- Home
- Auto
- மிரளவிடும் கருப்பு + ஆரஞ்சு ஸ்போர்ட்டி டிசைன்.. புதிய ஹோண்டா எலிவேட் ADV எடிஷன்.. விலை, விவரங்கள் இதோ
மிரளவிடும் கருப்பு + ஆரஞ்சு ஸ்போர்ட்டி டிசைன்.. புதிய ஹோண்டா எலிவேட் ADV எடிஷன்.. விலை, விவரங்கள் இதோ
ஹோண்டா தனது எலிவேட் SUV-யின் புதிய ADV எடிஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஸ்டைலான தோற்றம் மற்றும் செயல்திறன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ஹோண்டா எலிவேட் ADV எடிஷன்
இந்தியாவில் பிரீமியம் கார்களுக்கு பெயர்பெற்ற ஹோண்டா, தனது பிரபல SUV மாடல் எலிவேட்டை ADV எடிஷனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாகச பயணங்களை ரசிக்கும் இளம் பயனர்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட இந்த புதிய எடிஷன், டிசைன் மற்றும் பில்ட் குவாலிட்டியில் பெரிய மேம்பாடுகளுடன் வருகிறது. சக்திவாய்ந்த i-VTEC என்ஜின், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், மற்றும் ஸ்போர்ட்டி ஸ்டைல்-அனைத்தும் ஒரே தொகுப்பில் கிடைக்கிறது.
வெளிப்புற டிசைன்
புதிய எலிவேட் ஏடிவி எடிஷன், ரோட்டில் பார்வையை கவரும் வகையில் கருப்பு மற்றும் ஆரஞ்சு ஆக்சென்ட் டிசைன்களுடன் வருகிறது. முன்பகுதியில் அக்கிரமமான Alpha-Bold Plus கிரில், பிளாக் அவுட் டிசைன், ரூஃப் ரெயில்கள், கருப்பு ORVMகள் மற்றும் ஷார்க் பின் ஆண்டெனா—அனைத்தும் தடிமனான தன்மையை சேர்க்கின்றன. பக்கங்களில் ADV லோகோ, ஆரஞ்சு கலர் ஹைலைட் ஃபாக் கார்னிஷ், மற்றும் புதிய கருப்பு அலாய் வீல்ஸ்அசத்தலான தோற்றத்தை வழங்குகின்றன.
ஸ்போர்ட்டி எஸ்யூவி
கேபின் முழுவதும் கருப்பு + ஆரஞ்சு தீம் உள்ளது. இருக்கைகள், டோர் டிரிம்கள், கியர் நாப் ஆகியவற்றில் அழகை சேர்க்கிறது. புதிய ADV டெரெய்ன் பேட்டர்ன் பேக்லிட் பேனல் கேபினுக்கு பிரீமியம் மற்றும் எதிர்கால உணர்வை கொடுக்கிறது. விருப்பமாக 360° சரவுண்ட் கேமரா வசதியும் கிடைக்கும். முன்/பின் சீட்களில் ADV லோகோ, ஆரஞ்சு டச் என அனைத்தும் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.
செயல்திறன், பாதுகாப்பு & விலை
இந்த மாடலில் அதே 1.5-லிட்டர் i-VTEC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேனுவல் (6-வேகம்) / CVT (7-வேகம்) ஆப்ஷன்கள் கிடைக்கும். ஹோண்டா சென்சிங் ADAS அம்சங்கள் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. 6 ஏர்பேக், ஹில் அசிஸ்ட், வாகன நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு, மற்றும் ISOFIX கூட உள்ளது.
விலை: ரூ.15.29 லட்சம் (MT) முதல், ரூ.16.46 லட்சம் (CVT) வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). மொத்தத்தில், ஹோண்டா எலிவேட் ஏடிவி எடிஷன் ஸ்டைல், சக்தி மற்றும் உயர்தர பாதுகாப்பை விரும்புவோருக்கான சரியான எஸ்யூவியாக உள்ளது.