MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Bike : ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் vs பிளாட்டினா 100 - விலை மற்றும் மைலேஜில் எந்த பைக் பெஸ்ட்?

Bike : ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் vs பிளாட்டினா 100 - விலை மற்றும் மைலேஜில் எந்த பைக் பெஸ்ட்?

Hero Splendor vs Bajaj Platina : தினசரி பயணங்களுக்கு ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 இரண்டுமே நல்ல சாய்ஸ். விலையில் பிளாட்டினா 100 மலிவாக இருந்தாலும், மைலேஜிலும் அதுவே கொஞ்சம் முன்னிலையில் உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 14 2026, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Hero Splendor Plus vs Bajaj Platina 100
Image Credit : bikewale

Hero Splendor Plus vs Bajaj Platina 100

உங்களுடைய தினசரி பயணம் ரொம்ப தூரமா? நல்ல மைலேஜ் தரக்கூடிய, பராமரிக்க சுலபமான, பட்ஜெட்டுக்குள் அடங்கும் ஒரு பைக்கை தேடுகிறீர்களா? அப்படியென்றால், ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 ஆகிய இரண்டுமே உங்களுக்கு சிறந்த தேர்வுகளாக இருக்கும். குறிப்பாக, ஆபீஸ் செல்பவர்கள், டெலிவரி அல்லது சிறு தொழில் செய்பவர்கள், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையே தினமும் பயணிப்பவர்கள் மத்தியில் இந்த பைக்குகளுக்கு அதிக மவுசு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விலையில் எது மலிவானது?
Image Credit : bikewale

விலையில் எது மலிவானது?

பட்ஜெட் விஷயத்தில், ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்கை விட பஜாஜ் பிளாட்டினா 100 விலை குறைவானது. எனவே, குறைந்த பட்ஜெட்டில் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு பிளாட்டினா ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் விலை சற்று அதிகமாக இருந்தாலும், அதன் நீடித்த உழைப்பு மற்றும் நம்பகமான செயல்திறனுக்காக நீண்ட காலமாகவே பெயர் பெற்றது. விலையை ஒப்பிடும்போது, பஜாஜ் பிளாட்டினா 100-ன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.68,000 ஆகும். அதேசமயம், ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்-ன் விலை சுமார் ரூ.76,000. அதாவது, இரண்டு பைக்குகளுக்கும் இடையே சுமார் ரூ.8,000 வரை விலை வித்தியாசம் உள்ளது.

34
மைலேஜில் யார் கில்லி?
Image Credit : bikewale

மைலேஜில் யார் கில்லி?

மைலேஜ் விஷயத்தில் இரண்டு பைக்குகளுமே பட்டையைக் கிளப்புகின்றன. நிறுவனத்தின் தகவல்படி, ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் ஒரு லிட்டருக்கு சுமார் 70 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. மறுபுறம், பஜாஜ் பிளாட்டினா 100 ஒரு லிட்டருக்கு சுமார் 70 முதல் 75 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும். நீண்ட தூர பயணத்தைப் பொறுத்தவரை, ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் ஒரு முழு டேங்கில் சுமார் 680 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். ஆனால், பிளாட்டினா 100 ஒரே டேங்கில் சுமார் 800 கிலோமீட்டர் வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது. எனவே, அதிக மைலேஜ் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பிளாட்டினா சற்று சிறந்த தேர்வாக அமையலாம்.

44
சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்
Image Credit : bikewale

சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்

ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்கில், நிறுவனத்தின் i3S தொழில்நுட்பம் உள்ளது. இது, டிராஃபிக் சிக்னல்களில் நிற்கும்போது பைக்கை தானாகவே ஆஃப் செய்து, மீண்டும் கிளம்பும்போது ஆன் செய்வதன் மூலம் எரிபொருளை சேமிக்க உதவுகிறது. மேலும், சைடு-ஸ்டாண்ட் போட்டால் இன்ஜின் கட்-ஆஃப் ஆகும் பாதுகாப்பு அம்சமும் இதில் உள்ளது. அதேசமயம், பஜாஜ் பிளாட்டினா 100 அதன் சொகுசான பயண அனுபவத்திற்கு பெயர் பெற்றது. கரடுமுரடான மற்றும் சமமற்ற சாலைகளில் கூட, அதன் மென்மையான சஸ்பென்ஷன் அதிர்வுகளைக் குறைத்து இதமான பயணத்தை உறுதி செய்கிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்
பஜாஜ் பிளாட்டினா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்: சிட்டி டிரைவிங்கிற்கு எது பெஸ்ட்?
Recommended image2
Honda Activa 6G : ஹோண்டா ஆக்டிவா ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது? பலரும் வாங்க 5 முக்கிய காரணங்கள்!
Recommended image3
ராயல் என்ஃபீல்டில் முதல்முறை: 750cc ட்வின் எஞ்சின் + 120 கி.மீ க்ரூஸிங் வேகம்; ஹிமாலயன் 750-ன் மிரட்டலான சிறப்பம்சங்கள்!
Related Stories
Recommended image1
அதிக மைலேஜ் கொடுத்தும் பிளாட்டினா 110-ஐ நிறுத்தும் பஜாஜ்; என்ன காரணம்?
Recommended image2
ரூ.71000ல் 70 Km மைலேஜ் தரும் பஜாஜ் பிளாட்டினா பைக்! புதிய அப்டேட்களுடன் வெளியான Platina
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved