- Home
- Auto
- Maruti மலைபோல் நம்பிய Flex Fuel கார் பிளாப் ஆனதா? வெறும் 3 யூனிட்கள் மட்டும் விற்பனையான சோகம்
Maruti மலைபோல் நம்பிய Flex Fuel கார் பிளாப் ஆனதா? வெறும் 3 யூனிட்கள் மட்டும் விற்பனையான சோகம்
Maruti WagonR Flex Fuel : இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் காரான மாருதி வேகன்ஆருக்கு மார்க்கெட்டில் வரவேற்பு ரொம்பவே சுமாராக உள்ளது. எத்தனால் கலவைகளில் இயங்கும் இந்த மாடல், பசுமை எரிபொருளை நோக்கிய இந்தியாவின் முக்கிய முன்னெடுப்பாகும்.

Maruti WagonR Flex Fuel Sales
இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் காரான வேகன்ஆர் ஃப்ளெக்ஸ் ஃபியூயலுக்கு மார்க்கெட்டில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. மாருதி சுஸுகி அறிமுகப்படுத்திய இந்த புதிய மாடல், கடந்த ஜூன் மாதம் வெறும் 3 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ₹7.23 லட்சம். இது சாதாரண பெட்ரோல் வேகன்ஆர் மாடலை விட சுமார் ₹86,000 அதிகம்.
இந்தியாவில் எத்தனால் அடிப்படையிலான போக்குவரத்தை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாகவே மாருதி சுஸுகியின் இந்த வேகன்ஆர் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் மாடல் பார்க்கப்படுகிறது. E20 முதல் E85 வரையிலான எத்தனால்-பெட்ரோல் கலவைகளில் இயங்கும் திறன் கொண்ட இந்த கார், சில சமயங்களில் E100, அதாவது 100% சுத்தமான எத்தனாலிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃப்ளெக்ஸ் ஃபியூயல் காருக்கு வரவேற்பில்லை
ஆனால், வாடிக்கையாளர்களிடம் இதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. எத்தனால் எரிபொருள் குறித்த பொதுமக்களின் கவலைகளும், சந்தேகங்களுமே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் E20 எரிபொருள் குறித்து பரவிய நெகட்டிவ் கருத்துக்களும் இந்த விற்பனை சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஃப்ளெக்ஸ் ஃபியூயல் வாகனங்களில், பெட்ரோல் மற்றும் எத்தனாலின் வெவ்வேறு விகிதங்களில் இயங்கக்கூடிய இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தற்போதுள்ள வாகனங்கள் பெரும்பாலும் E20 கலவைக்கு ஏற்றவாறு டியூன் செய்யப்பட்டிருந்தாலும், இந்த புதிய வேகன்ஆர் மாடல் அதிக சதவீத எத்தனால் கலந்த எரிபொருளிலும் திறமையாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஃப்ளெக்ஸ் ஃபியூயல் காரில் என்ன ஸ்பெஷல்?
இதை சாத்தியமாக்க, காரின் எரிபொருள் அமைப்பில் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எத்தனாலின் வேதியியல் பண்புகள் காரணமாக, சாதாரண ஃபியூயல் டேங்க் மற்றும் லைன்கள் இதற்குப் போதாது. எனவே, வலுவான ஃபியூயல் லைன்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இன்ஜெக்டர்கள், ஈரப்பதத்தைத் தடுக்கும் சீல்கள் மற்றும் பிரத்யேகமாக கேலிபரேட் செய்யப்பட்ட இன்ஜின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்றவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
மாருதிக்கு சவால்
இந்திய சர்க்கரை மற்றும் உயிர்-ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ISMA) பிரதிநிதிகளுக்கு முதல் காரை டெலிவரி செய்ததும் இந்த திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். ISMA போன்ற அமைப்புகள் எத்தனால் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த காரின் முதல் டெலிவரியை ISMA-வின் செயற்குழு உறுப்பினர்கள்தான் பெற்றுக்கொண்டனர்.
நாடு பசுமை எரிபொருளை நோக்கியும், உயிர்-ஆற்றல் அடிப்படையிலான போக்குவரத்து முறைக்கு மாறும் சூழலில் இந்த அறிமுகம் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆனாலும், மார்க்கெட்டில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் மாருதிக்கு பெரிய சவாலாக உள்ளது.

