- Home
- Auto
- பெட்ரோல் பங்க் பக்கம் போகவே வேண்டாம்..! ஒரே சார்ஜில் 151 கிமீ பறக்கும் 5 மாஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!
பெட்ரோல் பங்க் பக்கம் போகவே வேண்டாம்..! ஒரே சார்ஜில் 151 கிமீ பறக்கும் 5 மாஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!
பெட்ரோல் செலவை குறைக்க விரும்புவோருக்கு எலக்ட்ரிக் பைக்குகள் சிறந்த மாற்றாக மாறி வருகின்றன. ஒரே சார்ஜில் 151 கிமீ வரை பயணிக்கும், விலை குறைவான 5 எலக்ட்ரிக் பைக்குகள் தற்போது இந்திய சந்தையில் கவனம் ஈர்த்துள்ளன.

சிறந்த மைலேஜ் தரும் மின்சார பைக்குகள்
இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினசரி அலுவலகம், கல்லூரி மற்றும் நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற எலக்ட்ரிக் பைக்குகள் மீது வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஒரு சார்ஜில் 150 கிலோமீட்டருக்கும் அதிகமாக செல்லக்கூடிய, அதே நேரத்தில் விலை குறைவாக கிடைக்கும் சில எலக்ட்ரிக் பைக்குகள் சந்தையில் கவனம் ஈர்த்துள்ளன.
ஓலா ரோட்ஸ்டர்
இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது Ola Roadster. இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் ஆரம்ப விலை சுமார் ரூ.1.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). 2.5 kWh, 3.5 kWh மற்றும் 4.5 kWh என மூன்று பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது. அடிப்படை மாடல் ஒரே சார்ஜில் 151 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என நிறுவனம் தெரிவிக்கிறது. OTA அப்டேட்கள், பல ரைடிங் மோடுகள் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஓபன் ரோர் EZ
அடுத்ததாக Oben Rorr EZ / Rorr Evo மாடல்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. Oben நிறுவனத்தின் ஆரம்ப விலை சுமார் ரூ.99,000 முதல் தொடங்குகிறது. Rorr EZ மாடல் அதிகபட்சமாக 175 கிமீ வரை ரேஞ்ச் வழங்குவதாகவும், புதிய Rorr Evo மாடல் 180 கிமீ வரை செல்லக்கூடியதாகவும் கூறப்படுகிறது. மேலும் 110 கிமீ வேகத்தையும் எட்டக்கூடிய திறன் கொண்டது.
ரெவால்ட் RV400
மூன்றாவது இடத்தில் Revolt RV400 உள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் பைக்குகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சுமார் ரூ.1.40 லட்சம் விலையில் கிடைக்கும் இந்த பைக், ஒரு சார்ஜில் 150 கிமீ வரை பயணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அகற்றக்கூடிய பேட்டரி, ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் செயற்கை எஞ்சின் ஒலி போன்ற தனித்துவமான அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
Matter Aera
நான்காவது இடத்தில் Matter Aera உள்ளது. இந்தியாவின் முதல் கியர் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. நவீன தொழில்நுட்ப வசதிகள், டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களால் இது இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Odysse Vader
ஐந்தாவது இடத்தில் Odysse Vader உள்ளது. நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பைக்கில் 3 kW மோட்டார், 85 கிமீ வேகம் மற்றும் 125 கிமீ வரை ரேஞ்ச் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதோடு, ஸ்மார்ட் நெவிகேஷன், மொபைல் கனெக்டிவிட்டி மற்றும் பல வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
எலக்ட்ரிக் பைக் வாங்க நினைப்பவர்கள், நிறுவனங்கள் குறிப்பிடும் ரேஞ்ச் மற்றும் நிஜ வாழ்க்கை ரேஞ்ச் ஆகியவற்றில் வித்தியாசம் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். போக்குவரத்து நெரிசல், வேகம், சாலையின் தன்மை மற்றும் ரைடிங் முறை ஆகியவற்றைப் பொறுத்து உண்மையான ரேஞ்ச் 20 முதல் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என EV துறையினர் கூறுகின்றனர்.
மொத்தத்தில், ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் நீண்ட ரேஞ்ச், ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுடன் எலக்ட்ரிக் பைக் வாங்க விரும்புபவர்களுக்கு Ola Roadster, Oben Rorr, Revolt RV400, Matter Aera மற்றும் Odysse Vader ஆகியவை தற்போது சிறந்த தேர்வுகளாக பார்க்கப்படுகின்றன.

