ரூ.15,743 விலை கம்மி.. ஹீரோ பைக், ஸ்கூட்டர்களில் அதிரடி விலை குறைப்பு
ஜிஎஸ்டி குறைப்பைத் தொடர்ந்து, ஹீரோ மோட்டோகார்ப் தனது அனைத்து பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையைக் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு பண்டிகை காலத்திற்கு முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த செய்தியாகும்.

ஹீரோ புதிய விலைப்பட்டியல்
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி குறைப்பை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் பேரில், ஹீரோவின் அனைத்து பைக்குகளும், ஸ்கூட்டர்களும் செப்டம்பர் 22 முதல் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
ஹீரோ மோட்டோகார்ப் விலை குறைப்பு
மத்திய அரசு 350cc-க்கு குறைவான பைக்குகளின் மீது வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை 28% இலிருந்து 18% ஆகக் குறைந்துள்ளது. Hero-வின் அனைத்து வாகனங்களும் இந்த பிரிவிற்குள் வருவதால், ஒவ்வொரு மாதலுக்கும் விலை குறைப்பு கிடைத்துள்ளது. இதில், மிகப்பெரிய சேமிப்பு Karizma 210-க்கு ஆகும். இது தற்போது ரூ.15,743 வரை மலிவாகியுள்ளது.
ஸ்பிளெண்டர் புதிய விலை
மேலும், Xpulse 210 ரூ.14,516 குறைப்பு, Xtreme 250R ரூ.14,055 குறைப்பு பெற்றுள்ளன. பொது பயணிகளின் விருப்பமான Splendor+ ரூ.6,820 குறையும், HF Deluxe ரூ.5,805 குறையும் போது, Passion+ ரூ.6,500 குறையும். உலகின் அதிகம் விற்கப்படும் பைக் என்ற பெயர் பெற்ற Splendor கூட இப்போது இன்னும் மலிவான விலையில் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாகும்.
ஸ்கூட்டர் விலை குறைப்பு
ஸ்கூட்டர் மாடல்களும் இந்த விலை குறைப்பால் பலன் பெற்றுள்ளன. Pleasure+ ரூ.6,417, Destini 125 ரூ.7,197, Xoom 160 ரூ.11,602 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் Xoom 110, Xoom 125, Glamour X, Super Splendor XTEC, Xtreme 125R, Xtreme 160R 4V போன்ற மாடல்களும் பல ஆயிரம் ரூபாய்கள் குறைந்துள்ளன.
ஹீரோ பண்டிகை சலுகை
பண்டிகை சீசனுக்கு முன்பாக வந்துள்ள இந்த விலை குறைப்பு, ஹீரோவின் விற்பனையை அதிகரிப்பதோடு, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பைக்குகள் ஸ்கூட்டர்களை இன்னும் எளிதாகக் கிடைக்கச் செய்யும். மலிவு விலை, அதிக வசதி, மற்றும் பண்டிகை கால சலுகைகள் இணைந்ததால், வாகனங்களை வாங்க சரியான நேரம் ஆகும்.