மானிய விலையில் மின்சார வாகனங்கள்; ரூ. 10,900 கோடி செலவில் புதிய திட்டம்!
இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க PM E-Drive என்ற புதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை 9 ஆண்டுகளாக இயங்கி வந்த FAME திட்டத்திற்குப் பதிலாக, இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
PM E-DRIVE vs FAME
இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க PM E-Drive என்ற புதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை 9 ஆண்டுகளாக இயங்கி வந்த FAME திட்டத்திற்குப் பதிலாக, இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
PM E-DRIVE
இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 10,900 கோடி மானியம் வழங்க வழங்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், PM E-Drive திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
PM E-DRIVE subsidy
இந்தத் திட்டம் மின்சாரத்தில் இயங்கும் 24.79 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 14,028 பேருந்துகள் ஆகியவற்றுக்கு மானியம் கொடுக்கும். இந்த PM E-DRIVE திட்டம் 88,500 சார்ஜிங் மையங்களையும் ஆதரிக்கும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
Electric vehicle scheme
புதிய திட்டம் மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார மூன்று சக்கர வாகனங்கள், இ-ஆம்புலன்ஸ்கள், இ-டிரக்குகள் மற்றும் பிற வளர்ந்து வரும் மின்சார வாகனங்களை (EVs) ஊக்குவிக்க ரூ.3,679 கோடி மதிப்பிலான மானியங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.
Electric vehicle subsidy
மாநில போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து முகமைகள் மூலம் 14,028 இ-பஸ்களை கொள்முதல் செய்ய ரூ.4,391 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இ-ஆம்புலன்ஸ் சேவைக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சியாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல இ-டிரக்குகளை ஊக்குவிக்கவும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
Electric vehicle
இதற்கு முந்தைய ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனங்களுக்கான FAME திட்டம் ஏப்ரல் 2015 இல் தொடங்கப்பட்டது. 2024 மார்ச் மாதத்துடன் அந்தத் திட்டம் முடிவுக்கு வந்தது.