விலையோ கம்மி.. மைலேஜோ அதிகம்.. இந்தியாவின் டாப் 125cc பைக்குகள் லிஸ்ட் இதோ
இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த 125cc பைக்குகள், ஸ்டைல், மைலேஜ் மற்றும் பவர் ஆகியவற்றின் சரியான கலவையை வழங்குகின்றன. முன்னணி மாடல்களின் அம்சங்கள் மற்றும் விலைகளை பார்க்கலாம்.

125cc பைக்குகள்
இந்தியாவில் 125cc செக்மெண்ட் என்றால் மைலேஜும், பவரும் சமநிலையாக கிடைக்கும் வகை என்றே கூறலாம். தினசரி பயணத்துக்கும் சிறிய அதிரடியான ரைடிங்குக்கும் ஏற்ற இந்த வகை பைக்குகள் இப்போது ரூ.1 லட்சத்துக்குள் கிடைக்கும். 11–12 bhp வரை பவர், ஸ்போர்ட்டி லுக், நவீன அம்சங்கள் என அனைத்தும் சேர்ந்து இவை இளம் தலைமுறைக்கு பிடித்த மாடல்களாக மாறியுள்ளன.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர்
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R என்பது இந்த பிரிவில் சிறந்த ஸ்டைலிஷ் பைக்குகளில் ஒன்று. 125cc என்ஜின் 11.4hp பவரும், 10.5Nm டார்க்கும் வழங்குகிறது. விலை சுமார் ரூ.89,000 (எக்ஸ்-ஷோரூம்). ஆக்கிரமமான டிசைன், சிறந்த ரைடிங் கம்பர்ட், மைலேஜ் ஆகியவை இளம் ரைடர்களுக்கான பர்ஃபெக்ட் பைக்காக இதை ஆக்குகிறது.
ஹோண்டா எஸ்பி 125
ஹோண்டா SP 125 தினசரி பயணத்துக்கு ஏற்ற, மைலேஜ் மாஸ்டர். 123.94cc என்ஜினுடன் 10.72hp பவர் வழங்குகிறது. விலை ரூ.85,815 (எக்ஸ்-ஷோரூம்). சுமார் 63 கிமீ/லி மைலேஜ் வழங்கும் இந்த பைக், நம்பகமான ஹோண்டா தரத்துடன் எளிமையான பராமரிப்பு செலவையும் தருகிறது.
பஜாஜ் பல்சர் 125 & N125
பஜாஜ் புல்சர் 125 என்பது புல்சர் டிஎன்ஏ கொண்ட சிறிய ஆனால் ஸ்போர்ட்டி பைக். ரூ.79,048 விலையில், 124.4cc என்ஜின் 11.63hp பவர் வழங்குகிறது. அதேசமயம் புதிய தலைமுறை Pulsar N125, 124.59cc என்ஜின் மூலம் 11.83hp பவரை வழங்குகிறது. ஸ்டைலிஷ் LED ஹெட்லைட், டிஜிட்டல்-அனலாக் மீட்டர், தீவிரமான டிசைன் ஆகியவை இதை மாற்றுகின்றன. விலை ரூ.91,692 (எக்ஸ்-ஷோரூம்).
டிவிஎஸ் ரைடர் 125
TVS நிறுவனத்தின் Raider 125 தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 124.8cc என்ஜின் 11.22hp பவர், 11.75Nm டார்க் வழங்குகிறது. ரூ.80,500 விலையில் தொடங்கும் இந்த பைக், ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர், அருமையான சஸ்பென்ஷன், கம்பர்டபிள் ரைடிங் என அனைத்திலும் சிறந்தது. மொத்தத்தில், ரூ.1 லட்சத்திற்குள் சிறந்த 125cc பைக் தேடுபவர்களுக்கு Hero Xtreme 125R, TVS Raider, Honda SP 125, Bajaj Pulsar 125, மற்றும் N125 ஆகியவை சிறந்த தேர்வுகள் ஆகும்.