ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலை.. அதிக மைலேஜ் தரும் சிறந்த கார்கள் பட்டியல்
இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட் கார்களுக்கு (Cheapest Cars) அதிக தேவை உள்ளது. இந்த பிரிவில் மாருதி , டாடா மற்றும் ரெனால்ட் ஆகியவை முன்னணி நிறுவனங்களாக திகழ்கின்றன.

ரூ.5 லட்சம் கார்கள்
இந்தியாவில் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மலிவான விலையில் கார்கள் தேவை அதிகம். குறிப்பாக, ரூ.5 லட்சம் வரை உள்ள பட்ஜெட்டில் நம்பகமான, மைலேஜ் அதிகமான, பராமரிப்பு செலவு குறைவான கார்கள் வாங்க விரும்புகிறார்கள். தற்போது மாருதி, ரெனால்ட், டாடா போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த பிரிவில் பல மாடல்களை வழங்கி வருகின்றன.
மாருதி ஆல்டோ K10
மாருதி ஆல்டோ K10, இந்த விலை வரம்பில் மிகவும் பிரபலமான மாடல். 1.0 லிட்டர் இன்ஜின் கொண்ட இந்த கார், சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு காரணமாக குடும்பங்களின் முதல் தேர்வாக உள்ளது. எளிமையான டிசைன் மற்றும் வசதியான உள்ளமைப்பு இதன் பலம் ஆகும்.
டாடா டியாகோ
டாடா டியாகோ, பாதுகாப்பில் சிறந்த மதிப்பீடு பெற்ற கார். ரூ.5 லட்சம் சுற்றி விலை கொண்ட இந்த மாடல், குடும்பங்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது. ஸ்டைலிஷ் டிசைன், பில்ட் குவாலிட்டி மற்றும் அதிக வசதிகள் காரணமாக டியாகோ, பட்ஜெட் பிரிவில் சிறந்த போட்டியாளராக உள்ளது.
ரெனால்ட் க்விட்
ரெனால்ட் க்விட், மலிவான விலையில் SUV போன்ற டிசைனுடன் வரும் கார். ரூ.4.70 லட்சம் வரை விலை கொண்ட இந்த மாடல், ஸ்டைலிஷ் தோற்றத்துடன் கூடிய தொழில்நுட்ப வசதிகளை வழங்குகிறது. இதன் தரமான உள்ளமைப்பு மற்றும் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், நகரப்பயணத்துக்கும் ஹைவேக்கும் ஏற்றதாக உள்ளது.