MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • சிஎன்ஜி காரில் பெட்ரோல் போட்டா மைலேஜ் உயருமா ? கார் உரிமையாளர்கள் அறியாத ரகசியம்

சிஎன்ஜி காரில் பெட்ரோல் போட்டா மைலேஜ் உயருமா ? கார் உரிமையாளர்கள் அறியாத ரகசியம்

சிஎன்ஜி கார்கள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் இயங்கும் திறன் கொண்டவை. சிஎன்ஜி கார் வைத்திருக்கும் பலருக்கும் பெட்ரோல் பயன்படுத்துவது மைலேஜை அதிகரிக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 03 2026, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சிஎன்ஜி கார் மைலேஜ்
Image Credit : maruti suzuki

சிஎன்ஜி கார் மைலேஜ்

சிஎன்ஜி கார் வைத்திருக்கும் பலருக்கும் அடிக்கடி எழும் சந்தேகம் ஒன்று உண்டு. "சிஎன்ஜி காரில் பெட்ரோல் போட்டால் மைலேஜ் அதிகரிக்குமா, அல்லது குறையுமா?" என்பதே அந்த கேள்வி. இதற்கு தெளிவான பதிலை எளிய மொழியில் புரிந்து கொண்டால், கார் பயன்பாடு பற்றிய குழப்பம் தீரும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சிஎன்ஜி கார் பெட்ரோல்
Image Credit : tata

சிஎன்ஜி கார் பெட்ரோல்

பொதுவாக ஃபேக்டரி-ஃபிட்டட் சிஎன்ஜி கார்கள் டூயல் ஃபியூயல் சிஸ்டம் கொண்டவை. அதாவது, ஒரே கார் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயங்கும். காரில் உள்ள சிஸ்டம் தேவைக்கேற்ப எரிபொருளை தேர்வு செய்து இயங்கும். சில நேரங்களில் டிரைவர் விருப்பப்படி மோடையும் மாற்றிக்கொள்ளலாம்.

Related Articles

Related image1
அடிமட்ட ரேட்டில் அதிக மைலேஜ் கொடுக்கும் புதிய ஹோண்டா பைக்.. விலை இவ்வளவுதானா!
Related image2
ஒரே மாதத்தில் 1.5 லட்சம் கார்கள் விற்பனை.. ஜனவரியில் ஹிட் அடித்த கார் எது தெரியுமா?
35
டூயல் ஃபியூயல் கார்
Image Credit : maruti suzuki

டூயல் ஃபியூயல் கார்

பெட்ரோல் பயன்படுத்தும் போது காரின் ஸ்டார்ட் மென்மையாக இருக்கும். குறிப்பாக குளிர் காலையிலோ, நீண்ட நேரம் கார் நிறுத்தி வைத்த பிறகோ, பெட்ரோலில் ஸ்டார்ட் செய்வது இன்ஜினுக்கு நல்லது. இதனால் இன்ஜினுக்கு தேவையான லூப்ரிகேஷன் கிடைக்கிறது. இன்ஜின் பாகங்கள் சீராக இயங்க உதவுவதால், நீண்ட காலத்தில் இன்ஜின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

45
கார் மைலேஜ் டிப்ஸ்
Image Credit : maruti

கார் மைலேஜ் டிப்ஸ்

ஆனால் மைலேஜ் விஷயத்தில் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சிஎன்ஜி மோடில் கார் ஓட்டினால், சிஎன்ஜிக்கான மைலேஜ் தான் கிடைக்கும். பெட்ரோல் பயன்படுத்துவதால் சிஎன்ஜி மைலேஜ் தானாக அதிகரிக்காது. உண்மையில், பெட்ரோலில் ஓட்டினால் சிஎன்ஜியை விட மைலேஜ் குறைவாகவே இருக்கும். அதே நேரத்தில் பவர் மற்றும் பிக்கப் அதிகமாக உணரப்படும் என்றும் கூறுகின்றனர்.

55
சிஎன்ஜி கார் பராமரிப்பு
Image Credit : maruti suzuki

சிஎன்ஜி கார் பராமரிப்பு

இன்னொரு முக்கியமான விஷயம், டேங்கில் எப்போதும் சிறிதளவு பெட்ரோல் வைத்திருப்பது அவசியம். நீண்ட நாட்கள் பெட்ரோல் இல்லாமல் ஓட்டினால், ஃபியூயல் பம்ப் மற்றும் இன்ஜெக்டர் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே செலவு குறைக்க சிஎன்ஜியை பயன்படுத்தினாலும், காரின் ஆரோக்கியத்திற்காக பெட்ரோலையும் சரியான அளவில் பயன்படுத்துவது நல்லது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிஎன்ஜி கார்கள்
பெட்ரோல் கார்கள்
வாகனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
E20 Petrol: இவ்வளவு நன்மைகளா? வண்டி வெச்சிருக்கவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்!
Recommended image2
E20 Petrol : '100% பெட்ரோல் வேண்டும்!' E20 பெட்ரோலுக்கு எதிராக புதிய 'Janta Party'! சர்ச்சையின் பின்னணி என்ன?
Recommended image3
Budget Cars: மைலேஜும் செம... பாதுகாப்பும் மாஸ்! பட்ஜெட் விலையில் டாப் 5 கார்கள் லிஸ்ட் இதோ!
Related Stories
Recommended image1
அடிமட்ட ரேட்டில் அதிக மைலேஜ் கொடுக்கும் புதிய ஹோண்டா பைக்.. விலை இவ்வளவுதானா!
Recommended image2
ஒரே மாதத்தில் 1.5 லட்சம் கார்கள் விற்பனை.. ஜனவரியில் ஹிட் அடித்த கார் எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved