CAR Travel guide: பயணங்களில் வாந்தி! இதெல்லாம் பெரிய மேட்டரே கிடையாது!
மோஷன் சிக்னஸ் பிரச்னையால் பயணங்களில் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதற்கான காரணங்களையும், அதைத் தடுப்பதற்கான எளிய வழிகளையும் பார்ப்போம். உணவு முறைகள், பயண நடைமுறைகள், மனநிலை கட்டுப்பாடு போன்றவற்றின் மூலம் பயணத்தை சிறப்பாக்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
பயணம் எனும் சந்தோஷ நிகழ்வு
குடும்பத்துடன் காரில் அல்லது பஸில் பயணம் செய்வது நிறைய மகிழ்ச்சியை தரும். ஆனாலும் சிலருக்கு மட்டும் “மோஷன் சிக்னஸ்” பிரச்னை ஏற்பட்டு வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்றவற்றால் பயண அனுபவமே பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் உடல் இயக்கத்தைப் பற்றிய மாறுபட்ட தகவல்கள் மூளைக்கு செல்லும் விதம். கண்கள் “நாம் நகர்கிறோம்” என்று தெரிவிக்க, உடல் பகுதி “நாம் அமர்ந்திருக்கிறோம்” என்ற தகவலை அனுப்புகிறது. இந்தக் குழப்பத்தால் வாந்தி போன்றவை ஏற்படும்.
சின்ன விஷயம் பெரிய பலன்
இதற்கு தீர்வாக சில எளிய முறைகள் உள்ளன. முதலில், பின்சீட்டில் அமராமல் முன்சீட்டில் உட்காருங்கள். காரின் முன்பக்கம் வழியாக தூரத்தைக் கவனிக்கவும். பக்க கண்ணாடி வழியாக வெளியே பார்க்க வேண்டாம். இதனால் உடலின் சமநிலை சரியாகும். மூளை குழப்பம் அடையாமல் பயணத்தை சுலபமாக அனுபவிக்க முடியும்.
பயணத்தில் பட்டினி வேண்டாம்
பலர் வெறும் வயிற்றில் பயணிக்கிறார். இது தவறு. பயணத்திற்கு முன் சிறிது உணவு உட்கொள்ளுங்கள். முழுமையாக அடைத்துக் கொள்ளவும் கூடாது. பயணத்திற்கு முன் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை கலந்து மோரை குடிக்கலாம். இது வாந்தியை கட்டுப்படுத்த உதவும். பயணத்தின் போது எலுமிச்சை, நார்த்தங்காய் துண்டை வாயில் வைத்துக் கொள்ளலாம். இதனால் வயிறு உற்சாகமாக இருக்கும்.
மூச்சு பயிற்சி பயன் அளிக்கும்
கார் அல்லது வேனில் செல்லும்போது, இடையே வாகனத்தை நிறுத்தி, வெளியில் நின்று ஆழமாக மூச்சு இழுக்கவும். இந்த சற்றே விரிவான சுவாசம் மூளையையும் உடலையும் சீராக வைத்திருக்கும். ஜன்னலை திறந்து காற்று வரச் செய்யுங்கள். காற்று சுழற்சி நல்லது என்றால் வாந்தி உணர்வு குறையும்.
சிந்தனையை மாற்றவும்
சிலர் பயணமென்றாலே “வாந்தி வந்திடுமே” என்று மனத்தில் நினைத்துக் கொண்டு பயணம் செய்கிறார்கள். இது பிரச்சினையை அதிகரிக்கும். பதற்றம் தவிர்த்து, மனதை வேறு எதிலாவது ஈடுபடுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த பாட்டை கேட்கலாம் அல்லது தூங்க முயற்சிக்கலாம்.
பிரத்யேக ஆடை இருக்கே!
வாந்தி உணர்வு அதிகமாக இருந்தால் கடைகளில் கிடைக்கும் மோஷன் சிக்னஸ் பேண்ட் அணிந்து பயணம் செய்யலாம்.இஞ்சி மிட்டாயை வாயில் வைத்துக் கொள்வது, இரண்டு கடலை மிட்டாய் பர்பி சாப்பிடுவது உமிழ்நீரை அதிகரித்து வாந்தியை கட்டுப்படுத்த உதவும்.
சிம்பிள் மேட்டர்தான் டோண்ட் வொரி
கட்டாயமாக, மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரைகளை பயணத்திற்கு முன் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவை தூக்கம் வரவைக்கும் என்பதால் முன்னமே எச்சரிக்கையாக இருக்கவும். பயணங்களில் வாந்தி வருவது சகஜம். அதை ஓரிரு முயற்சிகளால் தடுக்க முடியும் என்பதையும் மனதில் வையுங்கள். பயணம் ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அதில் இந்த சின்ன பிரச்சினை இடையூறாகாது என நம்பலாம்.