MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • லிட்டருக்கு 65 கி.மீ மைலேஜ், ஸ்போர்ட்ஸ் லுக்: குறைந்த பராமரிப்பு தரும் 3 பெஸ்ட் பைக்குகள்!

லிட்டருக்கு 65 கி.மீ மைலேஜ், ஸ்போர்ட்ஸ் லுக்: குறைந்த பராமரிப்பு தரும் 3 பெஸ்ட் பைக்குகள்!

இந்திய டூவீலர் பைக் சந்தையில் வாடிக்கையாளர்களிடம் 5-க்கு 4.6 என்ற அதிகபட்ச மதிப்பீட்டைப் பெற்றுள்ள டாப் 3 மைலேஜ் பைக்குகளை பற்றி விரிவாக பார்போம்.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Nov 18 2026, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும் பைக்குகள்
Image Credit : gemini

லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும் பைக்குகள்

இந்திய டூவீலர் பைக் சந்தையில் அதிக மைலேஜ், சிறந்த செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கே பெற்றுள்ள 3 சிறந்த பைக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டில் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ள ஹோண்டா எஸ்பி 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் ஆகிய பைக்குகள் வாகனப் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (Hero Splendor Plus XTEC)
Image Credit : X

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (Hero Splendor Plus XTEC)

இந்தியாவில் பல தலைமுறைகளாக நடுத்தர மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஸ்பிளெண்டர் பைக்கின் நவீன மாடலான இது, சுமார் 928 பயனர்களின் மதிப்பீட்டில் 4.6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

என்ஜின் திறன் - 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின், 7.9 பிஹெச்பி பவர், 8.05 என்எம் டார்க் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ்.

மைலேஜ் & சிறப்பம்சங்கள் - பயனர்களின் நேரடி அனுபவத்தின்படி லிட்டருக்குச் சுமார் 65 கி.மீ வரை மைலேஜ் தந்து, இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. டிராஃபிக்கில் எரிபொருளை மிச்சப்படுத்தும் ஐ3எஸ் (i3S) தொழில்நுட்பம், டிஜிட்டல் மீட்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் சொகுசான சீட் அமைப்பு ஆகியவை இதில் உள்ளன. இதன் விலை ரூ.82,000 ஆகும்.

34
ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125)
Image Credit : X

ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125)

125 சிசி கம்ப்யூட்டர் பைக் பிரிவில் மிகவும் பிரபலமான இந்த மாடல், 4,600-க்கும் மேற்பட்ட பயனர்களின் மதிப்பீட்டில் 4.6 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.

என்ஜின் திறன் - 123.94 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின், 10.87 பிஎஸ் பவர், 10.9 என்எம் டார்க் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ்.

மைலேஜ் & சிறப்பம்சங்கள் - நேரடிப் பயன்பாட்டுத் தரவுகளின்படி லிட்டருக்குச் சுமார் 63 கி.மீ வரை மைலேஜ் வழங்குகிறது. எல்.இ.டி முகப்பு விளக்குகள், டிஜிட்டல் மீட்டர் கன்சோல், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் நேரலை மைலேஜ் (Real-time mileage) தகவல்களைக் காட்டும் வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.93,000 ஆகும்.

44
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R)
Image Credit : X

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R)

இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் கவரும் வகையில் ஸ்போர்ட்டி தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக், சுமார் 1,944 பயனர்களின் மதிப்பீட்டில் 4.6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

என்ஜின் திறன் - 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின், 11.4 பிஹெச்பி பவர், 10.5 என்எம் டார்க் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ்.

மைலேஜ் & சிறப்பம்சங்கள் - மணிக்கு அதிகபட்சமாக 100 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய இந்த பைக், லிட்டருக்குச் சுமார் 57 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. ஆக்ரோஷமான டிசைன், எல்.இ.டி விளக்குகள், டிஜிட்டல் மீட்டர் மற்றும் பாதுகாப்பிற்கான சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் பிரேக் தேர்வு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். இதன் விலை ரூ.99,000 ஆகும்.

எதைத் தேர்ந்தெடுக்கலாம்?

3 பைக்குகளுமே வாடிக்கையாளர்களிடம் 4.6 என்ற சமமான நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும், பயன்பாட்டிற்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கலாம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிகபட்ச மைலேஜ் (65 கி.மீ) மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவை எதிர்பார்க்கும் நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் தினசரி நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் சிறந்த தேர்வாகும்.

மைலேஜ், பவர் மற்றும் மென்மையான என்ஜின் செயல்பாடு ஆகிய 3-ம் சம அளவில் வேண்டும் என்பவர்களுக்கும், தினசரி அலுவலகப் பயணத்திற்கும் ஹோண்டா எஸ்பி 125 மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் தேர்வாக உள்ளது.

பட்ஜெட் விலையில் ஸ்டைலான ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றம் மற்றும் வேகத்துடன் நல்ல மைலேஜும் வேண்டும் என்று விரும்பும் இளைஞர்களுக்கு ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பொருத்தமானதாக இருக்கும்.

About the Author

KD
Kiruthickraj D
ஆட்டோ
 
3rd ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
(23.2 ov)108/4
ENGENG
328
AUS need 221 runs in 160 balls
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
(87.1 ov)319/9
SLSL
98
Day 2 - Session 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bajaj Pulsar 180: ரீலான்ச் ஆகி 6 மாசத்துலையே காணாமப்போன பஜாஜ் பல்சர் 180... இதுதான் காரணமா?
Recommended image2
24 கி.மீ மைலேஜ், டர்போ இன்ஜின்: கலக்கலான அம்சங்களுடன் களமிறங்கிய மஹிந்திராவின் புதிய சிஎன்ஜி கார்!
Recommended image3
Land Rover Defender EV Launch: 2027-ல் எலெக்ட்ரிக் அவதாரத்தில் வரும் லேண்ட் ரோவர் டிஃபென்டர்; ஆஃப்-ரோடு சிறப்பம்சங்கள் என்னென்ன?
Related Stories
Recommended image1
24 கி.மீ மைலேஜ், டர்போ இன்ஜின்: கலக்கலான அம்சங்களுடன் களமிறங்கிய மஹிந்திராவின் புதிய சிஎன்ஜி கார்!
Recommended image2
ஒரு சார்ஜில் 320 கி.மீ. மைலேஜ், 130 கி.மீ. டாப் ஸ்பீடு: டாப் 3 பெஸ்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved