MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Tata : கம்மி விலையில் 360 டிகிரி கேமரா உடன் கிடைக்கும் டாப் 3 சீப் அண்ட் பெஸ்ட் டாடா கார்கள்

Tata : கம்மி விலையில் 360 டிகிரி கேமரா உடன் கிடைக்கும் டாப் 3 சீப் அண்ட் பெஸ்ட் டாடா கார்கள்

Tata Cars : 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்ல 360 டிகிரி கேமரா வசதியோட ஒரு டாடா கார் வாங்கணுமா? அப்போ இந்த மூணு டாடா கார்கள் தான் உங்களுக்கு சரியான சாய்ஸ்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 22 2026, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பட்ஜெட் விலையில் 360° கேமராவுடன் டாடா டியாகோ!
Image Credit : Tata Motors

பட்ஜெட் விலையில் 360° கேமராவுடன் டாடா டியாகோ!

முன்னெல்லாம் 360-டிகிரி கேமரானா அது ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ மாதிரி பெரிய சொகுசு கார்கள்ல மட்டும்தான் இருக்கும். ஆனா இப்போ காலம் மாறிடுச்சு. நம்ம பட்ஜெட் கார்கள்லயே இந்த வசதி கிடைக்குது. 10 லட்ச ரூபாய் பட்ஜெட்ல 360-டிகிரி கேமரா இருக்கிற டாடா கார் தேடுறீங்கன்னா, உங்களுக்கு டியாகோ, பஞ்ச், அல்ட்ராஸ்னு மூணு ஆப்ஷன்ஸ் இருக்கு. இந்த லிஸ்ட்ல டாடா டியாகோ 2026 மாடல் தான் குறைஞ்ச விலை கார். இதன் கிரியேட்டிவ் வேரியன்ட்ல 360-டிகிரி கேமரா இருக்கு. பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் விலை ரூ.8.24 லட்சம், பெட்ரோல் ஏ.எம்.டி விலை ரூ.8.87 லட்சம், சிஎன்ஜி மேனுவல் விலை ரூ.9.14 லட்சம், சிஎன்ஜி ஏ.எம்.டி ஆன்-ரோடு விலை ரூ.9.79 லட்சம். குறைஞ்ச பட்ஜெட்ல இந்த வசதி வேணும்னு நினைக்கிறவங்களுக்கு டியாகோ ஒரு நல்ல சாய்ஸ்.

Affordable Automatic Cars: லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள்.. ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் லிஸ்ட்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டாடா பஞ்ச்
Image Credit : Asianet News

டாடா பஞ்ச்

டாடாவின் பாப்புலர் காம்பேக்ட் எஸ்யூவி பஞ்ச்-லயும் 360-டிகிரி கேமரா வசதி இருக்கு. இதன் அட்வென்ச்சர் வேரியன்ட்ல இருந்து இந்த ஃபீச்சர் கிடைக்குது. பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் விலை ரூ.9.04 லட்சம், பெட்ரோல் ஏ.எம்.டி விலை ரூ.9.72 லட்சம், சிஎன்ஜி மேனுவல் விலை ரூ.9.97 லட்சம், டர்போ பெட்ரோல் 6-ஸ்பீடு மேனுவல் ஆன்-ரோடு விலை ரூ.9.88 லட்சம். ஆனா, சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் வேரியன்ட் விலை ரூ.10.59 லட்சம். அதனால் அது 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டை தாண்டிடும்.

Related Articles

Related image1
Tata Car Offers: ரூ.2.25 லட்சம் வரை சலுகை.. டாடா கார் வாங்க சரியான சான்ஸ்.. ஆகஸ்ட் மாத சிறப்பு அறிவிப்பு
Related image2
Tata Nexon Offer: ரூ.75,000 வரை ஆஃபர்.. டாடா நெக்ஸான் எஸ்யூவி வாங்க சூப்பர் சான்ஸ்!
35
டாடா அல்ட்ராஸ்
Image Credit : Asianet News

டாடா அல்ட்ராஸ்

360-டிகிரி கேமரா வசதியுடன் கிடைக்கும் இன்னொரு டாடா மாடல் அல்ட்ராஸ். இதன் கிரியேட்டிவ் வேரியன்ட்ல இந்த வசதி இருக்கு. பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்டோட ஆன்-ரோடு விலை ரூ.9.48 லட்சம். இது 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டுக்குள்ள அடங்கிடும். ஆனா, பெட்ரோல் ஆட்டோமேட்டிக் விலை ரூ.10.11 லட்சம், சிஎன்ஜி மேனுவல் விலை ரூ.10.35 லட்சம், சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் விலை ரூ.10.96 லட்சம். இதெல்லாம் பட்ஜெட்டை தாண்டிடும். உங்களுக்கு டீசல் இன்ஜின்ல 360-டிகிரி கேமரா வேணும்னா, கிரியேட்டிவ் எஸ் டீசல் மேனுவல் வேரியன்ட்டை தேர்ந்தெடுக்கலாம். அதன் ஆன்-ரோடு விலை சுமார் ரூ.11.34 லட்சம். இங்கே கொடுக்கப்பட்ட எல்லா விலைகளும் மும்பை ஆன்-ரோடு விலைகள்.

45
விரைவில் 540° கேமரா
Image Credit : Asianet News

விரைவில் 540° கேமரா

டாடா நிறுவனம் சீக்கிரமே சஃபாரி எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த இருக்கு. இதுல இன்னும் அட்வான்ஸ்டு கேமரா சிஸ்டம்ஸ் இருக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது. தீபாவளி சமயத்துல இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மார்க்கெட்டுக்கு வர வாய்ப்பு இருக்கு. நிறுவனத்தோட ஆக்டி ஈவி ப்ளஸ் பிளாட்ஃபார்ம் அடிப்படையில இதை உருவாக்குறாங்க.

55
டாடாவின் புதிய டைடல் எலக்ட்ரானிக் ஆர்க்கிடெக்சர்!
Image Credit : Asianet News

டாடாவின் புதிய டைடல் எலக்ட்ரானிக் ஆர்க்கிடெக்சர்!

இதில் டாடாவின் புதிய டைடல் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் ஆர்க்கிடெக்சரும் இருக்கும். இந்த சிஸ்டம் 540-டிகிரி கேமரா, ஓவர்-தி-ஏர் அப்டேட்கள், அடாஸ், கனெக்டட் கார் அம்சங்களை சப்போர்ட் செய்யும். ஹாரியர் ஈவி-யில் இருக்கும் அதே பவர்டிரெய்னை சஃபாரி ஈவி-யிலும் எதிர்பார்க்கலாம். ஹாரியர் ஈவி-யில் 65 கிலோவாட், 75 கிலோவாட் பேட்டரி ஆப்ஷன்கள் இருக்கு. அதனால் சஃபாரி ஈவி-யிலும் பெரிய பேட்டரி பேக், நல்ல டிரைவிங் ரேஞ்ச் கிடைக்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாடா கார்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் தொடங்கியது கார் பந்தயத்தின் புதிய அத்தியாயம்! 2026 தேசிய சாம்பியன்ஷிப் களம் ரெடி!
Recommended image2
Bike Toll Fee: காருக்கு டோல்… பைக்குக்கு நோ டோல்! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?
Recommended image3
Maruti S-Presso: ரூ.3.49 லட்சம் விலை, 32 கி.மீ. மைலேஜ் இருந்தும் வாங்க ஆள் இல்லை
Related Stories
Recommended image1
Tata Car Offers: ரூ.2.25 லட்சம் வரை சலுகை.. டாடா கார் வாங்க சரியான சான்ஸ்.. ஆகஸ்ட் மாத சிறப்பு அறிவிப்பு
Recommended image2
Tata Nexon Offer: ரூ.75,000 வரை ஆஃபர்.. டாடா நெக்ஸான் எஸ்யூவி வாங்க சூப்பர் சான்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved