ஹூண்டாய் கார்கள் மீது ரூ.73,000 வரை தள்ளுபடி.. பிப்ரவரி மாத அதிரடி சலுகை
ஹூண்டாய் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் தனது கார்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. வெர்னா, எக்ஸ்டர், கிராண்ட் i10 நியோஸ், மற்றும் i20 போன்ற மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.73,000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் கார்கள் சலுகை மழை
புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு பிப்ரவரி மாதம் சிறப்பு வாய்ப்பாக அமையலாம். ஹூண்டாய் நிறுவனம் தனது பல்வேறு மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.73,000 வரை நன்மைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாடல் மற்றும் நகரத்தைப் பொறுத்து சலுகைகள் மாறுபடும்.
ஹூண்டாய் வெர்னா மாடல்
ஹூண்டாய் வெர்னா மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.73,000 வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்த செடான் கார் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தில் வந்த நிலையில், கூடுதல் சலுகை வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.10.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி மாடல்
ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி மாடலுக்கு ரூ.33,000 வரை நன்மைகள் கிடைக்கின்றன. குறைந்த விலையில் இந்த எஸ்யூவி, டாடா பஞ்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.5.68 லட்சம் முதல் தொடங்குகிறது.
கிராண்ட் i10 நியோஸ் மற்றும் i20 ஹாட்ச்பேக் மாடல்கள்
கிராண்ட் i10 நியோஸ் மற்றும் i20 ஹாட்ச்பேக் மாடல்களுக்கு தலா ரூ.48,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நகர பயணங்களுக்கு ஏற்ற இந்த கார்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.
28ம் தேதி வரை மட்டும் இந்த சலுகை
இந்த சலுகைகள் பிப்ரவரி 28, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும். இருப்பு நிலையைப் பொறுத்து விலை மற்றும் சலுகைகள் மாறலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

