்ட்டா பயன்படுத்துங்க
வெளிய கிளம்புறதுக்கு முன்னாடி கூகுள் மேப்ஸ் செக் பண்ணுங்க. டிராஃபிக்ல மாட்டுறதுன்னா பெட்ரோலை வீணாக்குறதுக்கு சமம். ஷார்ட்கட்னு சொல்லி மோசமான ரோட்ல போகாதீங்க. மேடு பள்ளமான ரோட்ல வண்டி அதிக பெட்ரோல் குடிக்கும்.
வாரத்துல ஒரு நாள் வண்டிக்கு ரெஸ்ட்!
வாரத்துல ஒரு நாள் வண்டி எடுக்காம இருந்தா, அதுவே ஒரு பெரிய சேமிப்புதான். அன்னைக்கு பப்ளிக் டிரான்ஸ்போர்ட், கார்பூல் அல்லது பைக் பயன்படுத்தலாம். இதனால பெட்ரோல் மிச்சமாகுறதோட, உங்க செலவும் கட்டுக்குள்ள இருக்கும்.
மொத்தம் எவ்வளவு சேமிக்கலாம்?
இந்த எல்லா வழிகளையும் நீங்க கடைப்பிடிச்சா, மாசம் ₹2000-₹3000 வரைக்கும் ஈஸியா சேமிக்க முடியும். நீண்ட காலத்துல இது ஒரு பெரிய தொகையா மாறி, உங்க பட்ஜெட்டுக்கு ரொம்ப உதவியா இருக்கும். பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. சொல்லப்பட்ட வழிகள், பொதுவான ஓட்டும் பழக்கங்கள் மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. உண்மையான சேமிப்பு உங்கள் வண்டியின் நிலை, ஓட்டும் விதம், போக்குவரத்து மற்றும் சாலை நிலைமைகளைப் பொறுத்து மாறலாம். தொழில்நுட்ப ஆலோசனைக்கு அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரை அணுகவும்.

