MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ போலாம்.!வெள்ள நீரில் சிக்கினாலும் பாதிப்பு இல்லை; அசத்தும் மகேந்திரா கார்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ போலாம்.!வெள்ள நீரில் சிக்கினாலும் பாதிப்பு இல்லை; அசத்தும் மகேந்திரா கார்

தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மகேந்திரா XUV900 மற்றும் BE.06 மின்சார கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முழு சார்ஜில் 500 கி.மீ தூரம் செல்லும் இந்த கார்கள் தானியங்கி பார்க்கிங் உள்ளிட்ட பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளன.

3 Min read
Author : Ajmal Khan
| Updated : Jan 13 2025, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட , மகேந்திரா நிறுவனத்தின் மின்சாரக் கார்களான XEV 9 மற்றும்  BE 6 கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முழு அளவில் சார்ஜ் செய்யப்பட்டால் 500 கி.மீ தீரம் செல்லும் வகையிலான இந்த இரண்டு வகை மின்சார கார்களும் தானியங்கி முறையில் ஓட்டுநர் இல்லாமலயே பார்க்கிங் செய்து கொள்வது  உள்ளிட்ட நவீன வசதிகளை முதலமைச்சர் நேரில் பார்த்தறிந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரா கார் தொழில்நுட்பம் மற்றும்   மேம்பாட்டுப் பிரிவு தலைவர் வேலுசாமி, " நாளை முதல் இந்த இரண்டு மின்சார  கார்களின் சோதனை ஓட்டம் தொடங்கும் . ஏற்கனவே இந்த கார்களை அறிமுகம்  செய்து விட்டோம். இரண்டு கார்களுமே முழுவதும் மின்சார கார்களாக உள்ளன. 
கார்களின் பேட்டரி 20 நிமிடத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும் , முழு அளவில்  சார்ஜ் ஆனவுடன்  500 கி.மீ தூரம் வரை செல்லும் . குறைத்த நேரத்தில் சார்ஜ் ஆவது , அதிக தூரம் செல்வது இரண்டும்தான் இந்த கார்களின் சிறப்பம்சம். 

37

இந்த கார்களில் Virtual auto park எனும் வசதி உள்ளது.  காரை விட்டு இறங்கி வெளியில் சென்று VAP மோடை அழுத்தினால் கார் தானியங்கி முறையில் முன்னோக்கி , பின்னோக்கி நகர்ந்து அதுவே பார்க்கிங் ஆகி கொள்ளும். ஒருவேளை பார்க்கிங் அவதை தடுக்கும் வகையில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் அது குறித்து சத்தம் எழுப்பி எச்சரிக்கை செய்துவிடும் . இந்த கார்களில் 12 ultaras sonic சென்சார்கள்  , 6 camera , 5 radar கள் உள்ளன. 

 

47

வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநரின் கருவிழியை கவனிக்கும் வகையில் கேமராக்கள் உள்ளன , ஓட்டுநர் நேராக சாலையை பார்க்காமல் வேறு எங்கும் பார்த்தால் , எச்சரிக்கை செய்வதுடன்  ஸ்டியரிங் தானாகவே அசைந்தும் , திரும்பியும்  சரியான பாதையில் கார் செல்வதை உறுதி செய்யும் என தெரிவித்தார். 

57

Navigation முறையில் எந்த சாலையில் செல்ல வேண்டுமோ அந்த சாலைக்கு  arrow காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளோம். போக்குவரத்து நெரிசலில் 30..20..50 என speed limit ஐ அதுவே  பரிந்துரைக்கும் .காருக்குள் 3 திரைகள்  , 16 speaker அமைக்கப்பட்டுள்ளன. இந்த விலையில் உள்ள  ஆடி ,  பென்ஸ் கார்களில் கூட இந்தளவு ஆடியோ சிஸ்டம் கிடையாது. பாடல் இசைக்கு ஏற்ற உள்ளே உள்ள விளக்குகள் மின்னி  நடனம் ஆடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த கார்களை  Pack 3 கார்களாக சந்தையில் அறிமுகப்படுத்துகிறோம். அதன்டி  XEV 9 e கார்கள் 39.5 லட்சமும் , BE 6 கார்கள் 26.9 லட்சமும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

67

கார்கள் நெடுஞ்சாலையில்  போகும்போது ஒரு Laneல் இருந்து மறு lane க்கு மாற indicator போட்டாலே போதும் , அந்த Lane ல் வேறு வாகனங்கள் இல்லை என்பதை உறுதி செய்து தானாகவே கார்கள் அடுத்த lane க்கு சென்றுவிடும்.  சாலையின் குறுக்கே மாடு நின்றால் அதை கண்டறிந்து தானாகவே கார் நின்று விடும். நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஓட்டுனர் உள்ளே அமர்ந்திருப்பது அவசியம். ஆனாலும் ஓட்டுநர் விருப்பப்பட்டால் கார் தானகவே சாலைகளுக்கு ஏற்ப  வளைந்து செல்லும் வகையில் Mode மாற்றிக் கொள்ள முடியும். 

77

வெள்ள நீரால்  இந்த வகை கார்கள் பாதிக்கப்பட்டது  , Battery test செய்தபோது 48 மணி நேரம்  தண்ணீருக்குள்ளேயே இந்த கார்களின் பேட்டரிகள் வைக்கப்பட்டு  இருந்தன. 12 மீ உயர்ரத்தில் இருந்து கீழே போட்டாலும் பேட்டரி   உடையாது. வீடுகளில் Ac power charge முறையில் 2 காரினையும் சார்ஜ் செய்ய முடியும் . நெடுஞ்சாலைகளிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முழு அளவில் சார்ஜ. செய்தால்  நகரங்களுக்குள் 400 கி.மீ தூரமும் , நெடுஞ்சாலைகளில் 500 கி.மீ தூரமும் இந்த கார்கள் பயணிக்கும் என தெரிவித்தார். 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
மு. க. ஸ்டாலின்
புதிய கார்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Upcoming Cars | கார் வாங்க பிளானா? அடுத்த 2 வருஷத்துல வரப்போற இந்த 5 காம்பேக்ட் SUV-க்களைப் பாருங்க!
Recommended image2
Upcoming Cars: கார் வாங்க பிளானா? அடுத்த 2 வருஷத்துல வரப்போற இந்த 5 காம்பேக்ட் SUV-க்களைப் பாருங்க!
Recommended image3
Nissan Magnite: ரிச் லுக் தரும் புது கலரில் வந்த நிஸான் மேக்னைட்... விலை எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved