- Home
- Auto
- Tata Tiago: மாஸ் என்ட்ரி! கார்களுக்கு நேரடி சவால்! 30 நிமிடங்களில் சார்ஜ்! பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்டி!
Tata Tiago: மாஸ் என்ட்ரி! கார்களுக்கு நேரடி சவால்! 30 நிமிடங்களில் சார்ஜ்! பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்டி!
New Tata Tiago 2026: டாடா மோட்டார்ஸ் தனது டியாகோ காரின் புதிய வெர்ஷனை ரூ.5 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டாண்டர்டாக ஆறு ஏர்பேக்குகள், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வருகிறது.
புதுபொலிவுடன் டாடா டியாகோ
டாடா மோட்டார்ஸ் தனது மலிவு விலை காரான டியாகோவின் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய டியாகோவின் ஆரம்ப விலை ரூ.4.6 லட்சம். ஆனால் புதிய காரின் விலையை ரூ.5 லட்சத்திற்கும் குறைவாகவே டாடா வைத்துள்ளது. முன்பை விட கார் இப்போது மிகவும் பாதுகாப்பானது மட்டுமல்ல பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
டாடா டியாகோ 6 ஏர்பேக்குகள்
புதிய டியாகோவில் பல்வேறு மாற்றங்களை டாடா செய்துள்ளது. இதில் ஸ்டாண்டர்டாகவே ஆறு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிக வலிமை கொண்ட பாகங்களைப் பயன்படுத்தி காரை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றியுள்ளனர். மோசமான சாலைகளிலும் ஓட்டும் வகையில் இந்த கார் சூப்பராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
டாடா டியாகோ புதிய அம்சங்கள்
இந்த காரில் ப்ளூடூத் இணைப்பு மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. AMT வேரியண்டில் பேடல் ஷிஃப்டர்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன. டியாகோ EV-யின் பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும், வெறும் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடலாம்.
டாடா டியாகோ இன்ஜின்
டியாகோவில் 86 ஹெச்பி சக்தியை உருவாக்கும் 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இதன் சிஎன்ஜி வெர்ஷன் 75.5 ஹெச்பி சக்தியை உற்பத்தி செய்கிறது. இது மாருதி சுசுகி வேகன்ஆர், செலிரியோ மற்றும் ஹூண்டாய் ஐ10 போன்ற கார்களுடன் நேரடியாகப் போட்டியிடுகிறது.
டாடா டியாகோ 2026 விலை
டாடா டியாகோ 2026, ரூ.4.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் டாப் வேரியண்டின் விலை ரூ.7.29 லட்சம். சிஎன்ஜி மாடல் ரூ.5.79 லட்சத்தில் தொடங்கி, ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது.
டாடா டியாகோ EV விலை
டாடா டியாகோ EV 2026 மாடலின் விலை ரூ.6.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. 'பேட்டரி ஆஸ் எ சர்வீஸ்' (BaaS) திட்டத்தின் கீழும் இந்த காரை வாங்கலாம். இந்த திட்டத்தின் கீழ், டாடா டியாகோ EV-யின் விலை ரூ.4.69 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

