- Home
- Auto
- Monsoon Car Maintenance Tips: மழையில் வண்டி சறுக்காமல் இருக்கணுமா? இந்த 6 விஷயங்களை செக் பண்ணுங்க!
Monsoon Car Maintenance Tips: மழையில் வண்டி சறுக்காமல் இருக்கணுமா? இந்த 6 விஷயங்களை செக் பண்ணுங்க!
Monsoon Car Maintenance Tips: மழைக்காலத்தில் பைக், கார் ஓட்டுவதே பெரும் சவால் தான். மழைக்காலங்களில் ஆபத்து இல்லாமல் வண்டி ஓட்டுவது குறித்து எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மழைக்காலங்களில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிக்கல்
மழைக்காலங்கள் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இது கொஞ்சம் சவாலான நேரம்தான். சாலையில் தேங்கும் தண்ணீர், வழுக்கும் சாலை, சேறு, வெளிச்சம் குறைவாக இருப்பது எனப் பல பிரச்சனைகள் வரும். இதனால், மழைக்காலம் வருவதற்கு முன்னாடியே உங்கள் வாகனத்தைச் சரியாகப் பராமரித்தால், விபத்துகளை எளிதாகத் தவிர்க்கலாம். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
வாகனத்தின் டயர்களை கவனியுங்கள்
மழைக்காலத்தில் கார் டயர்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம். டயர் ரொம்பத் தேய்ந்து போயிருந்தால், ஈரமான சாலையில் கிரிப் கிடைக்காது. இதனால் வாகனம் சறுக்குவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால், டயரின் டிரெட் அளவைச் செக் பண்ணுங்கள். அது குறைவாக இருந்தால், புது டயர் மாற்றுவது நல்லது. எல்லா டயரிலும் காற்று அழுத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
வைப்பர் சரியாக வேலை செய்கிறதா?
கனமழை பெய்யும்போது, வெளிச்சம் குறைவாக இருப்பதாலும், மழைத் தண்ணீரினாலும் டிரைவருக்கு முன்னாடி இருப்பது சரியாகத் தெரியாது. இந்த நேரத்தில், காரின் கண்ணாடியில் இருக்கும் தண்ணீரைத் துடைக்க வைப்பர்தான் உதவும். உங்கள் வைப்பர் பழையதாகி இருந்தால், மழைக்காலத்திற்கு முன்னாடியே மாற்றிவிடுங்கள். அதோடு, விண்ட்ஷீல்டு வாட்டர் டேங்கில் போதுமான அளவுக்கு லிக்விட் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
பிரேக்கை செக் செய்வது அவசியம்
மழைக்காலத்தில் வாகனத்தின் பிரேக் சரியாக வேலை செய்கிறதா? என்று பார்ப்பது ரொம்ப முக்கியம். பிரேக் பிடிக்கும்போது சத்தம் வந்தாலோ, அல்லது பிரேக் பிடித்தும் வாகனம் நிற்காமல் போனாலோ, உடனே பிரேக்கை மாற்றிவிடுங்கள். சர்வீஸ் சென்டருக்குப் போய் பிரேக் சம்பந்தமான வேலைகளை முடித்துவிடுங்கள். பிரேக் பேட், டிஸ்க், பிரேக் ஃப்ளூயிட் எல்லாவற்றையும் செக் பண்ணினால், மழைக்காலத்தில் எந்தப் பிரச்சனையும் வராது.
பேட்டரி ஹெல்த் முக்கியம்
அதிக ஈரப்பதம், தண்ணீரால் பேட்டரி நின்றுபோக வாய்ப்பிருக்கிறது. பேட்டரி டெர்மினல்களில் துரு பிடித்திருந்தால், அதை நீங்கள்தான் சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் பேட்டரி ரொம்ப பழையதாகி இருந்தால், அது எவ்வளவு நாள் உழைக்கும் என்று ஒருமுறை செக் செய்யுங்கள்.
டிரெயினேஜ் சிஸ்டம் மற்றும் ரப்பர் சீல்ஸ்
காரின் சன்ரூஃப், கதவுகளில் இருக்கும் சின்ன சின்ன வடிகால் ஓட்டைகளில் சில சமயம் தூசி அடைத்துக்கொள்ளும். இதனால் தண்ணீர் வெளியே போவதற்குப் பதிலாக, வாகனத்திற்குள்ளேயே சேர ஆரம்பிக்கும். அதே மாதிரி, கதவு, ஜன்னல்களில் இருக்கும் ரப்பர் சீல்களையும் செக் பண்ணுங்கள். அது டேமேஜ் ஆகியிருந்தால், மழைத் தண்ணீர் கேபினுக்குள் வர வாய்ப்பிருக்கிறது.
லைட்ஸ் மற்றும் எலக்ட்ரிக் சிஸ்டம்
ஹெட்லைட்ஸ், டெயில்லைட்ஸ், ஃபாக் லைட், இண்டிகேட்டர் எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்று பாருங்கள். மழைக்காலத்தில் வெளிச்சம் குறைவாக இருக்கும்போது, இதெல்லாம் சரியாக இருந்தால்தான் பாதுகாப்பாக ஓட்ட முடியும். பழுதான பல்ப்புகளை மாற்றிவிடுங்கள். இந்த மாதிரி சின்ன சின்ன

