MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • மழைக்காலத்தில் பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும்? சூப்பரான டிப்ஸ் இதோ!

மழைக்காலத்தில் பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும்? சூப்பரான டிப்ஸ் இதோ!

Monsoon Bike Maintenance Tips: மழைக்காலத்தில் பைக்கை சரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால் பெரும் ஆபத்தில் முடியும். மழைக்காலங்களில் பைக்கை எப்படி பராமரிப்பது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 30 2026, 01:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பைக் பராமரிப்பு டிப்ஸ்
Image Credit : X

பைக் பராமரிப்பு டிப்ஸ்

தமிழ்நாட்டில் மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த காலத்தில் பைக்கை சரியாகப் பராமரிக்கவில்லை என்றால், தொடர்ந்து படும் மழைநீரால் பைக்கின் முக்கிய பாகங்கள் வீணாகிவிடும். இதனால் நடுவழியில் வண்டி பிக்டவுன் ஆகி நீங்கள் சிரமப்பட வேண்டியிருக்கும்.

மழைநீரில் பைக் நனைவதால் பிரேக், சஸ்பென்ஷன் போன்ற முக்கியமான இடங்களில் துருப்பிடிக்கவோ அல்லது பழுதாகவோ வாய்ப்புள்ளது. மேலும் மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்குவது, சேறு, பள்ளங்கள் மற்றும் பார்வைத் திறன் குறைவது போன்ற பிரச்சனைகள் சகஜம். இதனால் நமது பைக் அல்லது ஸ்கூட்டர் மீது அதிக அழுத்தம் விழும். விபத்து அல்லது பிக்டவுன் ஆகும் அபாயமும் அதிகரிக்கும். மழைக்காலங்களில் பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.

டயர் மற்றும் பிரேக் பரிசோதனை

சாலையில் பைக் சறுக்காமல் (Skid) இருக்க இந்த இரண்டும் மிக மிக முக்கியம்.

டயர்கள்: உங்கள் பைக்கின் டயர் தேயாமல் உள்ளதா, சாலையில் சரியான கிரிப் கிடைக்கிறதா என்று சரிபார்க்கவும். அதேபோல், டயரில் ஏர் பிரஷர் சரியாக இருக்க வேண்டும். டயரின் ஓரங்களில் ஏதாவது வெடிப்புகள் அல்லது கட்டுகள் உள்ளதா என்பதைக் கவனிக்கவும்.

பிரேக்: பிரேக் பேடுகள், டிஸ்க் மற்றும் பிரேக் ஆயிலின் அளவைச் சரிபார்க்கவும். உங்கள் பைக்கில் டிரம் பிரேக் இருந்தால் அதைச் சரியாக இறுக்கிக் கொள்ளவும். பிரேக் பிடிக்கும்போது ஏதாவது வித்தியாசமான சத்தம் வந்தாலோ அல்லது பிரேக் தளர்வாக இருப்பதாகத் தோன்றினாலோ உடனே அதைச் சரிசெய்து கொள்ளவும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
செயின் மற்றும் லைட்டுகள் பராமரிப்பு
Image Credit : Asianet News

செயின் மற்றும் லைட்டுகள் பராமரிப்பு

டிரைவ் செயின்: மழைநீர் மற்றும் சேற்றால் செயின் சீக்கிரமாகத் துருப்பிடித்துவிடும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு செயினை நன்றாகச் சுத்தம் செய்துவிட்டு, அப்பப்போ ஆயில் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

லைட்டுகள்: ஹெட்லைட், டெயில் லைட், பிரேக் லைட் மற்றும் இண்டிகேட்டர்கள் எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.

பேட்டரி மற்றும் மின்சார வயரிங்

பேட்டரி ஆரோக்கியம்: பலவீனமான பேட்டரி, தளர்வான இணைப்புகள் அல்லது டெர்மினல்களில் துரு சேர்ந்திருந்தால் மழைக்காலத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்வது மிகவும் கடினம். அதனால்தான் மழைக்கு முன்பே பேட்டரியைச் சரிபார்க்க வேண்டும்.

எலக்ட்ரிக்கல் பகுதிகள்: இப்போது வரும் நவீன பைக்குகளில் நிறைய மின்னணுப் பாகங்கள் உள்ளன. வயர்கள் மற்றும் இணைப்பிகள் எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். அப்போதுதான் தண்ணீர் பட்டாலும் ஷார்ட் சர்க்யூட் ஆகாமல் தவிர்க்க முடியும்.

34
சஸ்பென்ஷன் மற்றும் பைக் சுத்தம் செய்தல்
Image Credit : AI

சஸ்பென்ஷன் மற்றும் பைக் சுத்தம் செய்தல்

சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங்: மழையில் சாலைகளில் பள்ளங்கள் அதிகமாகிவிடும். அதனால் இரு சக்கர வாகனத்தின் சஸ்பென்ஷனில் ஆயில் லீக் ஆகிறதா, மற்ற பாகங்கள் மற்றும் ஹேண்டில் எல்லாம் சரியாக உள்ளதா என்று சோதிப்பது அவசியம்.

வழக்கமான கழுவுதல்: சேறு, அழுக்குத் தண்ணீர் மற்றும் சாலையில் இருக்கும் குப்பைகளால் இரு சக்கர வாகனம் சீக்கிரமாகத் துருப்பிடித்துவிடும். அதனால்தான் மழைக்காலத்தில் வண்டியை அடிக்கடி தண்ணீர் ஊற்றிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

44
பாதுகாப்பான பயணத்திற்கான குறிப்புகள்
Image Credit : Google

பாதுகாப்பான பயணத்திற்கான குறிப்புகள்

சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள்: பைக்கை மட்டுமின்றி உங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மழையில் பைக் ஓட்டும்போது நல்ல ரெயின் சூட், வாட்டர் ப்ரூஃப் கையுறைகள், ரைடிங் பூட்ஸ் மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.

தண்ணீர் தேங்கிய இடங்களைத் தவிர்க்கவும்: முடிந்தவரை தண்ணீர் தேங்கிய சாலைகளில் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் தண்ணீருக்கு அடியில் பெரிய பள்ளமோ அல்லது குப்பைகளோ மறைந்திருக்கலாம். தண்ணீர் படுவதால் பிரேக்கும் சரியாக வேலை செய்யாது.

தண்ணீர் தேங்கிய சாலையில் சென்றே ஆக வேண்டும் என்றால், பைக்கை மிக மெதுவாக ஓட்டவும். தண்ணீரிலிருந்து வெளியே வந்ததும் பிரேக்கை லேசாகப் பிடித்து விடவும். இதனால் பிரேக் காய்ந்து, மீண்டும் சரியாக வேலை செய்யத் தொடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பைக்குகள்
ஆட்டோ
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(10.0 ov)109/3
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காரில் மைலேஜ் எகிறணுமா? இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க.. பெட்ரோல் செலவு குறையும்!
Recommended image2
காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் டூ பெண்கள் வரை... பட்டையைக் கிளப்பும் டாப் 5 யமஹா ஸ்கூட்டர்கள்; முழு விவரம்!
Recommended image3
200 சிசி, கிளட்ச் பிடிக்காமல் கியர்... Rain, Street மோடுகளுடன் அறிமுகமான புதிய கே.டி.எம் 200 டியூக்!
Related Stories
Recommended image1
Diwali Vehicle Buying: தீபாவளிக்கு கார், பைக் வாங்கப் போறீங்களா? பணத்தை மிச்சப்படுத்தும் 6 வழிகள்
Recommended image2
மழையில் நனைந்த கார், பைக் ஸ்டார்ட் பண்றீங்களா? லட்சக்கணக்கில் நஷ்டம் வரலாம். இதை மட்டும் செய்யாதீங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved