சிறிய குடும்பங்களுக்கான முதல் சாய்ஸ் இந்த கார் தான்.. ரெனால்ட் க்விட் விற்பனை பறக்குது..
இந்தியாவின் பட்ஜெட் கார் சந்தையில் ரெனால்ட் க்விட் விற்பனை 54% வளர்ச்சி கண்டுள்ளது. குறைந்த விலை, SUV போன்ற தோற்றம், நல்ல மைலேஜ் மற்றும் பண்டிகை கால தள்ளுபடிகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

குறைந்த விலை பட்ஜெட் கார்
வெறும் ரூ.5 லட்சத்தில் தொடங்கும் விலையில் கிடைக்கும் இந்த மினி காரை வாங்க பலரும் தற்போது திரளாக முன்வருகின்றனர். குறைந்த விலையில் கார் வாங்க நினைக்கும் இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் முதலில் நினைப்பது ரெனால்ட் க்விட் (Renault Kwid) என்ற மாடல்தான். சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற சைஸ், SUV மாதிரியான லுக், நல்ல மைலேஜ் - இவை அனைத்தும் இணைந்து இதை ‘பட்ஜெட்டில் பர்பெக்ட் காராக’ மாற்றியுள்ளன என்று அடித்துக் கூறலாம்.
ரெனால்ட் க்விட்
சமீபத்தில் வெளியான செப்டம்பர் 2025 விற்பனை அறிக்கையின்படி, ரெனால்ட் க்விட் விற்பனை பெரிதும் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் (ஆகஸ்ட் 2025) வெறும் 235 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில், செப்டம்பரில் அது 512 யூனிட்களுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஒரே மாதத்தில் 54% வளர்ச்சி பதிவாகியுள்ளது. பண்டிகை கால தள்ளுபடிகள், குறைந்த விலையில் EMI ஆப்ஷன்கள், மற்றும் ரெனால்ட் ஷோரூம்களில் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் என இவை அனைத்தும் காரணங்கள் மூலமாக அதிகளவில் விற்கப்பட்டு வருகின்றன. மேற்கண்டவை வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களாக உள்ளது.
ரூ.5 லட்சம் கார்
ரெனால்ட் க்விட் தற்போது குடும்பங்களால் மட்டுமல்ல, முதல் காராக தேர்ந்தெடுக்கப்படுவதிலும் முன்னிலை வகிக்கிறது. நகரப் பயணங்களுக்கு ஏற்ற எளிய ஓட்டுநர் அனுபவம், குறைந்த பராமரிப்பு செலவு, மற்றும் சிறந்த எரிபொருள் சேமிப்பு ஆகியவை இதன் முக்கிய பலமாகும். இதன் SUV லுக் மற்றும் உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ் இதனை அதே விலையில் உள்ள மற்ற கார்களை வேறுபடுத்துகிறது. இந்த கார் விலை ரூ.4.30 லட்சத்திலிருந்து தொடங்கி, டாப் வேரியண்ட் ரூ.5.99 லட்சம் வரை செல்கிறது.
பட்ஜெட் ஹாட்ச்பேக்
குறைந்த விலையில் இவ்வளவு நவீன வசதிகள், மைலேஜ், மற்றும் லுக் கொண்ட கார் இந்திய மார்க்கெட்டில் அரிதாகவே கிடைக்கும். இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 68 PS பவர் மற்றும் 91 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. வசதிகளின் விஷயத்தில், க்விட் எந்த பெரிய காருக்கும் குறையாது. கீலெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக்லி அட்ஜஸ்டபிள் மிர்ரர், நான்கு பவர் விண்டோ, மற்றும் மனுவல் ஏசி ஆகிய அடிப்படை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரெனால்ட் க்விட் அம்சங்கள்
உட்புறத்தில் 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் Apple CarPlay ஆதரவுடன் வருகிறது. இதன் மூலம் நேவிகேஷன், மியூசிக், மற்றும் காலிங் வசதிகளை எளிதாக பயன்படுத்தலாம். LED டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் காருக்கு ஒரு ஸ்மார்ட் லுக் வழங்குகிறது. தற்போது ரூ.1.73 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதால், வாங்க நினைப்பவர்கள் உடனே ஷோரூமுக்கு செல்லலாம்.