MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.6.7 லட்சம் தான் விலை! 30 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள் - பலேனோ கார் மீது ரூ.62000 தள்ளுபடி

ரூ.6.7 லட்சம் தான் விலை! 30 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள் - பலேனோ கார் மீது ரூ.62000 தள்ளுபடி

மாருதி சுசூகி தன்னுடைய பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோவுக்கு இந்த மாதம் சிறப்பான தள்ளுபடிகளை அறிவித்துள்து. 2024, 2025 மாடல்களுக்கு முறையே ₹62,100 மற்றும் ₹55,000 வரை தள்ளுபடிகள் வங்கப்பட்டுள்ளது. தள்ளுபடி, பரிமாற்றம், ஸ்கிராப்பேஜ் சலுகைகள் இதில் அடங்கும்.

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 08 2025, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரூ.6.7 லட்சம் தான் விலை! 30 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள்   பலேனோ கார் மீது ரூ.62000 தள்ளுபடி

ரூ.6.7 லட்சம் தான் விலை! 30 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள் - பலேனோ கார் மீது ரூ.62000 தள்ளுபடி

மாருதி சுசூகி இந்தியாவின் பிரபலமான மாடல்களில் ஒன்று பலேனோ. கடந்த மாதம் நாட்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் பலேனோ இரண்டாம் இடத்தில் இருந்தது. இந்த மாதம் தனது மிகவும் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் பலேனோவுக்கு சிறந்த தள்ளுபடிகளை நிறுவனம் வழங்குகிறது. இந்த மாதம் இந்த காரில் நிறுவனம் ரூ.62,100 வரை தள்ளுபடி வழங்குகிறது. 2024 மாடல் கார்கள் மற்றும் 2025 மாடல் கார்களுக்கு நிறுவனம் வெவ்வேறு தள்ளுபடிகளை வழங்குகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.70 லட்சம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தள்ளுபடி விலையில் பலேனோ

தள்ளுபடி விலையில் பலேனோ

மாருதி பலேனோ 2024 மாடலுக்கு ரூ.62,100 வரை தள்ளுபடி வழங்குகிறது. 2025 பதிப்பிற்கு ரூ.55,000 வரை தள்ளுபடி உண்டு. பெட்ரோல்-எம்டி, பெட்ரோல்-ஏஎம்டி, சிஎன்ஜி உள்ளிட்ட 2025 மாடல் பலேனோவின் அனைத்து வகைகளுக்கும் சுமார் ரூ.55,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன. இதில் தள்ளுபடி (ரூ.15,000-20,000), பரிமாற்றம் (ரூ.15,000), ஸ்கிராப்பேஜ் (ரூ.20,000) சலுகைகள் அடங்கும். 2024 சலுகை விவரங்களில், மற்ற நெக்ஸா கார்களைப் போலவே, 2024 பலேனோ மாடல்களுக்கு ரூ.75,000 (MT), ரூ.85,000 (AMT), ரூ.65,000 (CNG) என தள்ளுபடி கிடைக்கிறது.

35
சிறந்த மைலேஜ் கார்

சிறந்த மைலேஜ் கார்

பலேனோ 3990 மிமீ நீளமும், 1745 மிமீ அகலமும், 1500 மிமீ உயரமும், 2520 மிமீ வீல்பேஸும் கொண்டது. புதிய பலேனோவின் ஏசி வென்ட்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்கில் 360 டிகிரி கேமரா இருக்கும். இதில் ஒன்பது இன்ச் ஸ்மார்ட்பிளே புரோ பிளஸ் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கும். இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை ஆதரிக்கிறது.

45
பட்ஜெட் விலையில் பாதுகாப்பான கார்

பட்ஜெட் விலையில் பாதுகாப்பான கார்

1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் K12N பெட்ரோல் எஞ்சின் பலேனோவிற்கு சக்தி அளிக்கிறது. இது 83 bhp சக்தியை உற்பத்தி செய்யும். அதே நேரத்தில், மற்றொரு விருப்பமாக 90 bhp சக்தியை உற்பத்தி செய்யும் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் இருக்கும். இதில் மேனுவல், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் விருப்பங்கள் உள்ளன. 1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் எஞ்சின் பலேனோ சிஎன்ஜியில் பயன்படுத்தப்படுகிறது. இது 78ps சக்தியையும் 99nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

55
மாருதி பலேனோ

மாருதி பலேனோ

பாதுகாப்பிற்காக, மாருதி பலேனோவில் இப்போது ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, EBD உடன் ABS, ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் ஆங்கரேஜ், ரிவர்சிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார் போன்ற அம்சங்கள் உள்ளன. சிக்மா, டெல்டா, ஜீட்டா, ஆல்ஃபா என நான்கு வேரியண்ட்களில் பலேனோ விற்பனை செய்யப்படுகிறது. ரூ.6.70 லட்சம் இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி கார்கள்
மாருதி சுசூகி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காரில் ஆஃப்டர் மார்க்கெட் சன்ரூஃப் மாட்டினால் வாரண்டி கிடையாதா? முழு விவரம் இதோ!
Recommended image2
Car Buying Tips: 10 லட்சம் கொடுத்து கார் வாங்குறீங்களா? 2 வருஷம் வெயிட் பண்ணா கார் ஓசியில கிடைக்கும்!
Recommended image3
இந்தியாவின் முதல் E100 எத்தனால் காரா? மிரட்டலான தோற்றத்துடன் வரும் இன்னோவா ஹைகிராஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved