ரூ.4.5 லட்சம் தள்ளுபடியா? ஃபோக்ஸ்வேகன் இப்படி செய்யும்னு யாரும் நினைக்கல!
ஃபோக்ஸ்வேகன் இந்தியா தனது பிரபல மாடல்களான டைகுன், விர்டஸ் மற்றும் டிகுவான் ஆர்-லைன் கார்களுக்கு ஜனவரி மாதத்தில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதில் ரொக்கத் தள்ளுபடி, லாயல்டி போனஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் அடங்கும்.

ஃபோக்ஸ்வேகன் தள்ளுபடி
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த நேரமாக பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப்கள் தற்போது பெரிய அளவிலான தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. Taigun SUV, Virtus Chedan மற்றும் Tiguan R-Line போன்ற பிரபல மாடல்களில், மாடல் மற்றும் வேரியண்ட் அடிப்படையில் ரூ.4.5 லட்சம் வரை நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமீப காலங்களில் ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ள மிகப் பெரிய சலுகை திட்டங்களில் இதுவும் ஒன்று.
ஜனவரி கார் சலுகை
இந்த தள்ளுபடி திட்டத்தின் மையமாக ஃபோக்ஸ்வேகன் Taigun உள்ளது. காம்பாக்ட் SUV பிரிவில் முக்கிய இடம் பிடித்துள்ள இந்த காருக்கு, ரொக்க தள்ளுபடி, லாயல்டி போனஸ் மற்றும் எக்சேஞ்ச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான வேரியண்ட்களில் ரூ.20,000 லாயல்டி போனஸும், ரூ.30,000 வரை எக்சேஞ்ச் போனஸும் கிடைக்கிறது. கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.40,000 வரை சலுகை உள்ளது. இதனை சேர்த்து பார்க்கும்போது, GT Plus DSG வேரியண்ட் மீது மட்டும் சுமார் ரூ.2.9 லட்சம் வரை சேமிக்கலாம். மற்ற GT Plus மற்றும் Topline வேரியண்ட்களிலும் ரூ.2.4 லட்சம் அளவிலான நன்மைகள் கிடைக்கின்றன.
செடான் கார் சலுகை
செடான் பிரிவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் Virtus காருக்கும் இந்த மாதம் கனிசமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. வேரியண்ட் அடிப்படையில், இந்த காரில் ரூ.1.8 லட்சம் வரை சேமிப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக Highline, Topline மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் அதிகமான ரொக்க தள்ளுபடி வழங்கப்படுவதால், பர்ஃபார்மன்ஸ் மற்றும் வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு Virtus ஒரு நல்ல தேர்வாக மாறுகிறது.
ரூ.50,000 எக்சேஞ்ச் போனஸ்
இந்த பட்டியலில் அதிகபட்ச தள்ளுபடியை பெறுவது Tiguan R-Line மாடல்தான். ஜனவரி 2026க்காக, இந்த பிரீமியம் SUV-க்கு ரூ.3.5 லட்சம் நேரடி ரொக்க தள்ளுபடி, அதோடு ரூ.50,000 லாயல்டி போனஸ் மற்றும் ரூ.50,000 எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இதனால் மொத்தமாக ரூ.4.5 லட்சம் வரை சேமிக்க முடியும். இருப்பினும், இந்த சலுகைகள் நகரம் மற்றும் டீலர்ஷிப் அடிப்படையில் மாறுபடும் என்பதால், வாங்கும் முன் அருகிலுள்ள ஃபோக்ஸ்வேகன் டீலரிடம் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

