MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • உங்க பழைய கார் புதுசு போல மாறணுமா? 6 மாதத்திற்கு ஒருமுறை இதையெல்லாம் மறக்காம செக் பண்ணுங்க!

உங்க பழைய கார் புதுசு போல மாறணுமா? 6 மாதத்திற்கு ஒருமுறை இதையெல்லாம் மறக்காம செக் பண்ணுங்க!

Car Maintenance Tips: கார் வாங்குவது மிகவும் எளிது. ஆனால் அவற்றை சரியான முறையில் தொடர்ந்து பராமரித்து வந்தால் தான் கார் நல்ல முறையில் இயங்கும். கார்கள் பராமரிப்பு குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : May 03 2026, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கார்கள் பராமரிப்பு மிகவும் முக்கியம்
Image Credit : AI

கார்கள் பராமரிப்பு மிகவும் முக்கியம்

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு தள்ளுபடி விலையில் கார்களை விற்பனை செய்து வருவதால் உயர் வர்க்கத்தினர் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் கார்களை வாங்கி வருகின்றனர். கார் வாங்குவது எளிது, ஆனால் அதை அப்படியே புதுசு போல பராமரிப்பது ஒரு கலை. கார்களை தொடர்ந்து பராமரித்து வந்தால் தான் அவை தொடர்ந்து நன்றாக இயங்கும். பருவநிலை மாற்றங்களாலும், கரடுமுரடான சாலைகளாலும் உங்கள் காருக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, 6 மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இன்ஜின் ஆயிலை கண்டிப்பாக செக் செய்யுங்கள்
Image Credit : Google

இன்ஜின் ஆயிலை கண்டிப்பாக செக் செய்யுங்கள்

பருவநிலை மாற்றங்கள் நம் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நம்முடைய கார்களையும் பாதிக்கிறது. அதனால், கார் நல்ல கண்டிஷனில் இருக்க, சரியான நேரத்தில் பராமரிப்பு செய்வது ரொம்ப முக்கியம். சின்ன விஷயங்களை கவனிக்காமல் விட்டால், பின்னாளில் பெரிய செலவு வைக்கக்கூடும். ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒருமுறை, இல்லையென்றால் அதிக தூரம் பயணம் செய்த பிறகு, இன்ஜின் ஆயிலை கண்டிப்பாக செக் செய்யணும். சுத்தமான ஆயில் இருந்தாதான் இன்ஜின் ஸ்மூத்தா இயங்கும். ஆயில் குறைந்தாலோ, அழுக்காக மாறினாலோ இன்ஜின் செயல்பாடு குறையும். அதேபோல, பிரேக் ஆயில் மற்றும் கூலன்ட் அளவையும் சரிபாருங்கள். இவை காரின் பாதுகாப்பிற்கு ரொம்ப முக்கியம்.

Related Articles

Related image1
Car AC: கார் ஏசி கூலிங் பத்தலையா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! சில்லுன்னு இருக்கும்!
Related image2
பழைய கார் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி? வாரண்டி, தரத்தை உறுதி செய்வது எப்படி? முழு விவரம்!
34
டயர்களில் சரியான காற்று அளவு அவசியம்
Image Credit : Gemini

டயர்களில் சரியான காற்று அளவு அவசியம்

டயர்களில் சரியான அளவு காற்று இருப்பது ரொம்ப அவசியம். டயர்கள் நல்லா இருந்தா மைலேஜ் அதிகமாகும், டிரைவிங்கும் பாதுகாப்பாக இருக்கும். முக்கியமாக மழைக்காலத்தில் தேய்ந்துபோன டயர்கள் விபத்துக்கு வழிவகுக்கும். அதேபோல, பேட்டரியையும் ஒவ்வொரு 6 மாசத்துக்கும் ஒருமுறை செக் பண்ணுங்க. பேட்டரி வீக்கா இருந்தா, கார் ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் வரும்.

வைப்பர்கள் சரியாக இருக்கிறதா?

ஏர் ஃபில்டர், கேபின் ஃபில்டர் அழுக்கா இருந்தால் இன்ஜின் செயல்பாடு குறையும், காருக்குள் வரும் காத்தும் சுத்தமாக இருக்காது. அதேபோல, ஹெட்லைட், இண்டிகேட்டர், பிரேக் லைட் எல்லாம் சரியா வேலை செய்கிறதா என்று பாருங்க. மழைக்காலத்தில் வைப்பர்கள் சரியா இல்லை என்றால் டிரைவிங் பண்றது ரொம்ப கஷ்டமாகிடும்.

44
ஸ்டியரிங்கில் ஏதாவது சத்தம் வந்தால்...
Image Credit : Google

ஸ்டியரிங்கில் ஏதாவது சத்தம் வந்தால்...

மோசமான ரோடுகளில் அதிகம் வண்டி ஓட்டினால், சஸ்பென்ஷன் பாதிப்படையும். இதனால, வண்டி ஓட்டும்போது அதிர்வுகள் அதிகமாகத் தெரியும். ஸ்டியரிங்கில் ஏதாவது சத்தம் அல்லது அதிர்வு வந்தால் உடனே செக் பண்ணனும். காரை உள்ளேயும் வெளியேயும் சுத்தமா வச்சுக்கிறது, சரியான நேரத்துக்கு சர்வீஸ் பண்றது ரொம்ப முக்கியம். இப்படி செய்தால் சின்ன பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சு பெரிய செலவைத் தவிர்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாகன பராமரிப்பு
கார் செய்தி
ஆட்டோ
வாகனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
TVS Motor: ஒரே மாதத்தில் 55,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்று புதிய சாதனை.. முழு லிஸ்ட் இதோ!
Recommended image2
Used Cars: மேனுவல் vs ஆட்டோமேட்டிக்: செகண்ட் ஹேண்ட் காரில் எது கெத்து? ரிப்போர்ட் சொல்வது என்ன?
Recommended image3
Ather EL01: கம்மி விலையில் அதிக மைலேஜ் தரும் புதிய ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ள ஏத்தர்!
Related Stories
Recommended image1
Car AC: கார் ஏசி கூலிங் பத்தலையா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! சில்லுன்னு இருக்கும்!
Recommended image2
பழைய கார் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி? வாரண்டி, தரத்தை உறுதி செய்வது எப்படி? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved