ஜிஎஸ்டி 2.0 பிறகு ஃபார்ச்சூனர் விலையில் பெரிய தள்ளுபடி - உடனே புக் பண்ணுங்க
சக்திவாய்ந்த எஞ்சின், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் ஃபார்ச்சூனர் பிரீமியம் எஸ்யூவி பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.

ஃபார்ச்சூனர் ஜிஎஸ்டி 2.0
ஜப்பானின் முன்னணி வாகன நிறுவனம் டொயோட்டா, தனது பிரபல எஸ்யூவி மாதலான ஃபார்ச்சூனரின் விலையில் பெரிய குறைப்பை தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி 2.0 விதிமுறைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஃபார்ச்சூனரின் விலை அதிகபட்சம் ரூ.3.49 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. பிரீமியம் எஸ்யூவி வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
ஃபார்ச்சூனர் புதிய விலை
டொயோட்டா ஃபார்ச்சூனரின் முக்கிய சிறப்பு அம்சங்களில் ஒன்று சக்திவாய்ந்த எஞ்சின் விருப்பங்களாகும். 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 186 bhp பவர் மற்றும் 245 Nm டார்க்கை வழங்குகிறது. அதேசமயம், 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் 204 bhp பவரையும் 500 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. வாடிக்கையாளர்களுக்காக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இரண்டும் வழங்கப்படுகின்றன.
ப்ரீமியம் கார் விலை குறைவு
பாதுகாப்பு மற்றும் வசதிகளில் ஃபார்ச்சூனர் எப்போதும் முன்னிலை வகிக்கிறது. 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிலே, 18 இன்ச் அலாய் வீல்கள், 360-டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் இதில் உள்ளன. முக்கியமாக, 7 ஏர்பேக்குகள் மற்றும் வாகன ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு (VSC) மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை
ஜிஎஸ்டி கவுன்சில், 2025 செப்டம்பர் 22 முதல் புதிய வரி விகிதங்களை அமல்படுத்துகிறது. இந்நிலையில், 1,200 சிசிக்குக் கீழான பெட்ரோல் மற்றும் 1,500 சிசிவரை டீசல் எஞ்சின் கொண்ட 4 மீட்டர் நீளத்துக்கு குறைவான வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி மட்டும் விதிக்கப்படும். அதற்கு முன்பு 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. ஆனால் ஆடம்பர வாகனங்களுக்கு முந்தையபடி அதிக வரியே தொடரும்.