MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • மாருதி முதல் மஹிந்திரா வரை; தீபாவளி ஆஃபரில் களமிறங்கும் ஸ்பெஷல் எடிஷன் கார்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

மாருதி முதல் மஹிந்திரா வரை; தீபாவளி ஆஃபரில் களமிறங்கும் ஸ்பெஷல் எடிஷன் கார்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

Special Edition Cars in Offer : பண்டிகை காலத்தை முன்னிட்டு பல முன்னணி பிராண்ட் கார் தயாரிப்பாளர்கள் புதிய ஸ்பெஷல் எடிஷன் கார்களை ஆஃபர் விலையில் கொடுக்கவுள்ளனர்.

2 Min read
Ansgar R
Published : Oct 24 2024, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Special Edition Cars

Special Edition Cars

Maruti Suzuki Wagon R Waltz Edition 

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களுடைய ஸ்பெஷல் எடிஷன் கார்களை வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் அர் வால்ட்ஸ் எடிசன் 5.65 லட்சம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வால்ட்ஸ் எடிஷனில் LXi, VXi மற்றும் ZXi போன்ற பாடல்கள் கிடைக்கிறது மேலும் இது Fog Lights, வீல்-ஆர்ச் கிளாடிங், பம்பர் ப்ரொடக்டர்கள், பாடி சைட் மோல்டிங், டிசைனர் ஃப்ளோர் மேட்ஸ், இன்டீரியர் ஸ்டைலிங் கிட்கள் மற்றும் கிரில்லில் குரோம் முலாம் ஆகியவற்றைப் பெறுகிறது. மேலும் இந்த வால்ட்ஸ் பதிப்பு 6.2 அங்குல தொடுதிரை மற்றும் ஒரு ரிவேர்ஸ் பார்க்கிங் கேமராவும் கொண்டுள்ளது.

இந்தக் காரை வாங்கினால் ரூ.50,000 வரை சேமிக்கலாம்; தீபாவளி ஆஃபர்!!

24
Baleno Regal

Baleno Regal

Suzuki Baleno Regal 

இந்த பண்டிகைக் காலத்தில் பலேனோ தனது புதிய மற்றும் சிறப்பான ரீகல் பதிப்பை வெளியிடுகிறது. இது அனைத்து வகைகளிலும் கிடைக்கிறது. மேலும் இந்த பண்டிகை காலத்தில் இந்த காரை வாங்கும்போது பலேனோ ரீகல் எடிஷனுடன் பல கூடுதல் ஆக்சஸெரீகளும் உங்களுக்கு கிடைக்கும். அதாவது முன்பக்க அண்டர்பாடி ஸ்பாய்லர், ரியர் அண்டர்பாடி ஸ்பாய்லர், டூயல்-டோன் சீட் கவர்கள், 3டி மேட்ஸ், சைட் மோல்டிங்ஸ், மட் ஃபிளாப்ஸ், 3டி பூட் மேட். கிரில் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றுக்கான குரோம் அலங்காரம் ஆகியவை இதில் அடங்கும். மேலும் ஒரு பாடி கவர், நெக்ஸா குஷன்கள், கதவு வைசர்கள், சில் கார்டுகள், ஜன்னல் திரைமறைப்பான்கள், டயர் இன்ஃப்ளேட்டர், லோகோ புரொஜெக்டர் விளக்கு மற்றும் குரோம் கதவு கைப்பிடிகளும் இதில் அடக்கம். மேலும் இந்த காரின் ஆரம்ப விலை சுமார் 7.3 லட்சமாகும்.

34
Toyoto rumion

Toyoto rumion

Toyota 

Toyota சமீபத்தில் Hyryder, Glanza மற்றும் Rumion மற்றும் Taisor ஆகிய கார்களில் புதிய ஃபெஸ்டிவல் லிமிடெட் பதிப்பை அறிமுகப்படுத்தியது. இந்த நான்கு சிறப்பு பதிப்பு மாடல்களும், தங்கள் விற்பனையை மேலும் உயர்த்தும் வகையில் துணை உபகரண பேக்கேஜ்களைப் பெறுகின்றன. மேலும் இந்த ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷன் மாடல்கள் இந்த மாத இறுதி வரை மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு ஸ்பெஷல் எடிஷன் கார்கள் சுமார் 6 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.

44
scorpio boss edition

scorpio boss edition

Mahindra Scorpio Boss 

கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் பாஸ் எடிஷன், கூடுதல் உபகரணங்களுடன் கூடிய மற்றொரு ஸ்பெஷல் எடிஷன் மாடலாகும். மேலும் இந்த பண்டிகை காலத்தில் சுமார் 16 லட்சம் ரூபாயில் இருந்து விற்பனைக்கு வருகின்றது. மேலும் ஸ்பெஷல் எடிஷன் ஆஃபரக இந்த புதிய   காரை வாங்கும் போது மழை காலத்தில் பயன்படும் வைசர்கள், முன்பக்க ஸ்கிட் பிளேட், பிளாக் பவுடர் கோட்டிங் கொண்ட பின்புற செக்யூரிட்டி கேமரா மற்றும் பின்புறக் ரிவேர்ஸ் கேமரா ஆகியவற்றைப் பெறலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ. ஓடும்! ரூ.80,000 பட்ஜெட்டில் சூப்பர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

About the Author

AR
Ansgar R
டொயோட்டா கார்கள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved