MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • காரில் அதிக லக்கேஜ் எடுத்துட்டு போறீங்களா? பூட் ஸ்பேஸ் பற்றி நல்லா தெரிஞ்சுக்கோங்க?

காரில் அதிக லக்கேஜ் எடுத்துட்டு போறீங்களா? பூட் ஸ்பேஸ் பற்றி நல்லா தெரிஞ்சுக்கோங்க?

புதிய கார் வாங்குபவர்கள் தங்கள் காரில் அதிக பூட் ஸ்பேஸ் (Boot Space) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக குடும்பத் தேவைக்காக வாங்கப்படும் கார்களில், பெரிய பூட் ஸ்பேஸ் இருந்தால் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் காரில் இருக்கும் பூட் ஸ்பேஸை எப்படி திறம்பட பயன்படுத்துவது என்று பலருக்குத் தெரிவதில்லை.

2 Min read
Author : SG Balan
| Updated : Sep 14 2024, 09:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
What is Boot Space?

What is Boot Space?

கார் வாங்கிய பிறகு, பலர் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்கிறார்கள். நீண்ட தூரம் பயணிக்கும்போது கூடுதல் பொருட்களை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இருக்கும். பொருட்களை பத்திரமாக வைக்கும் அளவுக்கு இடமும் அதிகமாக தேவைப்படும். இதற்காகவே புதிய கார் வாங்கும்போது பூட் ஸ்பேஸ் எவ்வளவு  என்று பார்க்கிறார்கள்.

அதிக பூட் ஸ்பேஸ் உள்ள கார்களில் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறார்கள். பூட் ஸ்பேஸ் குறைவாக இருந்தால், லக்கேஜ்களைக் குறைவாகவே எடுத்துச் செல்ல முடியும் என்ற என்ற கருத்தும் பலரிடையே உள்ளது. குறிப்பாக சிஎன்ஜி கார்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை குறைந்த பூட் ஸ்பேஸ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
How to use Boot Space?

How to use Boot Space?

சிஎன்ஜி கார்களில், சிஎன்ஜி சிலிண்டர் காரின் பூட் ஸ்பேஸ் பகுதியில் அமைந்திருப்பதால், அங்கு பொருட்களை சேமித்து வைக்க போதுமான இடம் இல்லை. இதன் காரணமாக அந்தந்த கார்களில் பூட் ஸ்பேஸ் குறைவாக உள்ளது. ஆனால் காரின் பின்பகுதியை திறம்பட பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொண்டால், குறைந்த இடத்தில் அதிக லக்கேஜை எடுத்துச் செல்லலாம்.

ஒரு காரின் பூட் ஸ்பேஸ் கொள்ளளவை கார் தயாரிப்பாளர்கள் லிட்டர்களில் குறிப்பிடுகிறார்கள். 400 லிட்டர்கள், 450 லிட்டர்கள், 500 லிட்டர்கள் என வெவ்வெஏறு அளவுகளில் பூட் ஸ்பேஸ் இருக்க்கும். சில கார்களில் 600 லிட்டர்கள் அளவுக்கும் பூட் ஸ்பேஸ் இருக்கும்.

34
Boot Space in Cars

Boot Space in Cars

பூட் ஸ்பேஸ் கொள்ளளவு எத்தனை லிட்டர் என்பதை வைத்து வாகனத்தில் எவ்வளவு சாமான்களை எடுத்துச் செல்ல முடியும் என்று கணக்கலாம். காரின் பூட் ஸ்பேஸில் லக்கேஜை வைக்கும்போது, ​​பின் கதவு கண்ணாடியின் கீழ் உயரம் வரை அல்லது பின் இருக்கையின் உயரம் வரை லக்கேஜை நிரப்பலாம்.

இந்த உயரத்திற்கு மேல் காரில் லக்கேஜை நிரப்பக் கூடாது. அவ்வாறு அடைத்து வைக்கும்போது பின்புறக் கண்ணாடி மூலம் கிடைக்கும் வியூ சரியாக இருக்காது. இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் லக்கேஜ் இருக்கைக்கு மேல் அல்லது பின்புற கண்ணாடியைவிட உயரமாக இருக்கக் கூடாது.

44
Boot Space for luggage

Boot Space for luggage

லக்கேஜை பின் இருக்கைகளுக்கு பின்னால் வைப்பது ரியர் வியூ கண்ணாடியை மறைப்பது மட்டுமின்றி, கார் வேகமாகச் செல்லும்போது பொருட்கள் இருக்கையில் விழுந்து பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும். இதைத் தவிர்க்கவும் லக்கேஜ்களை அளவுக்கு அதிகமாகத் தணிக்கக் கூடாது என்று வாகன உற்பத்தியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். பலருக்கு இதைப்பற்றி சரியான புரிதல் இல்லை.

எனவே, காரில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது, ​​லக்கேஜை காரின் பூட் ஸ்பேஸில் மட்டுமே வைக்க வேண்டும். எவ்வளவு பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு மேல் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அதிக லக்கேஜ் ஏற்றிச் செல்வது ஆபத்தை விளைவிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
டூயல் சேனல் ABS, ரைடிங் மோடுகள், கூகுள் மேப்ஸ்... புத்தம் புதிய என்ஜினுடன் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'பல்சர் 220F'!
Recommended image2
Diwali Car Offers: ரூ.4.99 லட்சம் முதல் கார்கள்! தீபாவளி சிறப்புச் சலுகையில் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள்
Recommended image3
Best Selling Bikes: 6 மாதங்களில் 21 லட்சம் பைக்குகள் விற்பனை! இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்ட பைக் எது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved