அடிச்சது ஜாக்பாட்.. ரூ.3 லட்சம் வரை சேமிக்கலாம்.. கார் வாங்க தீபாவளி தான் சரியான டைம்
இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாருதி, கியா, ஹோண்டா, ஸ்கோடா உள்ளிட்ட பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்கள் கார்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. சில மாடல்களுக்கு ரூ.3 லட்சம் வரை நேரடி தள்ளுபடி கிடைக்கிறது.

தீபாவளி கார் சலுகைகள்
இந்த தீபாவளியில் புதிய கார் வாங்க நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி இது. பல பிரபல நிறுவனங்கள் தங்களின் கார்களுக்கு பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளன. சில மாடல்களில் நேரடியாக ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. மாருதி, கியா, ஹோண்டா, வோல்க்ஸ்வேகன், ஸ்கோடா போன்ற பிராண்டுகள் இந்த ஆஃபர்களில் உள்ளன.
மாருதி பலேனோ சலுகை
மாருதி பலேனோ டெல்டா AMT மாடலில் ரூ.1.05 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.20,000 கேஷ் தள்ளுபடி, ரூ.30,000 எக்ஸ்சென்ஜ் போனஸ், மேலும் ரூ.55,000 மதிப்புள்ள ரீகல் கிட் ஆகியவை அடங்கும். மாருதி இன்விக்டோ ஆல்பா மாடலுக்கு ரூ.1.40 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் கியா சோனெட் மாடலுக்கு ரூ.1.03 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹோண்டா சிட்டி தள்ளுபடி
ஹோண்டா சிட்டி வாங்குபவர்களுக்கு ரூ.1.27 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதேபோல் ஹோண்டா எலிவேட், மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், வோல்க்ஸ்வேகன் டைகுன் போன்ற மாடல்களுக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.8 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சில மாடல்களில் ஸ்க்ராபேஜ் போனஸ், கார்ப்பரேட் சலுகைகள், கேஷ் டிஸ்கவுண்ட் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா கார் சலுகைகள்
ஸ்கோடா ஸ்லாவியா, குஷாக், மஹிந்திரா XUV400, மஹிந்திரா மராசோ போன்ற மாடல்களில் ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. குறிப்பாக மராசோவிற்கு ரூ.3 லட்சம் நேரடி கேஷ் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளியில் கார் வாங்க நினைப்பவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் இது உண்மையில் ஒரு “கோல்டன் சான்ஸ்” எனக் கூறலாம்.