ஜனவரி 31க்கு பிறகு இந்த விலை கிடைக்காது! ஓடுங்க ஷோரூமுக்கு
மாருதி சுஸுகி தனது அரீனா நெட்வொர்க் கார்களுக்கு ரூ.1.70 லட்சம் வரை பம்பர் தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் ஜனவரி மாத சிறப்பு ரொக்கத் தள்ளுபடி ஆகியவற்றால் இந்த சேமிப்பு கிடைக்கிறது.

மாருதி சுஸுகி தள்ளுபடி
புதிய கார் வாங்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தவர்களுக்கு மாருதி சுசுகி ஒரு சூப்பர் செய்தியை கொடுத்துள்ளார். இந்தியாவின் கார் தயாரிப்பு நிறுவனம், தனது Arena நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு ரூ.1.70 லட்சம் வரை பம்பர் தள்ளுபடியைஅறிவித்துள்ளது. இந்த சலுகை ஜனவரி 31, 2026 வரை அல்லது கையிருப்பு உள்ளவரை மட்டும் செல்லுபடியாகும் என்பதால், கார் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.
ஸ்விஃப்ட் தள்ளுபடி
இந்த தள்ளுபடி இரண்டு முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று GST 2.0 காரணமாக ஏற்பட்ட விலை குறைப்பு, மற்றொன்று ஜனவரி மாதத்திற்கான சிறப்பு ரொக்கத் தள்ளுபடி. இதில் அதிகபட்ச பயன் பெறுவது S-Presso மாடல்தான். இந்த காருக்கு ரூ.1,29,600 ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் ரூ.40,500 ரொக்க தள்ளுபடி என மொத்தம் ரூ.1,70,100 சேமிப்பு கிடைக்கிறது. இதன் பிறகு, S-Presso-வின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3,49,900 ஆக குறைந்துள்ளது.
ஜனவரி கார் ஆஃபர்
மற்ற பிரபல மாடல்களிலும் கனிசமான தள்ளுபடி வழங்கப்படுகிறது. Alto K10 காருக்கு ரூ.1,48,100 வரை சேமிக்கலாம், அதன் புதிய விலை ரூ.3,69,900. Brezza SUV மீது ரூ.1,42,700 நன்மை வழங்கப்பட்டது, விலை ரூ.8,25,900 ஆக மாற்றப்பட்டுள்ளது. இளைஞர்கள் அதிகம் விரும்பும் Swift இப்போது ரூ.1,29,600 தள்ளுபடியுடன் ரூ.5,78,900-க்கு கிடைக்கிறது. மேலும் WagonR, Celerio, Eeco ஆகிய மாடல்களுக்கும் ரூ.1 லட்சத்தை தாண்டும் அளவில் சேமிப்பு உள்ளது.
மாருதி கார் விலை குறைப்பு
செடான் பிரிவில் Dzire காருக்கு மொத்தம் ரூ.90,200 தள்ளுபடி வழங்கப்படுகிறது. டாக்ஸி பயன்பாட்டுக்கான Dzire Tour S மாடலுக்கு ரூ.82,200 சேமிக்க வாய்ப்பு உள்ளது. இந்த பட்டியலில் குறைவான தள்ளுபடி Ertiga MPV-க்கு கிடைக்கிறது; அதிலும் ரூ.76,400 வரை நன்மை உள்ளது. இந்த சலுகையைப் பெற, ஜனவரி 31, 2026-க்குள் முன்பதிவு கட்டாயம். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள டீலர்களிடம் டீலர்-லெவல் தள்ளுபடி குறித்து விசாரித்தால் இன்னும் கூடுதல் சேமிப்பு கிடைக்கும்.

