MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 7 சீட்டர் கார்.. மாருதி ரசிகர்கள் காத்திருந்த செய்தி.. ஆர்டர் குவியப்போகுது

7 சீட்டர் கார்.. மாருதி ரசிகர்கள் காத்திருந்த செய்தி.. ஆர்டர் குவியப்போகுது

2022-ல் அறிமுகமான மாருதி கிராண்ட் விட்டாரா, 2026-ல் ஒரு பெரிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டைப் பெற உள்ளது. இந்த அப்டேட்டில் வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்களுடன், 7-சீட்டர் மாடல் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 27 2026, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாருதி ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்
Image Credit : Nexa Cars Website

மாருதி ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்

மாருதி சுசுகியின் எஸ்யூவி வரிசையில் விற்பனையில் முத்திரை பதித்த மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா. 2022-ல் அறிமுகமான இந்த கார், குறிப்பாக ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் காரணமாக வாடிக்கையாளர்களின் மனதை வென்றது. நகரத்திலும், நீண்ட பயணங்களிலும் எரிபொருள் சேமிப்பை உறுதி செய்யும் இந்த அம்சம், இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில், இந்த மாடலுக்கு 2026-ல் ஒரு பெரிய மிட்-லைஃப் அப்டேட்டை வழங்க மாருதி திட்டமிட்டு வருகிறது.

25
புதிய கிராண்ட் விட்டாரா
Image Credit : Nexa Cars Website

புதிய கிராண்ட் விட்டாரா

புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் வெளிப்புற தோற்றத்தில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்புறத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட கிரில், மேம்படுத்தப்பட்ட எல்இடி ஹெட்லைட்கள், மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள் மற்றும் ஸ்டைலிஷ் அலாய் வீல்கள் காரின் லுக்கை இன்னும் ஷார்ப்பாக மாறும். உள்ளமைப்பில் புதிய டிரிம்கள், மேம்பட்ட அப்ஹோல்ஸ்டரி மற்றும் பெரிய டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படலாம்.

Related Articles

Related image1
Business Idea: உங்க கார் மூலமா மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்... இத செஞ்சா போதும்!
Related image2
பழைய கார் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி? வாரண்டி, தரத்தை உறுதி செய்வது எப்படி? முழு விவரம்!
35
கிராண்ட் விட்டாரா ஃபேஸ்லிஃப்ட்
Image Credit : Nexa Cars Website

கிராண்ட் விட்டாரா ஃபேஸ்லிஃப்ட்

இன்ஜின் பகுதியைப் பொறுத்தவரை பெரிய மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. தற்போதைய 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் தொடரும். மயில்டு ஹைப்ரிட் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கும். ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலில் eCVT டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சிஎன்ஜி வெர்ஷனும் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமாக இருக்கும்.

45
7 சீட்டர் கிராண்ட் விட்டாரா
Image Credit : Nexa Cars Website

7 சீட்டர் கிராண்ட் விட்டாரா

இந்த அப்டேட்டுடன் கூட, 7 சீட்டர் கிராண்ட் விட்டாரா பற்றிய தகவலும் ஆர்வத்தை கிளப்புகிறது. இது தனியான பெயரில் வெளியிடப்படலாம் என்றும், அதிக நீளத்துடன் கூடுதல் இருக்கை வசதியையும் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப பயணங்களை கருத்தில் கொண்டு இந்த மாடல் வடிவமைக்கப்படுவதால், மாருதியின் எஸ்யூவி வரிசையில் புதிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

55
புதிய கிராண்ட் விட்டாரா அம்சங்கள்
Image Credit : Google

புதிய கிராண்ட் விட்டாரா அம்சங்கள்

இதே நேரத்தில், பிரெஸ்ஸா மாடலுக்கும் ஒரு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் வரவிருக்கிறது. வெளிப்புறத்தில் புதிய கிரில், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் அலாய் வீல்கள் போன்ற மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. கேபினில் பெரிய டஸ்கிரீன், வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் பிரீமியம் ஃபினிஷ் கொண்ட டேஷ்போர்டு வழங்கப்படலாம். இன்ஜின் அமைப்பில் பெரிய மாற்றம் இல்லாமல், தற்போதைய பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் தொடரும் என்பதால், இது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் உணர்வையும் தரும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி கிராண்ட் விட்டாரா
குடும்ப கார்கள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Royal Enfield Scram 450: வேகம்... ஸ்டைல்... ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 450.. பைக் பிரியர்களே ரெடியா?
Recommended image2
பைக் சந்தையில் புதிய போட்டி.. எந்த பைக் முன்னிலை தெரியுமா? முழு ரிப்போர்ட்
Recommended image3
உங்கள் எலெக்ட்ரிக் வண்டி தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்? தப்பிக்க சூப்பர் வழிகள்!
Related Stories
Recommended image1
Business Idea: உங்க கார் மூலமா மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்... இத செஞ்சா போதும்!
Recommended image2
பழைய கார் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி? வாரண்டி, தரத்தை உறுதி செய்வது எப்படி? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved