MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Renault Kwid: மாருதி ஆல்டோ கே10-க்கு போட்டியாக புதிய ரெனால்ட் க்விட் வருது.. இந்தியாவின் கேம்சேஞ்சர் இதுதான்

Renault Kwid: மாருதி ஆல்டோ கே10-க்கு போட்டியாக புதிய ரெனால்ட் க்விட் வருது.. இந்தியாவின் கேம்சேஞ்சர் இதுதான்

Renault Kwid: ஜூலை 3-ஆம் தேதி இந்தியாவில் ரெனால்ட் க்விட் பேஸ்லிப்ட் அறிமுகமாக உள்ளது. புதிய டிசைன் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் இந்த கார் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 27 2026, 09:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரெனால்ட் க்விட் புதிய கார்
Image Credit : ChatGPT

ரெனால்ட் க்விட் புதிய கார்

இந்தியாவில் பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் பேஸ்லிப்ட் மாடலை வரும் ஜூலை 3, 2026 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே இந்த காரின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
புதிய க்விட் பேஸ்லிப்ட்
Image Credit : stockPhoto

புதிய க்விட் பேஸ்லிப்ட்

வெளியான தகவல்களின்படி, புதிய க்விட் பேஸ்லிப்ட்-ல் முழுமையான மாற்றம் இருக்காது. ஆனால் முன்புற கிரில், புதிய பம்பர், புதுப்பிக்கப்பட்ட LED லைட்டிங் மற்றும் டெயில் லேம்ப் வடிவமைப்பு போன்ற காஸ்மெட்டிக் அப்டேட்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டிசைன் மொழிக்கு ஏற்ப கார் தோற்றம் மேலும் கவர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

35
புதிய க்விட் அம்சங்கள்
Image Credit : renault

புதிய க்விட் அம்சங்கள்

கேபினிலும் சில முக்கிய அப்டேட்கள் இடம்பெறலாம். பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டாஷ்போர்டில் சிறிய மாற்றங்கள் வழங்கப்படலாம். இருப்பினும், மெக்கானிக்கல் அம்சங்களில் பெரிய மாற்றம் இருக்காது. தற்போதுள்ள 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இன்ஜின் 65 bhp பவர் மற்றும் 96 Nm டார்க் உருவாக்குகிறது. 5 வேக மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் தொடரும்.

45
ஹேட்ச்பேக் வரிசை
Image Credit : Google

ஹேட்ச்பேக் வரிசை

இந்திய சந்தையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் க்விட், ரெனால்ட் நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை காராக இருந்து வருகிறது. சமீபத்தில் புதிய தலைமுறை டஸ்டர் மற்றும் அதன் 7 சீட்டர் மாடலை அறிமுகப்படுத்தியுள்ள ரெனால்ட், தற்போது க்விட் பேஸ்லிப்ட் மூலம் தனது ஹேட்ச்பேக் வரிசையையும் புதுப்பிக்கிறது.

55
மாருதிக்கு போட்டி
Image Credit : maruti

மாருதிக்கு போட்டி

அறிமுகமான பிறகு புதிய ரெனால்ட் க்விட் பேஸ்லிப்ட், Maruti Suzuki Alto K10 மற்றும் Maruti Suzuki Celerio போன்ற கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். புதிய தோற்றம், கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் போட்டித்தன்மை கொண்ட விலை ஆகியவை இந்த காரின் முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், விலை மற்றும் அனைத்து அம்சங்களும் ஜூலை 3-ஆம் தேதி நடைபெறும் அதிகாரப்பூர்வ அறிமுகம்தான் உறுதியாக அறிவிக்கப்படும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரெனால்ட் கார்
மாருதி கார்
குடும்ப கார்கள்
குறைந்த விலை கார்
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Electric Cycles for Women: பெண்களுக்கு ஏற்ற பெஸ்ட் எலக்ட்ரிக் சைக்கிள்கள்! விலை, ரேஞ்ச், மாடல் முழு விவரம்
Recommended image2
Nissan Magnite Price Hike: கார் வாங்க போறீங்களா? நிசான் மேக்னைட் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Denza Z9 GT: 600 கி.மீ ரேஞ்ச்.. இந்திய சாலைகளை கலக்க வரும் புதிய எலக்ட்ரிக் கார்.. டெஸ்லாவுக்கு கடும் போட்டி
Related Stories
Recommended image1
Small Cars Comeback: மாருதி, டாடா திடீர் முடிவு.. கம்பேக் கொடுக்கும் சின்ன கார்கள் மீண்டும் கம்பேக்
Recommended image2
Tata Sierra EV: 500 கி.மீ. ரேஞ்சுடன் வரும் புதிய டாடா சியரா எலக்ட்ரிக் எஸ்யூவி! ஜூன் 30-ல் பிரம்மாண்ட அறிமுகம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved