MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 3 மணி நேரத்தில் ஃபுல் சார்ஜ்! 150 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா ஆக்டிவா EV விரைவில் ரிலீஸ்!

3 மணி நேரத்தில் ஃபுல் சார்ஜ்! 150 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா ஆக்டிவா EV விரைவில் ரிலீஸ்!

எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விரைவில் வெளியாகிறது. இந்த ஸ்கூட்டர் மிகச் சிறந்த ரேஞ்ச் மற்றும் பயனுள்ள புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய விவரங்களைத் இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

2 Min read
Author : SG Balan
| Updated : Oct 08 2024, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Honda Activa Electric Scooter

Honda Activa Electric Scooter

இந்தியாவில் இப்போது மின்சார வாகனங்கள்தான் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக உள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நீங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சிரமப்படுகிறீர்கள் என்றால், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றின் வெளியீட்டிற்கு இன்னும் கொஞ்சம் காத்திருங்கள். ஹோண்டாவின் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக உள்ளது.

26
Honda Activa EV

Honda Activa EV

வரவிருக்கும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த ஸ்கூட்டரின் ரேஞ்ச் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

36
Honda Activa Electric

Honda Activa Electric

ஹோண்டாவின் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய தலைமுறையினரின் விரும்பும் வாகனமாக இருக்கும். குறிப்பாக, இளம் பெண்கள் வாங்க விரும்பும் முதல் தேர்வாக இருக்கும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் போன்ற அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

46
2025 Honda Activa Electric

2025 Honda Activa Electric

இதனுடன், ட்ரிப் மீட்டர், மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் ப்ளூடூத் இணைப்பு போன்ற அம்சங்களுடன் மியூசிக் கண்ட்ரோல் சிஸ்டமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மின்சார ஸ்கூட்டரின் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் இருக்கலாம். 3.2 kW பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 3 மணிநேரம் தான் என்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

56
Honda Activa Electric Scooter Price in India

Honda Activa Electric Scooter Price in India

ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டர் சுமார் 1.20 லட்சத்தில் சந்தைக்கு வரும் என்று பல்வேறு கணிப்புகள் சொல்கின்றன. ஆனால், ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறித்து ஹோண்டா நிறுவனம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், அறிமுகச் சலுகையாக EMI ஆப்ஷன்கள் இருக்கும்.

66
Honda Activa Electric Scooter launch date

Honda Activa Electric Scooter launch date

ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீட்டுத் தேதியை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால், மார்ச் 2025 இல் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று அறிய முடிகிறது. அதற்கு இன்னும் 6 மாதங்கள்தான் அவகாசம் உள்ளது. எனவே, சீக்கிரமே ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஹோண்டா ஆக்டிவா

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாங்குனா இப்படி ஒரு ஸ்கூட்டர் வாங்கணும்..! 'லைஃப்டைம்' வாரண்டியுடன் களமிறங்கும் டாப் இ-ஸ்கூட்டர்கள்..!
Recommended image2
ரூ.1.37 லட்சத்தில் ராயல் என்ஃபீல்ட் பைக்.. 36.2 கி.மீ மைலேஜ் தருது.. எந்த மாடல்?
Recommended image3
ரூ.1 லட்சம் கூட இல்ல.. நடுத்தர குடும்பங்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள்.. அட! இவ்வளவு வசதிகளா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved