MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • இந்தியர்கள் எதிர்பார்த்த கார்! பெரிய ஸ்கிரீன், பிரீமியம் லுக்! மிரட்டும் Honda City Facelift

இந்தியர்கள் எதிர்பார்த்த கார்! பெரிய ஸ்கிரீன், பிரீமியம் லுக்! மிரட்டும் Honda City Facelift

Honda City Facelift: ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : May 21 2026, 05:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
புதிய காரை களமிறக்கும் ஹோண்டா
Image Credit : x

புதிய காரை களமிறக்கும் ஹோண்டா

இந்திய மார்க்கெட்டில் தங்களது இடத்தை வலுப்படுத்த, ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து பல புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. 2028-க்குள் ஒரு புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி மற்றும் ஒரு மிட்-சைஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில், தங்களின் பிரபலமான செடான் காரான ஹோண்டா சிட்டிக்கு ஒரு புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தவும் ஹோண்டா தயாராகி வருகிறது. இந்த புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட், ஷோரூம்களுக்கு வரத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரீமியம் மற்றும் மாடர்ன் லுக்

மே 22ம் தேதி (அதாவது நாளை) ஹோண்டா இந்த புதிய சிட்டி காரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் முன்பக்கத்தில்தான் மிக முக்கியமான டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, ஹெட்லைட் யூனிட்டுக்கு உள்ளேயே LED DRL-கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய DRL-கள், சென்டர் லைட் பார் உடன் இணைக்கப்பட்டு, புதிய கிரில்லுக்குள் மறைந்திருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இது காரின் முன்பக்கத்தை மேலும் பிரீமியம் மற்றும் மாடர்னாக காட்டுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
டிசைனில் என்னென்ன மாற்றங்கள்?
Image Credit : Google

டிசைனில் என்னென்ன மாற்றங்கள்?

ஹெட்லைட் செட்டப்பில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பம்பர் முற்றிலும் புதிய டிசைனில், முன்பை விட ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கிறது. மேலும், காரின் முன்பக்கத்தில் ஒரு கேமரா காணப்படுகிறது. இது அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் (ADAS) அல்லது 360-டிகிரி கேமரா வசதி இதில் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

காரின் பக்கவாட்டுத் தோற்றத்தில் நிறுவனம் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. புதிய ஹோண்டா சிட்டி அதன் கிளாசிக் மற்றும் கம்பீரமான டிசைனைத் தக்கவைத்துள்ளது. ஆனாலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கறுப்பு நிற ஃபினிஷிங் கொண்ட அலாய் வீல்கள், காருக்கு ஒரு ஸ்போர்ட்டி டச் கொடுக்கின்றன. இவை முந்தைய மாடலைப் போலவே 16-இன்ச் வீல்களாக இருக்க வாய்ப்புள்ளது.

பம்பர் டிசைனும் மாற்றம்

காரின் பின்பக்க டிசைனும் முதல் முறையாக வெளியாகியுள்ளது. டெயில் லைட்கள் அதன் அடிப்படை வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டாலும், அவற்றுக்கு 'ஸ்மோக்டு ஃபினிஷ்' கொடுக்கப்படலாம். இது காரின் ஸ்போர்ட்டியான தோற்றத்தை இன்னும் அதிகரிக்கும். டிசைன் கவர்ச்சியை கூட்ட, ஒரு பெரிய ரியர் ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டுள்ளது. பம்பர் டிசைனும் மாற்றியமைக்கப்பட்டு, பழைய 'C' வடிவ பாகங்கள் நீக்கப்பட்டு, புதிய மற்றும் ஸ்போர்ட்டியான டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

33
புதிய வசதிகள் என்னென்ன?
Image Credit : Google

புதிய வசதிகள் என்னென்ன?

இன்டீரியரைப் பொறுத்தவரை, புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்டில் பல அப்டேட்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரில் புதிய மற்றும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மாடலில் 8-இன்ச் ஸ்கிரீன் உள்ள நிலையில், புதிய காரில் இதைவிட பெரிய டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கிரீன், டேஷ்போர்டில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருப்பது போல வடிவமைக்கப்பட்டு, ஒரு பிரீமியம் தோற்றத்தைக் கொடுக்கிறது.

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பிரீமியம் ஆடியோ சிஸ்டமும் இதில் இடம்பெறலாம். கறுப்பு மற்றும் பீஜ் நிற இன்டீரியர், ஆம்பியன்ட் லைட்டிங், பீஜ் நிற சீட் அப்ஹோல்ஸ்டரி போன்றவை இந்த காரில் இருக்கும் என மீடியா ரிப்போர்ட்டுகள் கூறுகின்றன.

இன்ஜின் எப்படி இருக்கும்?

இன்ஜினைப் பொறுத்தவரை, தற்போதைய 1.5 லிட்டர், 4-சிலிண்டர், நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். ஒரு லிட்டருக்கு 27.1 கிமீ வரை மைலேஜ் தரும் என கூறப்படும் சிட்டி e:HEV ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ செய்திகள்
ஆட்டோ
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
WagonR: வெறும் ரூ.2.25 லட்சத்தில் மின்சார காராக மாறிய பழைய வேகன்ஆர்! 110 கி.மீ பயணிக்குமா?
Recommended image2
டாடா அல்ட்ராஸ் முதல் கியா சோனெட் வரை: ரூ. 10 லட்சத்திற்குள் கிடைக்கும் 5 சிறந்த டீசல் கார்கள்!
Recommended image3
மழைக்காலத்தில் பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும்? சூப்பரான டிப்ஸ் இதோ!
Related Stories
Recommended image1
பைக், கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... இனி தினமும் புதிய விலை? நடுத்தர மக்களுக்கு புதிய சுமை!
Recommended image2
Tata Motors SUV : 5 மாதத்தில் 30,000 கார்கள் விற்று மாஸ் காட்டும் டாடா மோட்டார்ஸ்.. எந்த கார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved