MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Auto
  • Nissan Magnite Price Hike: கார் வாங்க போறீங்களா? நிசான் மேக்னைட் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Nissan Magnite Price Hike: கார் வாங்க போறீங்களா? நிசான் மேக்னைட் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Nissan Magnite Price Hike: நிசான் மேக்னைட் விலை உயர்ந்துள்ளது. எந்த வேரியன்ட்களுக்கு ஹைக், எந்த மாடல்களுக்கு மாற்றமில்லை என்பதை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 16 2026, 04:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நிசான் மேக்னைட் விலை உயர்வு
Image Credit : Nissan official

நிசான் மேக்னைட் விலை உயர்வு

இந்தியாவில் நிசானின் முக்கியமான விற்பனை மாடலாக இருக்கும் மேக்னைட் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 2026 அப்டேட்டின்படி, பெரும்பாலான வேரியன்ட்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை விலை அதிகரித்துள்ளது. இந்த உயர்வு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களுக்கும், இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளுக்கும் பொருந்துகிறது. ஆனால், டேங்க் பெட்ரோல் மேனுவல் டூயல்-டோன் வேரியன்ட்டுக்கு மட்டும் ரூ.6,500 என்ற அதிகபட்ச விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எந்த வேரியன்ட்களுக்கு விலை உயர்வு இல்லையா?
Image Credit : Nissan official

எந்த வேரியன்ட்களுக்கு விலை உயர்வு இல்லையா?

அனைத்து மேக்னைட் வேரியன்ட்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தவில்லை. விசியா, விசியா ப்ளஸ் மற்றும் Acenta CNG வேரியன்ட்களில் மேனுவல் மற்றும் ஏஎம்டி தேர்வுகளுக்கு இந்த ஹைக் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, மேக்னைட் வாங்கத் திட்டமிடுபவர்கள் வேரியன்ட் மற்றும் பவர்டிரெயின் அடிப்படையில் தற்போதைய விலையை சரிபார்ப்பது முக்கியம். தற்போதைய விலைப்பட்டியலின்படி மேக்னைட்-ன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.65 லட்சமாக உள்ளது. டாப்-ஸ்பெக் Tekna+ 1.0 Turbo Petrol CVT விலை ரூ.10.96 லட்சம் வரை செல்கிறது.

Related Articles

Related image1
Denza Z9 GT: 600 கி.மீ ரேஞ்ச்.. இந்திய சாலைகளை கலக்க வரும் புதிய எலக்ட்ரிக் கார்.. டெஸ்லாவுக்கு கடும் போட்டி
Related image2
Cheapest Family Car: கம்மி விலையில் 5 சீட்டர் கார்! 6 ஏர்பேக், 33.85 கிமீ மைலேஜ்.. விலை இவ்வளவு தானா
35
இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள்
Image Credit : Twitter

இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள்

நிசான் மேக்னைட் தற்போது இரண்டு 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதில் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகியவை அடங்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. குறைந்த இயக்கச் செலவை விரும்புபவர்களுக்காக சிஎன்ஜி தேர்வு கிடைக்கிறது. தற்போதைய மாடல் 22 வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுவதாக ஆட்டோகார் இந்தியா குறிப்பிடுகிறது.

45
மேக்னைட் விலை எவ்வளவு?
Image Credit : Twitter

மேக்னைட் விலை எவ்வளவு?

விலை உயர்வுக்குப் பிறகு மேக்னைட் அதன் பிரிவில் போட்டித்தன்மை கொண்ட விலை வரம்பில் உள்ளது. சென்னையில் தற்போதைய 2026 மேக்னைட் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.65 லட்சம் முதல் ரூ.10.96 லட்சம் வரை உள்ளது. இருப்பினும், நகரம், பதிவு, காப்பீடு மற்றும் பிற கட்டணங்களைப் பொறுத்து ஆன்-ரோடு விலை மாறுபடும். உதாரணமாக, சென்னையில் தற்போதைய ஆன்ரோடு விலை சுமார் ரூ.6.64 லட்சம் முதல் ரூ.13.60 லட்சம் வரை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

55
அடுத்த கட்டத்தில் மேக்னைட்டுக்கு என்ன?
Image Credit : Twitter

அடுத்த கட்டத்தில் மேக்னைட்டுக்கு என்ன?

நிசானின் இந்திய தயாரிப்பு வரிசையில் மேக்னைட் நீண்ட காலமாக முக்கியமான மாதலாக இருந்து வருகிறது. தற்போது Gravite MPV, Tekton மற்றும் X-Trail போன்ற மாடல் நிறுவனங்களும் வரிசையில் இணைந்துள்ளன. புதிய சிறிய எஸ்யூவி அறிமுகமான பிறகு மேக்னைட்-ன் சந்தை நிலை மற்றும் போட்டியாளர்கள் மாறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது Tata Punch, Hyundai Exter, Maruti Swift, Hyundai Grand i10, Renault Triber உள்ளிட்ட மாடல்களுடன் அதன் போட்டி நிலையும் மாறலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நிசான் மேக்னைட்
நிசான் மேக்னைட் விலை
நிசான் மேக்னைட் எஸ்யூவி
விலைவாசி
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Denza Z9 GT: 600 கி.மீ ரேஞ்ச்.. இந்திய சாலைகளை கலக்க வரும் புதிய எலக்ட்ரிக் கார்.. டெஸ்லாவுக்கு கடும் போட்டி
Recommended image2
New Tata Nexon: பாக்ஸ் டிசைனில் புதிய டாடா நெக்ஸான்! ரூஃப் முதல் ஃப்யூயல் கேப் வரை மாறுது
Recommended image3
Budget CNG Cars: ரூ.10 லட்சத்திற்குள் 34 கிமீ மைலேஜ்.. டாப் 5 சிஎன்ஜி கார்கள் லிஸ்ட் இதோ!
Related Stories
Recommended image1
Denza Z9 GT: 600 கி.மீ ரேஞ்ச்.. இந்திய சாலைகளை கலக்க வரும் புதிய எலக்ட்ரிக் கார்.. டெஸ்லாவுக்கு கடும் போட்டி
Recommended image2
Cheapest Family Car: கம்மி விலையில் 5 சீட்டர் கார்! 6 ஏர்பேக், 33.85 கிமீ மைலேஜ்.. விலை இவ்வளவு தானா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved