MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • மாருதி முதல் ஸ்கோடா வரை; நவம்பரில் அறிமுகமாக காத்திருக்கும் 3 முக்கிய கார்கள்!

மாருதி முதல் ஸ்கோடா வரை; நவம்பரில் அறிமுகமாக காத்திருக்கும் 3 முக்கிய கார்கள்!

November Release Cars : இந்த நவம்பர் மாதம் சுசூகி மற்றும் ஸ்கோடாவின் 3 புதிய கார்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 Min read
Ansgar R
Published : Nov 02 2024, 10:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Benz car

Benz car

ஏற்கனவே இந்தியாவில் பல சிறப்பு எடிஷன் கார்கள் இந்த பண்டிகை காலத்தில் வெளியாகி வரும் நிலையில், மாருதி நிறுவனம் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்யவுள்ளது. மேலும் பிரபல ஸ்கோடா நிறுவனமும் ஒரு புதிய SUV காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. சரி இந்த வண்டிகள் ஒவ்வொன்றிலிருந்தும் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இப்பொது விரிவாகப் பார்ப்போம்.

நவம்பர் 7ல் ஓபன் எலக்ட்ரிக் செட் ரோர் இஇசட் வருது.. எலக்ட்ரிக் பைக் வாங்குபவர்களே கொஞ்சம் வெயிட்!

24
Maruti Suzuki eVX

Maruti Suzuki eVX

2023 ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வகையில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட மாருதி சுஸுகியின் புதிய eVX கார் வருகின்ற நவம்பர் மாதம் 4ம் தேதி இத்தாலியின் மிலன் நகரில் எலக்ட்ரிக் எஸ்யூவியின் எடிஷனில் வெளியாகவுள்ளது. விரைவில் இந்த வண்டி இந்தியாவிலும் விற்பனைக்கு வருகின்றது. தாய் நிறுவனமான சுஸுகிக்கான உலகளாவிய தயாரிப்பாக eVXன் முக்கியத்துவத்தை இந்த விஷயம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றே கூறலாம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட EVகளின் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பகுதியாக ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த புதிய eVX ஆனது 60kWh பேட்டரியைப் பெறும், இது 500km வரை வரம்பைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது AWD அமைப்புடன் வரும் என்றும் இதற்கான விலை அறிவிப்பு மார்ச் 2025ல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

34
Skoda Kylaq

Skoda Kylaq

Skoda Kylaq, இந்த புதிய வண்டிகள் அறிவிப்பு வருகின்ற நவம்பர் 6ம் வெளியாகிறது. இது ஸ்கோடாவின் புதிய சப்-காம்பாக்ட் SUV பிரிவில் அந்த நிறுவனத்தின் முதல் முயற்சியாகும். மேலும் இது MQB-A0-IN இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஸ்கோடாவின் குஷாக் வரிசையில் இந்த வண்டி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் குஷாக்குடன் ஒப்பிடும்போது இந்த "கைலாக்" குறுகிய வீல்பேஸைக் கொண்டிருக்கும். மேலும் இந்த கைலாக் 6-ஸ்பீடு MT மற்றும் AT கியர்பாக்ஸுடன் வரவுள்ளது. 1.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும்.

44
Suzuki Dzire

Suzuki Dzire

மாருதியின் தனது முதல் EVயைத் தொடர்ந்து இந்தியாவில் அதன் அதிக விற்பனையாகும் கார்களில் ஒன்றான புதிய "டிசையர்" காரை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நியூ ஜென் ஸ்விஃப்டை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும், அதன் ஹேட்ச்பேக் வெர்ஷனில் இருந்து இது முற்றிலும் மறுபட்டிருக்கும். இந்த புதிய டிசையர் மிகவும் கூர்மையான மற்றும் முதிர்ந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 82hp மற்றும் 112Nm ஆற்றலை வழங்கும் ஸ்விஃப்ட் போன்ற அதே 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் எஞ்சினுடன் இந்த புதிய டிசையர் வழங்கப்படும். மேலும் இது பெட்ரோல்-சிஎன்ஜி விருப்பத்தையும் பெறும் என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி வின்னர் இதுதான்.. 6 ஏர்பேக்குடன் அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா படைத்த சாதனை!

About the Author

AR
Ansgar R
மாருதி சுசூகி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved